அமைதியை
வலியுறுத்திய
அவர்களின்
பேச்சுக்களில்
காது
பிளக்கிறது.

---

அப்பொழுதெல்லாம்
கடலாக
இருந்த ஆறு
இப்பொழுது இல்லை
குளமாகக் கூட

---

இயங்கவிடாமல்
இழுத்துப்
பிடித்து
நிறுத்தி விட்டேன்
இரண்டு நாட்களை
வீட்டுக் காலண்டரில்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It