பொருத்தம்
பத்து
பத்தியும்
பத்தாத ஊதியத்தில்
உடைந்தன மனங்கள்.

----

தெருக்களிலெல்லாம்
கான்கிரீட்
அடித்துச் செருகப்பட
மழை வந்தால் வரும்
மண் வாடைக்குப் பதிலாய்
சாக்கடை வாடையும்
மூத்திர வாடையும்.

----

பேச
வாசல் வந்தவனை
பிஸியென அனுப்பிவிட்டு
இணையத்தை ஆய்கிறேன்
எவனிடமோ பேச

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It