அவசரத்தேவை
வேறு
வழியேயில்லை.
தேடிச் சென்ற
நண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..
உறவுகள்
உதட்டைப்
பிதுக்க..
பழகிய சில
இடங்களில்
'பழைய பாக்கியே
இன்னும்..' என
இழுக்க..
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி
அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்' எனத்
தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே
மனசு..
கைமாத்தாகக்
கவிதையாவது
கிடைத்ததே என்று.
- ராமலக்ஷ்மி, பெங்களூர்
கைமாத்து
- விவரங்கள்
- ராமலக்ஷ்மி
- பிரிவு: கவிதைகள்
More articles by ராமலக்ஷ்மி
- அறச் சீற்றம் (14 ஏப் 2025)
- உப்பு நீர் (16 ஆக 2023)
- தேரி - ராஜேஷ் வைரபாண்டியனின் நாவல் - ஒரு பார்வை (08 மே 2023)
- மாமழை (02 மே 2023)
- க. அம்சப்ரியாவின் ‘தனிமையில் அலையும் தனிமை’ - ஒரு பார்வை (23 ஜூலை 2020)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.