சிட்டுகுருவியொன்று இரை பொறுக்கிக்கொண்டிருந்தது

திடீரென்ற என் பிரவேசத்தில் பறந்துபோயிற்று

நான் நின்றுகொண்டே இருந்தேன்

 

மீண்டும் வந்தது

ஒரு முறை தானியத்தை கொத்தியது

என்னைப் பார்த்தது

மீண்டும் கொத்தியது

என்னைப் பார்த்தது

சரேலென பறந்துபோனது

நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன்

 

மீண்டும் வந்தது

சில தானியங்களை கொத்தியது

என்னைப் பார்த்தது

சில தானியங்களை கொத்தியது

என்னைப் பார்த்தது

நாங்கள் வேடிக்கைபார்க்க தொடங்கினோம்

எங்கள் வேடிக்கை தொடரும்

நான் வேடிக்கைமட்டும் பார்க்கும்வரை

 

- ஜனா கே

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.