தட்டுப் பட்டு
சிற்பங்களாய் செதுக்கப்படாமல்-
நிழல் கொடுக்கும்
கோயில் மண்டப தூண்களாக
உருப்பெறாது-
ஆற்றோரப் படித்துறைகளிலும்
பதிக்கப்படாது-
இளைப்பாறல்களுக்கு
எழுந்து நிற்கும்
சுமைதாங்கியாய்
முதுகு உயர்த்த தவறி-
சிறு சிறு சல்லியாய்
மழலை விரல்நுனியில்
தவழவும் தவறி-
வீட்டுக் கூரைக்குள்
முடங்கிப் போனது
கற்கள் மட்டும்தானா என்ன?
பெண்மை
More articles by சிந்தா
- துளையிடும் புல்லாங்குழல்கள் (25 ஆக 2016)
- பிரவாகங்கள் (28 டிச 2015)
- வானவில் (29 பிப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.