அடர்ந்த மழையொன்றில்
தன் வழித்தடம் தேடிய
ஆறொன்றால்
மீட்டெடுக்கப் பட்டிருந்தது
மனிதம்..

...

வங்கக் கடலுக்குள்
மூழ்கியிருந்த குப்பைகளுள்
பெருங்குப்பையாக
சாதிய பேதம்..

...

நிலமெங்கும்
சூழ்ந்திருந்த ஈரத்தை
உலர்த்திக் கொண்டிருந்தது
பள்ளிவாசல்களில்
கசிந்திருந்த ஈரம்...

..

இயல்பு வாழ்க்கை
திரும்புவதை எச்சரித்தது
கீழ்த்தரமான பாடலொன்றின்
சர்ச்சை..கள்..

......

இயல்பான வாழ்வின்
பின்னிரவுகளில்
இப்போதெல்லாம்
நாய்கள் குரைப்பதில்லை..
குரைப்பதேயில்லை..

- சிந்தா

Pin It