சட்ட ஒழுங்கை பராமரிக்கச் செல்கிறவர்
தன்னோடு சமாதானமளிக்கும் எந்தச் சொற்களையும் கொண்டுச் செல்லவில்லை.
இறுகிய மௌனத்தையும், வளையாத மிடுக்கையும் கொண்டு செல்கிறார்.
அவர் உதட்டுக்குப் பொருந்தும் புன்னகை கூட தேவைப்படவில்லை.
அவரைப் போலவே சட்ட ஒழுங்கை பராமரிக்கவர்களும் கூடியிருந்தார்கள்.
அவர்களிடம் முகக் கவசங்களும், தடுப்புக் கவசங்களும் இருந்தன.
கூட்டத்தை கலைக்க நீண்ட கழியும்,
குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கிகளும் இருந்தன.
இன்னும் சில கண்ணீர் புகைக் குண்டுகளும், குண்டாந் தடிகளும் தேவைப்பட்டன.
தண்ணீரை வேகமாக பீய்ச்சியடிக்கும் எந்திரவண்டிகள் கொண்டு வரப்பட்டன.
எப்போதும் போல அமைதியற்ற சூழலை உருவாக்குவதாக
மக்கள் மீது தடியடி நடத்தினார்கள்.. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இறந்தவர்கள் பிணவறைக்கும், காயமடைந்தவர்கள்
மருத்துவமனைக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர்.
மக்களில்லாத இடத்தில் சிதறிக் கிடந்த செருப்புகளும் இரத்தத்துளிகளும்
சாட்சிகளாக இருக்கின்றன சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு.
Pin It