தார் சாலையில்,
கல்கண்டு என சிதறி கிடக்கிற,
வாகனத்தின் முகப்பு கண்ணாடி,
விவரிப்பதாய் இருந்தது,
பெரும் விபத்தொன்றை....

வழக்கம் போலவே,
தேய்ந்த சதைக்காய் ஈக்களும்,
நிகழ்ந்ததின்  கதைக்காய்,
மனித கூட்டமும்,
மொய்க்க தொடங்கியிருந்தது... 

நிகழ்வுகளை,
வெவ்வேறு  விதமாய்,
வெவ்வேறு குரல்கள்,
விவரித்ததில்,
உண்மை தேய்ந்து,
உவமை வலுத்திருந்தது...  
காற்றலை கொஞ்சம்,
கனத்திருந்தது...

நசுக்கிய வாகனத்தின் முகப்பில்,
தொங்கி கொண்டிருந்த, 
கரடி பொம்மை....
கடைசி வரை,
சிரித்தபடியிருந்தது...

- பாலச்சந்தர்.செ

Pin It