விந்தணுக்களில் முளைத்து
வீதிதோறும் விளையாடி
பள்ளிகளில் பயின்றதை
பணமாக்க உழைத்து
பெற்ற பிள்ளைகள்
பேரிடம் சேர்த்து
இழந்த உறவுகளுக்காக
இதயம் நொறுங்க அழுது
பழுத்த நாட்களைத்
தனிமையில் கழித்து
பிறந்தது போலவே
இறந்தும் போகிறோம்
எதுவுமில்லாமல்!

- முத்துசாமி பழனியப்பன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.