ஒவ்வொரு வருடமும்...
எந்த மாற்றமும் இல்லாமல்...
நடத்தப்படுகின்றன..
ஊர் திருவிழாக்கள்.
முகத்திலும் முதுகிலுமாய்...
வேல் குத்தியபடி...
அங்குமிங்கும் ஆடும் மனிதர்களை...
மிரண்டு போய் பார்க்கின்றன குழந்தைகள்.
அடிக்கும் உடுக்கையொலி..
கூடக் கூட...
கூச்சல் போட்டபடி..
ஆடத் தொடங்குகின்றனர்..
சில பெண்கள்.
தன் மரணத்திற்குத்தான்
என்று தெரியாமலே
தலையாட்டி
சம்மதம் சொல்கிறது ஆடு...
ஓங்கி இறக்கிய
அரிவாளின் வேகத்தில்...
உடல் விட்டு தனியே...
உருண்டோடுகிறது தலை.
பீய்ச்சியடிக்கும்
இரத்தம் பார்த்ததும்...
பூரண திருப்தியாய்..
கூச்சலிடுகிறது கூட்டம்.
" இதெல்லாம் அவசியம்தானா"...
தயங்கியபடி கேட்கும் என்னிடம்...
"சாமி குத்தமாயிடும்ல..
எல்லாம் அவருக்காகத்தான்.."
என்று அவர்கள் கைகாட்டும் திசையில்....
குலைநடுங்கிப் போய்...
கருவறைக்குள்...
பதுங்கியிருக்கிறார்...
கடவுள்.
- சசிதரன் தேவேந்திரன்
கடவுள்
- விவரங்கள்
- சசிதரன் தேவேந்திரன்
- பிரிவு: கவிதைகள்
More articles by சசிதரன் தேவேந்திரன்
- உங்களுக்கு எப்படி தெரியும்? (19 ஜன 2015)
- வெற்றியின் வாசம் (30 ஜூன் 2010)
- யாதென விளக்கப்படும் காதல் (20 மே 2010)
- யாசித்து பெறாத நாணயம்... (15 ஏப் 2010)
- அந்திமக் காலம் (15 பிப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.