sasikalaசசிகலாவின் அரசியல் விலகலை ஏதோ பெரிய ராஜதந்திரம் போன்றும் புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பது போன்றும் சில லகுடபாண்டிகள் விளக்கம் கொடுத்து வருகின்றார்கள். மக்களின் பணத்தை ஊழல் செய்து ஜெயிலுக்குப் போன ஒரு குற்றவாளியை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அவரை பாஜக பழி வாங்கப் பார்க்கின்றது.

அவருக்கு கொரோனோவை பரப்பி கொல்லப் பார்க்கின்றது என தினுசு தினுசாக யோசித்து எப்படி சொம்படித்தால் எஜமானன் திருப்தி அடைவான் என சிந்தித்து அதற்கு ஏற்றார் போல தனது சிந்தனை முழுவதையும் மாற்றிக் கொண்டு ஒரு விசுவாசமுள்ள நாயாக வாலாட்டி நின்ற அடிமைகள் இன்று சசிகலாவின் அரசியல் விலகலால் அடுத்து யாரின் காலை பிடித்து கதி மோட்சம் அடைவது என தெரியாமல் கண்கலங்கி நிற்கின்றார்கள்.

சசிகலாவின் அரசியல் விலகல் என்பது முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஒரு ஊழல்வாதியின் பிழைப்புவாத நோக்கிலான முடிவாகும். சசிகலா மீது இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதுதான் அவரது இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்கில் 1996 ஆம் ஆண்டு சசிகலா கைது செய்யப்பட்டார். இரண்டு அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்குகளில் இருந்து 2015ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் மூன்று அன்னிய செலாவணி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது 33 வழக்குகளும் அதில் ஜெயலலிதா மீது மட்டும் 12 ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. பார்ப்பன ஜெயலலிதா இறந்துவிட்ட சூழ்நிலையில். சூத்திர சகிகலா மீது நீதித்துறை கருணை காட்டும் என்றும் நிச்சயம் எதிர்ப்பார்க்க முடியாது.

ஒட்டுமொத்த நீதித்துறையையும் தன் பிடிக்குள் வைத்து அதை தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஒரு ஏவல்துறையாக பிஜேபி பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போது நான்காண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கும் சகிகலா இதை நிச்சயம் நன்கு உணர்ந்திருப்பார்.

மேலும் தமிழ்நாட்டில் காலுன்ற துடிக்கும் பிஜேபிக்கு சசிகலாவின் அரசியல் வருகை நிச்சயம் சில சறுக்கல்களை ஏற்படுத்தும். அதிமுகவின் மீது சவாரி செய்து சில இடங்களை பிடித்து அதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் தனக்கான இருத்தலை உறுதி செய்யும் முனைப்போடு பிஜேபி வேலை செய்துகொண்டு இருக்கின்றது.

அதற்காகவே புழுத்து நாறும் அதிமுகவின் ஊழல்களை கண்டுகொள்ளாமல் அவர்களின் உச்சிக்குடுமியை பிடித்து உலுக்கி தங்களுக்கு ஏற்ற அடிமைகளாக அவர்களை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி அரசியல் அனாதை பிஜேபிக்கு அதிமுக 20 சட்டபேரவை இடங்களை ஒதுக்கியுள்ளது.

இடங்கள் குறைவாக தெரிந்தாலும் அதிமுக என்ற கட்சியே இந்தத் தேர்தலோடு காணாமல் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால் நிச்சயம் இந்த இடங்கள் மிக மிக அதிகம்தான்.

சசிகலாவின் அரசியல் விலகலை நாம் இத்தோடு தொடர்புபடுத்தித்தான் பார்க்க வேண்டும். இது அதிமுகவிற்கு மட்டும் வாழ்வா சாவா பிரச்சினை இல்லை நிச்சயமாக தமிழகத்தில் காலூன்ற ஆயிரம் சித்து வேலைகளை செய்தும் முடியாத பிஜேபிக்கும் இது வாழ்வா சாவா பிரச்சினை ஆகும்.

தங்களுக்கு ஒழுங்காக கப்பம் கட்டி நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் எடப்பாடியின் வீழ்ச்சி என்பது இன்றைய சூழ்நிலையில் எடப்பாடியின் வீழ்ச்சி மட்டுமல்ல அது பிஜேபியின் வீழ்ச்சியுமாகும்.

அதனால் அதிமுகவின் பெரும் வாக்குவங்கியாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுக்களை பிரிக்கும் எந்த ஒரு செயலும் அதிமுகவை மட்டுமல்லாமல் அதனை நம்பி தமிழகத்தில் இருக்கும் பிஜேபியையும் நிச்சயம் பாதிக்கும்.

இதுவும் சசிகலா தன்னுடைய அரசியலை விலகலை அறிவிக்க முக்கிய காரணமாகும். சசிகலா தனித்து போட்டியிட்டால் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த பட்ச இடங்கள் கூட பறிபோய்விடும் என்ற பயம்தான் சசிகலா மீது இருக்கும் ஊழல் வழக்குகளை காரணம் காட்டி அவரை பயமுறுத்தி இந்த அரசியல் விலகலை பிஜேபி அறிவிக்க வைத்துள்ளது.

ஆனால் அது தெரியாத சொம்புதூக்கிகள் இன்னமும் சிங்கம் களம் இறங்கும் என கனவு கண்டுக் கொண்டுள்ளன. ஊரில் உள்ள மக்களை எல்லாம் கடித்து குதறிக் கொண்டிருந்த ஒரு வெறி நாயை முன்சிபாலிட்டி பிடித்துக் கொண்டு போனாலும் அல்லது வண்டியில் அடிபட்டு செத்தாலும் அதற்காக மக்கள் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை. ஆனால் அந்த நாய் இல்லை என்றால் மற்ற வெறிநாய்களை கட்டுப்படுத்த முடியாது, எனவே அந்த நாயின் தேவை முக்கியமானது என யாராவது சொன்னால் அப்படி சொல்பவனை அந்த நாயினும் கீழானவனாகவே நாம் பார்க்க முடியும்.

எனவே சசிகலாவின் அரசியல் விலகலை ஏதோ திராவிடத்தை காக்க நடந்த மாபெரும் போரின் தோல்வி என நினைப்பது அல்லது அப்படி நினைக்க மக்களை தூண்டுவது கேடுகெட்ட பொறுக்கி தனமாகும்.

ஊரை அடித்து உலையில் போட்ட ஒரு குற்றவாளியை ஆதரிப்பதற்கும் ஒரு மனதிடம் வேண்டும். அது ஆண்டாண்டு காலமாக நக்கிப் பிழைத்தே தன் உடல் வளர்த்த உயிரிகளால்தான் முடியும். ஆனால் இது போன்ற புரோக்கர் பயல்கள் எல்லாம் அரசியல் நிபுணர்கள், முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் இருப்பதுதான் பெரும் கொடுமை.

தனது குடும்பத்தை சீரழித்தவனாகவே இருந்தாலும் அவன் ஒரு பார்ப்பானாக இருந்தால் எதிர்ப்பேன் அதுவே ஒரு சூத்திரனாக இருந்தால் ஆதரிப்பேன். ஏன் கூட்டியும் கொடுப்பேன் என சொல்லும் மனநிலைக்கும் சில மனநோயாளிகள் வந்திருக்கின்றார்கள்.

குற்றம் யார் செய்தாலும் குற்றம்தான். அதில் பார்ப்பன, சூத்திர வேறுபாடு கிடையாது. இந்திய நீதித்துறை பார்ப்பானுக்கு ஒரு நீதியையும் சூத்திரனுக்கு ஒரு நீதியையும் வழங்குவதை நாம் மறுக்கவில்லை. இதை அம்பலப்படுத்துவதான் நமது வேலையே ஒழிய இதற்கு எதிர்நிலையில் நின்று சூத்திரன் கொள்ளை அடித்தாலும் கொலை செய்தாலும் நான் அவனை ஆதரிப்பேன் என்பது கடைந்தெடுத்த நக்கிப்பிழைக்கும் நாய்களின் செயலாகும்.

சசிகலாவின் தற்போதைய அரசியல் விலகலுக்கு பின் உள்ளது ஊரை அடித்து உலையில் போட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவுமில்லை.

தமிழ்த்தேசியவாதிகள் என்ற போர்வையில் இருக்கும் சில மாமா பயல்கள் ஊரே கறித்துப்பினாலும் பரவாயில்லை என்று தைரியமாக சகிகலாவை பார்த்து வந்ததும் முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் நக்கிப் பிழைப்பதையே தனது வாழ்வின் தொழிலாக கொண்டு செயல்படும் சில புல்லுறுவிகள் கூச்சப்படமால் சசிகலாவை ஆதரிப்பதும் வேறு வேறானது கிடையாது.

இருவருக்கும் ஒரே தொழில்தான். அது தனது இருத்தலை காப்பாற்றிக் கொள்ள, தக்கவைத்துக் கொள்ள சொம்படி சித்தராகவே வாழ்வை கழிப்பது.

நாம் சொல்வதெல்லாம் இதைத்தான். சகிகலா வந்துதான் பிஜேபியை எதிர்க்க வேண்டும் என்றால் அல்லது திராவிடத்தை காக்க வேண்டும் என்றால் அப்படியான எந்த ஒரு ….. தேவையில்லை என்பதுதான்.

நீங்கள் வேண்டும் என்றால் ஆதாயத்திற்காக நக்கிப்பிழைக்கும் நாயாக இருங்கள் ஆனால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒரு ஊழல்வாதியின் பின்னால் அணிதிரள ஆலோசனை சொல்லும் உங்கள் போக்கு கேடுகெட்ட விபச்சாரத்தனமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

- செ.கார்கி

Pin It