இது போன்ற இழிநிகழ்வு உலக வரலாற்றில் எங்கேயாவது நடந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. ஒட்டு மொத்த பத்திரிகை உலகையும் தலைகுனிய வைத்திருக்கின்றார் தினமணி வைத்தியநாதன். எத்தனையோ பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து, மக்களுக்கு எதிராக ஆதிக்க சக்திகள் செய்யும் அநீதிகளை அம்பலப்படுத்தி இருக்கின்றார்கள். குஜராத் இனப் படுகொலையை நடத்திய இந்துமத வெறியர்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய தெகல்கா பத்திரிகை நிருபர்களும், குஜராத் கோப்புகளை வெளியிட்ட ரானா அயூப் அவர்களும், உலக ரவுடியான அமெரிக்காவின் கொடூர முகத்தையும், மோசடித்தனத்தையும் உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சேவும் , இன்னும் பத்திரிகைத் துறையை சாராமல் அமெரிக்க சி.ஐ.ஏ.வில் பணிபுரிந்தாலும் தன்னுடைய நாடு எப்படி மற்ற நாடுகளை உளவு பார்க்கின்றது என்ற ரகசியத்தை வெளியிட்டு உலக அரங்கில் அமெரிக்காவை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனும் நம் மனதில் உயர்ந்த இடத்தில் இன்னும் இருந்துகொண்டு இருக்கின்றார்கள்.
ஒரு நேர்மையான பத்திரிகையாளன் எப்போதுமே யாருக்கும் அஞ்சி தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது கிடையாது. இன்றும் நாட்டில் நடக்கும் பல அநீதிகள் மக்களுக்குத் தெரிகின்றது என்று சொன்னால், அதற்குப் பின்னால் பத்திரிகையாளர்களின் கடும் உழைப்பு உள்ளது. சம்பவங்களை வெறும் செய்தியாகத் தரும் பத்திரிகையாளர்களும் உண்டு. அதே போல செய்தியின் அடி ஆழம் வரை சென்று, அதன் மூலத்தைக் கண்டறிந்து மக்கள் முன் அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களும் உண்டு. முன்னவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக பத்திரிகைத் தொழிலை தேர்வு செய்தவர்கள். பின்னவர்கள் அதை ஒரு லட்சிய நோக்கத்தோடு சாமானிய மக்கள் மீது அதிகார வர்க்கம் இழைக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும், அதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பத்திரிகைத் தொழிலை தேர்வு செய்தவர்கள். அது போன்ற நபர்கள்தான் இன்றளவும் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டு இருப்பவர்கள். ஆளும்வர்க்கத்தால் அதிகம் பழிவாங்கப்படுவர்களும் இவர்கள்தான்.
ஆனால் இப்படி நேர்மையாக, அஞ்சாமல் மக்களுக்காகப் பாடுபடும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை அளவில் பார்த்தால் மிகக் குறைவாகவே இருப்பார்கள். வைத்தியநாதன் போன்ற மானங்கெட்ட பேர்வழிகளே அதிகம் இருப்பார்கள். இவர்களின் நோக்கம் எல்லாம், எழுத்தை வைத்து எப்படி ஆளும்வர்க்கத்தை நக்கிப் பிழைத்து, பணம் ஈட்டுவது என்பதுதான். பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் விபச்சார தரகனுக்கும், பத்திரிக்கையை வைத்து மதத்தையும், சாதியையும் வளர்க்கும் நபர்களுக்கும் எப்போதுமே பெரிய வேறுபாடு இருந்தது இல்லை. அந்த வகையில் தமிழில் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கென்றே நடக்கும் விபச்சாரப் பத்திரிகைகளில் முதன்மையானது தினமணி, தினமலர், தமிழ் இந்து போன்றவை. இந்தப் பத்திரிகைகளுக்கும் இதன் ஆசியர்களுக்கும் மானம், வெட்கம் என்பதெல்லாம் எதுவுமே கிடையாது. இவர்களின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டில் பார்ப்பனியத்தை சீரும் சிறப்புமாக வளர்ப்பதுதான். இந்தப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமும் அதுவேதான்.
அதனால் தான் கொஞ்சம் கூட சூடு, சுரணை இல்லாமல் நக்கிப் பிழைக்கும் நாயினும் கீழாக தினமணி வைத்தியநாதனால் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் போய் உஞ்சவிருத்தி பார்ப்பான்களின் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கோர முடிந்தது. மானமுள்ள பத்திரிகையாளனாக இருந்திருந்தால் நாண்டுகொண்டு செத்திருப்பான் இப்படி சராணகதி அடைவதற்குப் பதில். ஒட்டுமொத்த பத்திரிகை உலகிற்கே மிகப் பெரிய அவமானத்தையும், இழிவையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தி இருக்கின்றான் வைத்தியநாதன். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இந்துத்துவப் பயங்கரவாதிகளால் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருக்கும்போது, பெரியார் மண் அதற்கு எப்போதுமே விதிவிலக்காக இருந்தது. அதற்குக் காரணம் இந்த மண்ணில் வேர்விட்டு விழுதுகள் இறக்கி, ஆகாயமாய்ப் பரவி இருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்கள். இந்துத்துவ பயங்கரவாதிகளை தீரத்துடன் எதிர்த்து நிற்கும் நெஞ்சுரமும், விதைக்கப்படும் விஷ வித்துக்களை மண்ணிலேயே மரித்துப்போகச் செய்யும் கருத்தியல் ஆயுதங்களையும் எண்ணிலடங்காமல் இந்த மண் தன்னிடம் வைத்திருக்கின்றது. அப்படிப்பட்ட மண் ஒவ்வொரு பத்திரிகையாளனும் துணிவுடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்தி இருக்கின்றது.
ஆனால் முதன் முறையாக அதற்கு மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்திருக்கின்றான் தினமணி வைத்தியநாதன். வைரமுத்து வருத்தம் தெரிவித்தும், கருத்துச் சுதந்திரத்தை பார்ப்பனியத்தின் காலடியில் போட்டு நசுக்காமல் விடமாட்டோம் எனக் கொக்கரித்த பார்ப்பனக் கூட்டம் அவரை தேவதாசி ஆண்டாள் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மிரட்டியது. வைரமுத்துவோ மன்னிப்பைவிட கேவலமான வீடியோவை வெளியிட்டு சராணகதி அடைந்தாலும், அடங்காத உஞ்சவிருத்தி பார்ப்பான்கள் அவரைப் பகிரங்கமாக வந்து மன்னிப்புக் கேட்டால்தான் விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். ஆனால் வைரமுத்துவின் மீது என்னதான் விமர்சனம் இருந்தாலும், அவருக்காக ஒட்டுமொத்த முற்போக்கு இயக்கங்களும், இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடி அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அனைத்திற்கும் வேட்டுவைக்கும் விதமாக, போராடிய அனைவரையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாமாப் பயல் வைத்தி, வேண்டுமென்றே ஆண்டாள் சன்னதிக்கு சென்று சாஸ்டாங்கமாக விழுந்து, மன்னிப்பு கோரியுள்ளான். இதன் மூலம் பத்திரிகை உலக வரலாற்றில் ஒரு புதிய இழிவான அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கின்றான் வைத்தி மாமா.
தினமணிப் பத்திரிகையின் பார்ப்பன சார்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதன் தொடக்கமே மிகத் தீவிரமாக பார்ப்பனியத்தை பரப்புவதில்தான் இருந்தது. பெரியார் அவர்கள் அன்றே தினமணியின் தமிழர் விரோத, பார்ப்பன சார்பை வெளிச்சம் போட்டுக் காட்டினார். 1938 இல் தமிழகமே இந்தி திணிப்புக்கு எதிராக போராடிக்கொண்டு இருந்த போது தினமணிப் பத்திரிகை, இந்திக்கு ஆதரவாக போராடுபவர்களை காட்டிக் கொடுக்கும் வேலையிலும், இந்தி எதிர்ப்பாளர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடும் வேலையையும் செய்தது. "இந்தி எதிர்ப்புக் கூட்ட நடவடிக்கைகளை தேசியப் பத்திரிகைகள் பிரசுரம் செய்வதே இல்லை. ஒருகால் பிரசுரம் செய்தாலும் திருத்தி, சுருக்கி மழுக்கிப் பிரசுரிப்பதே வாடிக்கையாகவும் இருந்து வருகின்றது. இந்தத் திருப்பணியில் முன்னணியில் நிற்பது 'தமிழர் நன்மைக்காக தமிழரால் நடத்தப்படும்' தமிழ் தினசரியான 'தினமணியே'.இந்தி எதிர்ப்பாளரைக் கேலி செய்வதிலும், விகடப் படங்கள் பிரசுரித்து இழிவுபடுத்துவதிலும் தலை சிறந்து விளங்குவது 'ஆனந்த விகடன்'.காங்கிரஸ் பத்திரிக்கைகளும் தேசியப் பத்திரிகைகளும் இந்தி எதிர்ப்பாளரை தாக்கிவந்தாலும் 'தினமணி’யையும், 'ஆனந்த விகடனையும்' போல் விஷமத்தனமாகவும், இழிவாகவும் எந்தப் பத்திரிகையும் தாக்குவதில்லை. தினமணி ஆசிரியர் சட்டசபை மெம்பர்.கனம் ஆச்சாரியார் தயவினால் மாதம் தோறும் 75 ரூபாய் சம்பளம் பெறுபவர்…..” “...தினமணி இந்தி எதிர்ப்பு ஆரம்பமானது முதற்கொண்டே இந்தி எதிர்ப்பாளரை ஒடுக்க சர்க்காரைத் தூண்டிக்கொண்டே வந்திருக்கிறது. சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் உண்டான கலவரங்களுக்கு இந்தி எதிர்ப்பாளரே காரணம் என்று ஒரு கதை கட்டிவிட்டு தற்காப்புக்காக எவரையும் கொல்லலாமென்றும், அவ்வாறு கொலை புரிவது குற்றமாகாதென யாரோ ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதாகவும் 'தினமணி' எடுத்துக்காட்டி இந்தி எதிர்ப்பாளரை கொல்லவும் பாமர மக்களுக்கு மறைமுகமாக உபதேசம் செய்தது…"( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் தொகுதி 1 ப.எண்:310)
இப்படி இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிய தினமணி, பெரியார் அவர்கள் காந்தியின் ராமராஜ்ஜிய மோசடியை அம்பலப்படுத்திய போதும், அதற்கு எதிராக தனது பார்ப்பன சதி வேலையை அரங்கேற்றியது. "ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியாகி 13 ஆம் தேதி வெளியூர்களுக்கு வந்த 'தினமணி' பத்திரிகையில் 'ராமராஜ்ஜியம்' என்னும் தலையங்கத்தில் துவக்கத்திலேயே அதன் ஆசிரியர் 'இந்தியாவில் இராமராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்று காந்திஜி கூறினால் இந்துமத ஆதிக்கத்தை முஸ்லிம்களின் மீது திணிக்கக் காந்திஜி விரும்புகிறார் என்று கயவர்கள் சொல்லித் திரிந்தார்கள்' என்று எழுதி இருக்கிறார். ஆகவே, இராம இராஜ்ஜியம் அல்லது இராமராஜ்ஜியக் கொள்ளைகள் என்பவைகள் இந்துமத சம்பந்தமானது என்று யாராவது சொன்னால் அப்படிச் சொல்லுகிறவர்கள் கயவர்கள் என்பது ‘தினமணி’ ஆசிரியர் கருத்து, அல்லது இந்தியக் காங்கிரஸ் தேசியவாதிகளின் கருத்து அல்லது காந்தி கும்பலின் கருத்து என்றுதான் கொள்ளவேண்டி இருக்கின்றது” ( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் தொகுதி 3 ப.எண்; 402). இப்படித்தான் தினமணி அன்றில் இருந்து இன்றுவரை தமிழர்களின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பங்கம் விளைவிப்பதை, அவர்களை பார்ப்பன அடிமைகளாக கருத்தியல் ரீதியாக வளர்தெடுப்பதை மட்டுமே தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றது. அதன் வெட்கம்கெட்ட செயலின் உச்சம்தான் வைத்தியநாதன் மன்னிப்பு கேட்டது.
முழு அம்மணமாக தனது பார்ப்பனியத்தை இன்று வைத்தியநாதன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு வெளிக்காட்டி இருக்கின்றது தினமணி. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் தினமணிப் பத்திரிகையை வாங்குவதை உடனே நிறுத்த வேண்டும். பத்திரிகைத் துறையை சேர்ந்த தன்மானமும், சுயமரியாதையும் உள்ள நண்பர்கள் தினமணிப் பத்திரிகையை நெருப்பிட்டு கொளுத்தும் போராட்டத்தை நடத்த வேண்டும். தினமணி தமிழ்ச் சமூகத்தின், பத்திரிகை உலகின் அவமானச்சின்னம் என்பதையும், வைத்தியநாதன் பத்திரிகை உலகின் விபச்சாரத் தரகன் என்பதையும், தமிழினத் துரோகி என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் இந்தச் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றால், தமிழ்ச் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கவேண்டும் என்றால் உடனடியாக இதை நாம் செய்யவேண்டும்.
- செ.கார்கி