ரசருக்கான மாபெரும் ராஜவிசுவாச உணர்வுகள், போற்றுதல்கள் என்ற மகத்தான செல்வத்துடன்தான் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். எனக்கு வருத்தம் தரும் வகையில் அந்த மகத்தான செல்வம் மேலும் மேலும் மதிப்பிழந்து வந்தது. நான் மூன்று அரசர்களை நிர்வாணக் கோலத்தில் பார்த்தேன். அந்தக் காட்சி எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததில்லை உணர்ச்சிவசப்பட்ட கெய்சர் வில்லியம் 2 என்ற ஜெர்மன் பேரரசரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பிஸ்மார்க் தனது நண்பர் ஒருவரிடம் கூறிய வார்த்தைகள் இவை. “பேரரசர் தன்னை மகத்தான வலிமை மிக்கவராகக் காட்டிக் கொண்டார். அவர் மிக விரைவில் பிஸ்மார்க்குடன் வீழ்ந்தார் என ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டார். (’உலக வரலாற்றுக் கணங்கள்’ நூல் - லிண்ட்ஸே ட்ரம்மன் -1949 பக்கம் 516)

 ஆட்சிப் பொறுப்பேற்ற தனது பதவிக்காலத்தின் பாதி வழிக்குள்ளாகவே பிரதமர் நரேந்திர மோடி மிக அதிகமான அளவுக்கு அதிருப்தியைச் சந்தித்து வருகிறார். அவரிடமுள்ள குறைபாடுகளை முன்பு ஒதுக்கித் தள்ளிய மக்களுக்கு, அவரது பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒன்று மட்டுமே இப்போது அவரிடமுள்ள குறைபாடுகளை நினைவுபடுத்திவிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பெருமளவுக்கு மோடி தானாகவே செய்தார். அந்த சூதாட்ட விளையாட்டு இப்போது தோற்றுப் போய்விட்டது. மோடியின் கீழ் நோக்கிய சரிவு துவங்கிவிட்டது. இந்தப் பேரரசர் இப்போது தன்மீது ஆடைகளின்றி நிற்கிறார் நிர்வாணமாக!

modi in sad mood

 நவம்பர் 8ல் ரூ.1,000, ரூ.500 நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்த மோடியை, தனது டான்குவிக்ஸாட் நடவடிக்கைகளால் எழுந்துள்ள பரந்துபட்ட மக்களின் அதிருப்தி திகிலடையச் செய்துள்ளது. இதை அவரது மிகையுணர்வு நடவடிக்கைகள் தெரிவிக்கின்றன. அவரது மனஉறுதிக்கும், தைரியத்துக்குமான மாபெரும் முதல் சோதனையாக இந்த நிகழ்வு அமைந்துவிட்டது. இது அவருக்குத் தேவையானதுதான். அவருக்கு மிகவும் பிடித்தமான (விகாஸ், விஸ்வாஸ் போன்ற) கோஷங்களும் முழக்கங்களும் இப்போது அவருக்கு உதவவில்லை. மக்கள் பதில்களை வேண்டுகிறார்கள். அவர் ஏற்படுத்திவிட்ட வேதனைகளுக்கு அவரது நம்பகத்தன்மையை வேண்டுகிறார்கள். இந்த நம்பகத்தன்மை என்ற கருத்தாக்கம் மோடிக்கு மிகவும் அந்நியமானது!

 தன்னை ஒரு மக்கள் தலைவராக, கட்சி (பாரதிய ஜனதா)க்கும் மேற்பட்டவராக, இந்தக் கட்சியின் பிறப்பிடத்தை விடவும் (ராஷ்ட்ரிய சுயம் சேவக்) மேற்பட்டவராக, பாராளுமன்றம், நீதித்துறை போன்ற அமைப்புகளை விடவும்கூட மேலானவராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள ஒவ்வொரு தந்திரத்தையும் அவர் கையாண்டு கொண்டே இருந்தார். அவரது உத்தி, தொடர்ந்த தேர்தல் பிரச்சாரமாக, கோஷங்களை எழுப்புவதாக, பாராளுமன்றத்துக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தும் சிந்தனையற்ற முறையில் எதிராளிகள், விமர்சகர்களின் நேர்மையைக் காயப்படுத்துவது என்பதாகவே இருந்து வருகிறது. அவர் தனது அமைச்சரவை சகாக்களின் தலைமையைக்கூட புறக்கணித்து அரசு ஊழியர்களிடம் நேரடியாகச் செல்லத் துவங்கினார். (‘ஜனநாயகத்தை மோடிமயமாக்குதல்’ என்ற ஏ.ஜி நூரனியின் கட்டுரை- ஃப்ரண்ட் லைன் 2014 ஜூலை 11) இப்போது மக்களின் உணர்வுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் மிகவும் கேவலமான நடவடிக்கைகளால் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயன்று வருகிறார். ஆனால், அது அவருக்குப் பயன் தரப் போவதில்லை!

 மக்கள் இதற்கு முன்பே சிறந்த பிரதமர்களைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் மோடி இப்போது உதிர்க்கும் பேச்சுக்களை ஆழ்ந்து கவனிக்கிறார்கள். புகழ்பெற்ற நாளிதழான ‘பிஸினஸ் ஸ்டாண்டர்ட்’ தனது டிசம்பர் 6 இதழில், பிரதமர் மோடி நவம்பர் 8ல் நாட்டுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையிலிருந்து துவங்கி ஆழ்ந்த கவனத்துடன் ஒர்ஆய்வைச் செய்து, அந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக்கு, “மோடி பணமதிப்பு நீக்கம் பற்றிய விவரித்தல்களை எவ்வாறு மாற்றிக் கொண்டார்?” என்ற மிகவும் பொருத்தமான தலைப்பு இடப்பட்டிருந்தது.

 அது மோடியின் பேச்சின் மேற்கோள்களை மிகவும் விரிவாகத் தாங்கி இருந்தது. “அந்தப் பேச்சு (ஆங்கிலத்தில்) 25 நிமிடங்கள் நீடித்தது. பிரதமர் ‘கறுப்புப்பணம்’ என்ற வார்த்தையை 18 முறை உச்சரித்தார். அவர், ’கள்ள நோட்டு’ அல்லது ‘போலி நோட்டு’ என்ற வார்த்தையை 5 முறை அதே பேச்சில் குறிப்பிட்டார்.”

 “பிரதமரின் பேச்சிலிருந்து ‘கறுப்புப் பணத்தின்’ தீங்குதான் இந்த நாட்டின் கிட்டத்தட்ட 86% நோட்டுக்களைத் திடீரென்று திரும்பப் பெற்றதற்கான ’முதன்மை நோக்கம்’ என்பது சந்தேகத்துக்கிடமின்றித் தெளிவாகிறது.....”

 “ஆனால், நவம்பர் 8க்கும் நவம்பர் 27க்கும் இடையேயான காலத்தில் பணமதிப்பு நீக்கத்தின் ‘முதன்மை நோக்கம்’ கறுப்புப் பணத்தை விட்டுவிட்டு ‘பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மாறிச் செல்வதுதான்’ என்பதற்கு பிரதமரின் பேச்சுக்கள் சாட்சியங்களாக மாறிவிட்டன!”

 “குடிமக்களை குறைந்த அளவில் பணத்தைப் பயன்படுதுங்கள் எனவும், அதிக அளவில் மின்னமைவுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள் எனவும் வலியுறுத்துவது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும், பாராட்டப்பட வேண்டிய நோக்கம் என்பதும் சரியானதே. ஆனால், நாட்டின் 86% நோட்டுக்களை ஒரே இரவில் அவற்றின் ஒட்டுமொத்த மதிப்புக்களையும் நீக்கிவிட முடிவெடுக்கப்படும்போது, (அது பல்விதமான நோக்கங்களைக் கொண்டிருந்தாலும்கூட) வலுவான அறிவுசார்ந்த முக்கியமான காரணம் அதற்கு இருக்கும் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.”

 “ ‘கறுப்புப்பணத்தை’ ஒழிப்பது என்ற உண்மையான ‘முதன்மை நோக்கம்’ நிறைவேற்றப்பட முடியாதது என பிரதமர் உணர்ந்து கொண்டாரா? அல்லது, அந்த முடிவை எடுப்பதற்குமுன் போதுமான, தேவையான சிந்தனை செலுத்தப்படவில்லையா?”

 அந்த ஆய்வின் ஆசிரியர் பிரவீண் சக்ரவர்த்தி, ‘கறுப்புப் பணத்திலிருந்து’, ‘பணமற்ற/மின்னமைவுப் பரிவர்த்தனைப் பொருளாதாரத்துக்கு மாறிச் செல்லும் - இதற்கிடையே ‘கள்ள நோட்டின் மீதான போர் உட்பட - ஒரு வரைபடத்தைத் தயாரித்துள்ளார்.

தடம் மாற்றமா? (தடுமாற்றமா?) 

 பணமதிப்பு நீக்கத்தின் முதன்மை நோக்கம் தோல்வியைச் சந்தித்தபிறகு, மோடி தடத்தை மாற்றுகிறார். அவரது பேச்சுக்களே இந்தக் கதையைக் கூறுகின்றன! 2001ல் குஜராத்தில் நன்கு திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் நடைபெற்றபோது, குஜராத்தின் முதலமைச்சராக இருந்து ஒருதுளி கண்ணீர் கூட வடிக்காத இதே மோடி, 2016 நவம்பர் 13ல் கோவாவில் மிகவும் உடைந்து போய்விட்டார்! உதடுகள் நடுங்குகின்றன: தொண்டை அடைக்கிறது! ஆனால் அவர் சொல்ல வந்த செய்தியின் உள்ளடக்கம் சிரிப்பூட்டுவதாக அமைந்துவிட்டது! ”அவர்கள் என்னை உயிர் வாழ விடமாட்டார்கள், அவர்கள் என்னை அழித்து விடுவார்கள். அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்து கொள்ளட்டும் அந்த அவர்கள் யார் என்பதை மோடி அடையாளம் காட்டவே இல்லை! இந்த அச்சுறுத்தல் பற்றி ‘தேசியப் புலனாய்வு அமைப்பு’ (NIA) எச்சரித்ததா?

 அதன்பிறகு வருகிறது அவரது புகழ்பெற்ற தெளிவான உறுதிமொழி. ”50 நாட்கள் எனக்கு உதவுங்கள். இந்த நாடு எனக்கு வெறும் 50 நாட்களை மட்டும் தந்து உதவட்டும். 50 நாட்களுக்கு என்னோடு பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த வேதனைகள் 50 நாட்களுக்கு மட்டும்தான். 

 டிசம்பர் 24ல் மும்பையில் மோடி கூறினார்: இந்த வேதனைகள் அந்த அழகிய 50 நாட்களுக்குள் முடிந்துவிடாது. ஆனால், ஏழைகளின் அந்த வலி குறையத் தொடங்கும். ஆனால், அதே நேரத்தில் பணக்காரர்களின் வலி அதிகரிக்கும், ஒரு நாட்டின் பிரதமர் தனது நாட்டுமக்களிடம் பேசுகின்ற நேர்மையான வழிமுறை இதுதானா? அந்த மக்கள் சந்தித்து வந்த -குறிப்பாக ஏழைகளின் பிரச்சனைகளை ஒருமுறைகூட கவனிக்க அவர் கீழிறங்கி வரவே இல்லை. ஆனால், அவர்களை ஏமாற்ற தனது கேவலமான நடிப்பாற்றலைப் பயன்படுத்துகிறார்! எனதருமை நாட்டு மக்களே! நான் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் தந்துவிட்டேன். எனது வீடு, எனது குடும்பம். என்னிடம் இருந்த எல்லாவற்றையும் இந்த நாட்டுக்குத் தந்துவிட்டேன். ஆகவே? என்னைக் கேள்வி கேட்காதீர்கள். நான் உங்களுக்காகவே எல்லாவற்றையும் தந்துவிட்டேன் 

 மோடியின் இந்த வேண்டுகோள், மிகவும் வேதனைப்பட்டவர்களுக்காக, ஏழைகளுக்காக, மிகவும் அபத்தமான வார்த்தைகளில் மோடியால் பேசப்பட்டது. நான் ஏழைகளுக்காகவே இதைச் செய்கிறேன். உழைக்கும் மக்களுக்கு; நேர்மையான மக்களுக்கு; தாங்கள் வாழ்வதற்காக கடுமையாக வேலைசெய்யும் மக்களுக்கு. இதனால் அவர்கள் தங்கள் சொந்த வீட்டைப் பெற முடியும். அவர்களது குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற முடியும். அவர்களது பெற்றோர்கள் நல்ல கவனிப்பைப் பெற முடியும். 

 மோடி எப்போதும் நிலவைப் பிடித்துத் தருவதாக உறுதியளிப்பார்! அதன்பிறகு என்ன? அவர் அரசியலையே மாற்றியமைத்து விடுவதோடு மட்டுமல்ல; தனக்கு முன்பிருந்தவர்களைவிட மேலானவராக உருவாகி விடுவார்! இந்த அவரது வார்த்தைகள் சீஸரின் பேராசை பற்றிய போதுமான எச்சரிக்கையை நமக்குத் தருகிறது.

முந்தைய அரசுகளை மதிப்பிடப் பயன்படுத்திய அதே அளவுகோல்களை சிலர் என்னை மதிப்பிடப் பயன்படுத்துகிறார்கள். நான் ஆட்சியதிகாரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் தங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொண்டாக வேண்டும் (டைம்ஸ் ஆஃப் இந்தியா 2016 நவம்பர் 14) 

 மோடி எல்லாரையும்விட மேம்பட்டவர்! மோடி, மற்ற அரசியல் கட்சிகளைப் போல வெறுமனே வந்து போகக்கூடியவர் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2016 நவம்பர் 14) சார்லஸ் டி’காலே-யைப்போல், மோடி தன்னைத்தானே மூன்றாவது மனிதராகக் குறிப்பிட்டுக் கொள்கிறார்! நவம்பர் 14 அன்று லக்னோவில் 50 நாட்கள் சபதத்தை மிகவும் துல்லியமாக முன்வைத்தார். இந்த காலகட்டத்தை ‘ஒரு பெரிய கடமையான, நேர்மை வாய்ந்த ஒரு பெரிய வேலையான, கறுப்புப்பணத்தைத் தோண்டியெடுக்க பயன்படுத்திக் கொள்வார், (தி ஹிந்து நவம்பர் 15) இந்தக் கட்டுரை அச்சாகும்போது வாசகர்கள் தாங்களாகவே ஒரு மதிப்பீட்டைச் செய்துகொள்வார்கள்: ‘இது மோடியின் திட்டங்களின் தோல்வி மட்டுமல்ல: அவரது நம்பக்கூடாத பேச்சுக்களின், நேர்மையற்ற தன்மையின் தோல்வியும்கூட’.

 நமக்குத் தெரியவந்துள்ள அனைத்துலகக் கருத்துக்கள் இந்த இரண்டையும் அம்பலப்படுத்திவிட்டன. ‘தி இண்டர்நேஷனல் நியூயார்க் டைம்ஸ்’ நவம்பர் 19ல் ‘பணமதிப்பு நீக்கம், பல இலட்சக்கணக்கான மக்களை, தங்கள் பழைய நோட்டுக்களைத் தங்கள் கணக்கில் செலுத்தவும், மாற்றிக் கொள்ளவும் வங்கிகளின்முன் வரிசையாக நிற்க வைத்து நாட்டின் பொருளாதாரத்தை பெரும் கலவரத்துக்குள் வீசியெறிந்துவிட்டது’ என்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டது. ‘பணத்தை அடைப்படையாகக் கொண்ட இலஞ்சமும், ஊழலும், வரி ஏய்ப்பும் மக்களிடம் இந்தப் புதிய நோட்டுக்கள் சேரத் துவங்கியபிறகு, மீண்டும் உறுதியாகத் திரும்ப வந்துவிடும்’ என்றும் அந்த இதழ் கணித்தது.

 முன்னாள் அமெரிக்கக் கருவூலத்துறை செயலாளரும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தலைவருமான லாரன்ஸ் சம்மர்ஸ், ‘இந்தியாவில் இப்போது நிலவிவரும் துயரங்கள், அரசின்மீது நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது’ என எழுதினார். (தி டெலிகிராஃப் 2016 நவம்பர் 22)

 2016 நவம்பர் 29ல் ’தி டைம்ஸ்’ தனது விமர்சனத்தை மிக விரிவான விளக்கங்களுடன் மீண்டும் வெளியிட்டது. ‘தி எகனாமிஸ்ட்’ன் விமர்சனம் டிசம்பர் 3ல், ‘இந்தச் சீரழிவால் ஏற்பட்ட நிலைகுலைவை மட்டும் வெறுமனே குறிப்பிடாமல், இந்தச் சீரழிவை உருவாக்கியவர் யார்?- மோடி’ எனவும் சுட்டிக்காட்டியது. அந்த இதழ், ‘கடைகள் பழைய நோட்டுக்களை ஏற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்திவிட்டன. பழைய நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டின் இறுதிவரை வங்கிகளில் செலுத்த முடியும் அல்லது புதிய 500 மற்றும் 2,000 நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியும். அந்த 84% மதிப்புள்ள புழக்கத்தில் இருந்த பணம் திடீரென சட்டப் பூர்வ ஒப்பந்தமாக இல்லாமல் போனது ஏற்கனவே, ஊகிக்கக்கூடிய, தேவையற்ற துயரங்களை ஏற்படுத்திவிட்டது. அதை மீண்டும் துவங்குவது காலம் தாழ்ந்தது மட்டுமல்ல; அரசியல்ரீதியாக சிந்தித்தும் பார்க்க முடியாதது. ஆனால், மோடியால் இந்த சேதங்களைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் அதற்குக் காரணமான அவரது குறைபாடு உடைய தலைமைப் பாணியைக் கைவிடச் செய்திருக்கும்..... 

 “பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை இருப்பு வைத்துக் கொள்ள வங்கி நோட்டுக்கள் மட்டுமே ஒரேயொரு வழி அல்ல. அவர்களுக்கு வங்கியல்லாத பல்வேறு வழிமுறைகளும்கூட இருக்கின்றன. இந்தச் சீர்திருத்தத்தின் சுமை அடிக்கடி நிகழ்வதுபோல ஏழைகளின்மீதே கனமாக விழுந்திருக்கிறது. இந்தியத் தொழிலாளர்களில் 5க்கு 4 பங்குக்கு மேற்பட்டவர்கள் ‘அணிதிரட்டப்படாத’ துறைகளில் உள்ளவர்கள். அவர்களுக்கு ஊதியம் பணமாகவே அளிக்கப்படுகிறது. சொல்ல முடியாத எண்ணிக்கையினர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவர்களை வேலைகளில் நியமித்தவர்களால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. பற்பல பத்து இலட்சம்பேர் பயனற்ற நோட்டுக்களிலிருந்து விடுபடவும், செலவுக்கு அத்தியாவசியமான கொஞ்சம் பணத்தைப் பெறவும் பண இயந்திரங்களுக்கு முன்பும், வங்கிகளுக்கு முன்பும் மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்கிறார்கள். இவ்வாறு காத்துக் கிடக்க நேரம் இல்லாதவர்கள் அல்லது வரிசைகளில் நிற்க விரும்பாதவர்களுக்கு அல்லது அதிக அளவில் பழைய நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு பணத்தைப் பெற்றுத் தரும் புதிய தொழில் உதயமாகிவிட்டது.”

 “இந்தியாவில் நுகர்பொருள் பரிவர்த்தனைகளில் 98% அளவுக்கு பணமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் சிறிய கடைக்காரர்கள் தங்களுக்கு விற்பனைக்காக விவசாயிகள் தரும் உற்பத்திப் பொருள்களுக்குப் பணம் தரமுடியாமல் அல்லல்பட்டு நிற்கிறார்கள். பொருளாதாரம் திக்குமுக்காடுகிறது. விவசாயப் பண்ணைகளுக்கான முள்கம்பி விற்பனை பாதியாக வீழ்ந்துவிட்டது. நீண்டகாலம் நீடித்திருக்கும் நுகர்பொருள் விற்பனை 70% அளவுக்கு வீழ்ந்துவிட்டது. தேசிய உற்பத்தியின் மீதான தாக்கம் பற்றிய ஊகங்கள் பல்வேறு வகைகளில் வேறுபடுகின்றன. பணத்தை வங்கிகளிலிருந்து பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஆண்டின் மொத்த உற்பத்தி GDP புள்ளிகளைக் குறைத்துவிடும். (இப்போது நடைமுறையில் செப்டம்பர் வரையான மூன்று மாதங்களில் உள்ள புள்ளி 7.1% ) ‘ஒரு சிறிதளவாவது முன்யோசனை இருந்திருந்தால் இந்தப் பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.’ புதிய ரூபாய் நோட்டுக்கள் பழைய நோட்டுக்களைவிட அளவில் சிறியவைகளாக இருப்பதால், நாட்டிலுள்ள அனைத்து ATMகளும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையும் எழுந்துள்ளது. அதற்குக் குறைந்தபட்சம் 45 நாட்களாவது ஆகுமாம். 2.5 கோடி நோட்டுக்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன. அத்துடன் புதிய நோட்டுக்களை அச்சிடும் ஆற்றல், முன்னாள் நிதியமைச்சர் கூறுவதுபோல, மாதத்துக்கு 30 இலட்சம் மட்டும் தான்.

 modi 346ஏராளமான பழைய பணம் வங்கிகளுக்கு வந்தபோதும் அவற்றுக்கு மாற்றாக அளிக்க இன்னும் கொஞ்சம் புதிய நோட்டுக்கள் தேவைப்படுகின்றன. அதற்கு இன்னும் சிறிதுகாலம் பிடிக்கும். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகான மூன்று வாரங்களில் புதிய வைப்புத் தொகைகளாக 8,50,00,000கோடி (8,5 டிரில்லியன்) ரூபாய்களைக் கையாள்வதற்கு வங்கிகள் முழுவதும் தயாராகிவிடவில்லை. அந்த வங்கிகள் பாண்டுகளை வாங்க இந்த வைப்புத் தொகைகளைப் பயன்படுத்திய பிறகு, வட்டிவீதம் குறைந்துவிட்டதால், மத்திய வங்கிகள் அந்த வைப்புத் தொகைகளை 0% வட்டிக்கணக்கில் குவித்துவைக்க உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியதாகிவிட்டது.

 “இரகசியத்தை ஆழ்ந்து கருத்தூன்றிப் பார்க்க வேண்டிய தேவை, பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களைத் திகைப்புக்குள்ளாக்கியபோது, மோடி ஒருபோதும் தவறே செய்யாதவர்; தாங்கள் தொழில் நுட்ப ஆற்றல்களில் தங்கள் நம்பிக்கைகளைத் தவறாக வைத்துவிட்டதாகவும் அவர்களுக்கு உள்ளார்ந்த உணர்வுகள் ஊட்டப்பட்டன. ஒரு திட்டத்தை வகுக்கும்போது அது தேவையற்ற வகையில் அதிக அளவில் கூட்டுச்சதியாவது மேலும்மேலும் வளர்ந்து மோடி கேவலப்பட்டு விட்டார். அவர் தனது அரசியல் தலைமையிடத்தை வீணாக்கிவிட்டார். எதிர்காலத்தில் மிகவும் பரந்த அளவில் ஆலோசனைகளைப் பெறுவது அவருக்குத் தேவையாகிவிட்டது. முடிவுகளை எடுப்பதில் தானாகவே தன்னை மத்தியமயப் படுத்திக் கொள்வதை அவர் குறைத்துக்கொள்ள வேண்டியதாகியுள்ளது. தன்மீது கூறப்படும் எல்லா விமர்சனங்களும் ஒருதலைச்சார்பான நடுநிலையற்றவை அல்ல என்றோ, அல்லது ஊழல் நிறைந்த பணக்காரர்களிடமிருந்து வரும் தனிப்பட்ட வாதங்கள் அல்ல என்றோ மோடி ஏற்றுக் கொண்டாக வேண்டும். நல்லவேளையாக இந்தியா ஒரு வடகொரியா அல்ல. இந்த நாடு தனது தலைவர்கள் ஒருபோதும் தவறே செய்யக்கூடாதவர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறது. இதன் கூட்டாட்சி ஜனநாயக அமைப்புமுறையை மோடி எவ்வாறு தனது ரூபாய் சிக்கலில் மிக மோசமாக சீரழித்தார் என்பதை அறிந்துகொள்ள ஏராளமான வாய்ப்புகளை வாக்காளர்களுக்கு அளித்துள்ளது. மோடியின் நம்பகத்தன்மை எவ்வாறு உள்நாட்டில் முக்கியத்துவம் இழந்துவிட்டதோ அவ்வாறே அயல்நாடுகளிலும் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. வெளிநாட்டுப் பயணங்களின்போது இனி அவருக்கு அளிக்கப்படும் வரவேற்புகள் இனிமை குறைந்தனவாகவே அமையும்.

 மேலும் ஒரு சிறு மாதிரி. ஃபோர்ப்ஸ் இதழில் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் மோடியின் பணமதிப்பு நீக்க முடிவை, நீடித்து நிலைக்கும் அழிவற்ற ஒன்றின் உயிரை எடுப்பது என அழைக்கிறார். அவர் கூறுகிறார்: ‘இந்தியா இப்போது செய்துள்ளதெல்லாம் எல்லாவிதமான முறையான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற பாசாங்குகூட இல்லாமல் மக்களின் உடமைகளைக் கொள்ளையிட்ட செயல் ஒரு மாபெரும் திருட்டு. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை 

 மோடியின் கோடீஸ்வர நண்பர்களில் ஒருவர்கூட (வங்கிகளின் முன்) பாம்பின் வாலைப்போல நீண்டுவரும் வரிசைகளில் காணப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது! அந்தத் தீத்தழும்புகளைத் தாங்கிக் கொண்டவர்கள் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே. மக்கள் வங்கிகள் முன்பும், ATMகள் முன்பும் காத்து நிற்பதைப் பற்றி மோடி என்ன கூறுகிறார்? டிசம்பர் 3ல், ‘சர்க்கரைக்காக, கோதுமைக்காக, மண்ணெண்ணைக்காக நிற்பதுபோல் நிற்கிறார்கள்’ என்று மோடி கூறினார். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததைப் பொருத்தமற்ற வகையில் மோடி கூறுகிறார்! அவ்வாறு கூறியது எங்கு? தனது காவிப்பட்டாளங்களான பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நவம்பர் 22ல் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இருந்துகொண்டு மோடி இவ்வாறு பேசினார்.

பாராளுமன்றத்தில் மௌனம் 

 ஆனால், பாராளுமன்ற அமைப்புமுறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நியதிகளின்படி, டிசம்பர் 6ல் பாராளுமன்றம் குளிர்காலக் கூட்டத் தொடருக்காகக் கூட்டப்பட்டபோது, பிரதமர் ஒரு விரிவான அறிக்கையைத் தந்து அதன்மீது விவாதங்களைத் துவக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மோடி மௌனமாகவே இருந்து கொண்டார். உண்மை நிகழ்வுகளையும், அவற்றின் விளக்கங்களையும் கொண்ட விமர்சனங்களுக்கு மோடியால் பதிலளிக்கவே முடியாது. அவரது பலமே கோஷங்களில் திளைப்பதுதான். ஆனால், அது பாராளுமன்ற விவாதங்களுக்குப் பொருத்தமற்றது. இதனால் மிகவும் எரிச்சலைடைந்த எதிர்த்தரப்பு மட்டுமீறிய நடவடிக்கைகளுக்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டது. மோடியோ, பாராளுமன்றத்துக்கு வெளியே தன்னை விமர்சிப்பவர்களைத் தாக்கினார். அவரது தாக்குதல் அவர்களது மதிப்பீடுகள் மீது அல்ல: அவர்களது நேர்மைத்தன்மைக்குச் சவால் விட்டுக் கொண்டி ருந்தார்!

 இது ’முற்றிலும் தனக்கே உரியது இந்த அரசு’ என்று கருதிக் கொள்ளும் வகையிலான அரசு நிர்வகிப்பாகும். அவர் அடிக்கடி மேற்கொண்டுவரும் வெளிநாட்டுச் சுற்றுலா இரண்டு அடுக்கு நோக்கங்களைக் கொண்டது. உள்நாட்டு மக்களிடம் ஒரு கருத்தை அழுந்தப் பதிய வைப்பதும், மாபெரும் உச்சத்தைத் தொடத் தனது வழிமுறைகளை வசப்படுத்திக் கொள்வதும் ஆகும். 2016ன் இறுதியில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை (கசாப்பு செய்வதுபோல்) சிதைக்கப் பட்டுவிட்டது. சீனா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, மியன்மார் மற்றும் ரஷ்யாவுடனான அதன் உறவுகள் 2014 மே-யில் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற காலத்தைவிடவும் மிகமிக மோசமாகிவிட்டன. அவரிடம் அவரது கட்சியும் மதிப்பிழந்துவிட்டது. மூத்த தலைவர்கள் அனைவரும் செயற்கையான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு மூலைகளில் தூக்கியெறியப் பட்டுவிட்டார்கள். இப்போது மோடி கட்சியைவிட மட்டுமல்ல: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைவிடவும் கூட மேலெழுந்து நிற்கிறார். சர்வாதிகாரத்தை நோக்கி உயர்ந்து செல்ல மோடி கடைபிடித்து வரும் பயணத்தைக் காலம்தான் வெளிப்படுத்துகிறது. நிர்வாகத்தின் தொனியும், குடிமைப் பணியாளர்களின் மனப்பான்மைகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

 மதச்சார்பின்மையின் மதிப்பியல்கள், எத்தகைய விரிவான விளக்கங்களும் தேவைப்படாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களும் கலாச்சார நிறுவனங்களும் ஒழுங்கற்ற கட்சிவெறியினரால் நிரப்பப்பட்டு விட்டன. - இதுதான் ‘குஜராத் மாதிரி’யான விளையாட்டு. உலக அளவில் நாட்டின் நேர்மைத் தன்மை மிகவும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுவிட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட ‘உலக அளவிலான மத சுதந்திரம்’ பற்றிய அமெரிக்காவின் அறிக்கை இந்திய சூழல்களைத் தொகுத்து அளித்திருக்கிறது: ‘2015ல் மதசகிப்புத்தன்மை படுமோசமாக சீரழிக்கப்பட்டுவிட்டது. மதம்சார்ந்த சுதந்திரத்தின் மீதான அவமதிப்புக்கள் பெருகி வருகின்றன. சிறுபான்மைச் சமுதாயங்கள் - குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் பெரும்பாலும் இந்துத்துவ தேசியக் குழுவினரால் அச்சுறுத்தப்பட்டு, மீண்டும் மீண்டும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகிற, வன்முறைகளுக்குப் பலியாகிற நிகழ்வுகள் அன்றாட அனுபவங்களாகி வருகின்றன. ஆளும் பாஜகவின் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுக்களை ஆதரிப்பதோடு, பதட்டங்களைப் பற்றியெரியச் செய்யும் மதவெறிக் கூப்பாடுகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

 இந்தப் பிரச்சனைகள், நீண்ட காலமாக காவல் துறைக்குள் நிலைபெற்றுள்ள ஒருசார்புத்தன்மை, நீதித்துறையின் போதாமை போன்ற பிரச்சனைகளுடன் சேர்ந்து குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பித்துச் செல்கின்ற ஒரு பரவலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் செயல்கள் நடைபெறும்போது, மதச் சிறுபான்மைச் சமுதாயத்தினர் எந்தவிதமான போக்கிடமும் இல்லாத பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்கள். இந்த நிகழ்வுகளின் போதெல்லாம் பிரதமர் மோடி அர்த்தம் நிறைந்த மௌனங்களில் மூழ்கிப் போகிறார்!

 ஒரு வகையில் தனக்கு இணையான, முன்னுதாரணங்கள் இல்லாத, தன்னிகரற்ற தலைவர் என்று மோடி தன்னைப் பற்றி தானே வியந்து கூறிக்கொள்வது சரியானதுதான். இத்தகைய பிளவுபடுத்தும் ஒரு தலைவரைப் பிரதமராகப் பெறுவதற்கான சாபத்தை இந்த தேசம் கொண்டிருக்கிறது... அவர் தேசிய அளவில் தனது ‘குஜராத் மாதிரி’யை, அரசியல் சார்ந்த விவாதங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு நம்பிக்கையுடன் பின்பற்றி வருகிறார். நவம்பர் 22ல் ‘எதிர்க்கட்சிகள் ஊழல் நிறைந்தவை’ (தி ஹிந்து- நவம்பர் 23) என்று குற்றம் சாட்டினார். டிசம்பர் 27ல் எதிர்க்கட்சியினரின் நியாயமான விமர்சனங்களுக்காக அவர்களை. ‘சோரோன் கி சர்தார்’ -’திருடர்களின் தலைவர்கள்’ என்று மிகக்கடுமையாகக் கண்டனங்களைப் பொழிந்தார்! சர்வாதிகாரியாக வேண்டும் என்ற மோடியின் பேராசைகள் மூடிமறைக்கப் படவில்லை. மோடி தன்னைத்தானே ஒரு ’சௌகிதார் - காவல்காரன்’ என்று அழைத்துக் கொண்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 28) இது ஜனநாயகம் என்ற மகத்தான கோட்பாட்டின் மீதான அச்சுறுத்தல்.

 முதலாளித்துவ எதிர்க்கட்சிகளோ, பிளவுபட்டிருப்பதைவிட மோசமாக உள்ளன. அவை திறமையற்றவைகளாக உள்ளன. நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 முடிய உள்ள காலகட்டத்தின் மொத்த நிகழ்வுகளையும் பதிவுசெய்யும் வகையில், ‘ஏழைகளின் மீதான மோடியின் யுத்தத்தை’ உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கை தயாரித்திருக்க வேண்டும். அதில் அவர் உதிர்த்த பேச்சுக்களையும், ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு வளைந்து வளைந்து செல்லும் அவரது முட்டாள்தனமான முடிவுகளையும், மக்களின் துயரங்களையும், வங்கிகள் ATMகளின்முன் நீண்டுகிடக்கும் வரிசைகளையும், பொருளாதாரத்துக்கு இழைக்கப்பட்டுள்ள தீமைகளையும், அதனால் ஏற்பட்ட மரணங்களையும் அந்த வெள்ளை அறிக்கை கொண்டிருக்க வேண்டும்.

நரேந்திர மோடி ஒரு வலிமைமிக்க தலைவர் அல்ல, அவர் திறமையற்ற ஒருவர். அவரது தோல்விகள் அவரை நீர்க்குமிழிகளுக்குள் துரத்துகின்றன. டிசம்பர் 27ல் அவர் கூறிக்கொண்டார்: ‘ஒரே அடியில் ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை விதித்ததன்மூலம் நாம், தீவிரவாதிகளின், போதை மருந்து மஃபியா கும்பல்களின், சட்டத்துக்குப் புறம்பான வியாபாரங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாக்களின் உலகத்தையே அழித்துவிட்டோம்’. (தி ஹிந்து டிசம்பர் 23) சிரிக்காதீர்கள்; இதைவிட இன்னும் மோசமான உளறல்களுக்குத் தயாராகிக் கொள்ளுங்கள். இவ்வாறு பேசக்கூடிய, ஒரு மருட்சி கொண்ட, சித்தம் கலங்கிய ஒரு பேர்வழி, விரக்திகளும் தோல்விகளும் குவியும்போது இதைவிட மோசமாக எதையும் செய்யக்கூடும். அவர் தனக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவுகளையோ, தோல்விகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த நாட்டின்மீது மிகக் கொடுமையான துரதிர்ஷ்டம் படிந்து விட்டது. நரேந்திர மோடியைப் பிரதமராகக் கொண்டிருப்பதன்மூலம் இந்தியா படு பாதாளத்துக்குள் வீழ்ந்து கிடக்கிறது.

(ஆங்கில மூலம் - ஏ.ஜி.நூரணி,  நன்றி: ஃப்ரண்ட் லைன் 2017 ஜனவரி 20)

மொழிபெயர்ப்பு – செ.நடேசன் 

Pin It