தொடர்புடைய படைப்புகள்

தோழர்களுக்கு,

சாதி ஒழிக்கப்பட வேண்டிய தீங்காக இல்லாமல் ஓர் ஒழுக்கமாகவே இந்த பொது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மதம், கலாச்சாரம், பண்பாடு, மொழி, இனம், நீதி, நேர்மை என அனைத்திற்கும் பின்னும் சாதியே அடிக்கட்டுமானமாக உள்ளது.

இந்த கேடு கெட்ட சாதியை அழிக்காமல் மனிதம் விலங்கில் இருந்து மாறுபட முடியாது. இன்னும் சொல்லப்போனால் மிருகங்களிடம் கூட இருக்கும் கூட்டு உணர்வு மனிதனிடம் இல்லமல் போனதற்கு சாதியே காரணம்.

ஆக சாதியை ஒழிப்பது தான் தன்னை ஒரு மனிதனாக உணர்பவரின் அடிப்படை கடமையாக இருக்கமுடியுமே தவிர நிச்சயமாக வேறு அல்ல.

இந்த புவிப்பரப்பு இதுவரை கண்ட அற்புதமான மானுடவியலாளர்களில் ஒருவரும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான புரட்சியாளர் ‘பாபா சாகேப்’ பி.ஆர். அம்பேத்கார் அவர்களை ’தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி ’ எனவும்,

நம் பஞ்சம, சூத்திரப் பட்டம் நீங்க தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் மூத்திர சட்டியுடன் சுற்றித் திரிந்து அல்லும் பகலும் அரும்பாடுபட்ட தந்தை பெரியாரை ‘வெறும் கடவுள் மறுப்பாளர்’ எனவும் நிறுவி, மிக எளிதாக இந்த நன்றி கெட்ட சமுதாயம் மேற்கண்ட இருவரையும் புறந்தள்ளிவிட முடிகின்றது என்றால் சாதியின் பலத்திற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

சாதி ஒரு சமூக நோய். இந்த பிணி நீக்கும் மருந்தாக நாம் பெரியாரையும் அம்பேத்காரையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர்தம் கொள்கைகளை வெகு மக்களிடம் சென்று சேர்ப்பது சாதி ஒழிப்பில் ஒரு முக்கிய பணி என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே, தோழர்களே... இதன் முதல் முயற்சியாக புரட்சியாளர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் நூல் தொகுப்புகளை www.pasumai.net.in இணையத்தில் வெளியிடும் பணியினை 'பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம்' மேற்கொண்டு வருகிறது.

தனிப்பட்ட நபர்களின் பொருளாதார நெருக்கடி இந்த பணியினை முடக்கி விட கூடாது என்ற வகையில் தங்களிடம் வேண்டுகோள் விடுகின்றோம். எனவே தோழர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி அளித்திட வேண்டுகிறோம்.

ஒரு பக்கம் தமிழில் தட்டச்சு செய்ய ரூபாய் 15/- ஆகின்றது. பெரியார் மற்றும் அம்பேத்கார் நூல் தொகுதிகளை சேர்த்தால் 10,000/- பக்கங்களுக்கு மேல் வருகின்றது. இச்செலவு மட்டுமல்லாது இணையதள செலவு, வலைப்பதிவேற்றம் செய்ய என ஒரு தொகுதிக்கு ரூபாய் 3,000/- செலவாகின்றது. அம்பேத்கர் நூல் தொகுப்பு 37 + பெரியார் நூல் தொகுதிகள் 33 வரையிலும் தட்டச்சு செய்து பதிவேற்றம் செய்ய மொத்தம் இப்பணிக்கு ரூபாய் 3,60,000/- தேவைப்படுகின்றது. இது வரையிலும் அம்பேத்கர் நூல் தொகுப்பில் 2,500/- பக்கங்களுக்கு மேல் தட்டச்சு செய்யப்பட்டு 7 தொகுதிகள் வலைப்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணி தொடர்ந்து நடைபெற, பெரியாரியல், அம்பேத்கரியலில் நம்பிக்கை உள்ள தோழர்கள் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகிறோம்.

இப்படிக்கு
செ.சரவணன்,
ஒருங்கிணைப்பாளர்,
பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம்

தொடர்புக்கு: 9840962881, 9444154881, 044-42620343 & இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:

Bank: IDBI bank, Parrys branch, Chennai.
S.B. A/c. No. : 0907104000134750
Name: S.Saravanan.
IFS Code: IBKL0000907

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.