‘இருபிறப்பாளர்கள்’ என கருதிக்கொள்ளும் பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டின் தொல்குடி மக்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள கைக்கொள்ளும் பல அணுகுமுறைகளில் ஒன்றுதான் தங்கள் உடம்பின் குறுக்கே அணியும் கயிறு. இந்த ’பூணூல்’ என்பது ஒரு சாதாரண கயிறாக மட்டுமே இல்லை; அது ஆதிக்கத்தையும், இன இழிவையும் குறிப்பதாகவே இருக்கிறது. பார்ப்பனியத்தைக் கடை பிடிப்பது மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. சாதியை கடை பிடிப்பது என்பது பார்ப்பனியத்தின் கொள்கையே. பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களே. எனவே சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக்கொள்வதும், சாதி அடையாளங்களை ஏற்று வாழ்வதும் பச்சைப் பார்ப்பனியம். இந்நாட்டில் சாதி என்பது ஒருவனுக்கு எத்தகைய சமூக நிலையை வழங்குகின்றது என்பதை அதை அனுபவிப்பவர்கள் உணர்வார்கள்.

சாதி என்பது ஒருவரின் தேர்வு அல்ல. அது பிறப்பால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பார்ப்பனப் பட்டம் என்பது வெறுமனே ஓர் இணைப்பு சொல் அல்ல. அது பார்ப்பனர்களுக்கு வழங்கிய உரிமைகள், சலுகைகள், வசதிகள், வாய்ப்புகள் வரலாறு நெடுகிலும் ஏராளம் உள்ளன. தகுதியும் திறமையும் இல்லாது போனலும் அந்த வெற்றுப் பட்டமே பார்ப்பனர்களை இந்நாள் வரையிலும் தாங்கிப் பிடித்திருக்கின்றது. வேள்வியில் முக்கிய பங்கினை பெற்றது முதல் அரச குடும்பத்து மகளிரைப் பெண்டாள்வது வரை பார்ப்பனர்கள் அனுபவித்த சலுகைகள் ஏராளம். பெரியார் குறிப்பிட்டதைப்போல், கள்ளிக்கடை, தாசி வீடு முதல் கடவுள் சந்நிதானம் வரை தங்களுக்கு என்று ஒரு இடமும் மற்றவர்களுக்கு ஒரு இடமும் ஏற்படுத்திக்கொண்டனர். உழைக்கும் மக்கள் அனைவரும் வரி கட்டி மாய்ந்த பொழுதும் எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் வருவாயும் உடல் சுகமும் அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள். ராஜ ராஜன் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகளே இதற்கு சான்று. இவ்வாறு இந்த பார்ப்பனப் பட்டம் அளித்த சலுகைகள் ஏராளம் ஏராளம்! இவ்வித சலுகைகள் அரசன் காலத்தோடு முற்றுப் பெறவில்லை. அதற்குப்பின் வந்த வெவ்வேறு அரசர் வம்சத்திலும், முகலாய, நாயக்க மன்னர்கள் முதற்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் மற்றும் சுதந்திர இந்தியா வரை இந்த சலுகைகள் வெவ்வேறு வடிவத்தில் தொடர்கின்றது. இந்தியாவின் அரசமைப்புச்சட்டதிலும் பார்ப்பனியம் தனக்கு பாதுகாப்பை தேடிக்கொண்டது. கர்பக் கிரகத்தில் காம லீலை அனுபவித்தாலும் பூசை செய்யும் உரிமை பார்ப்பானுக்கே உண்டு. கொலைக் குற்றவாளியானாலும் சங்கராச்சாரியாக தொடர பார்ப்பனுக்கே உரிமை உண்டு.

pranab mukerjee

வெறும் ’குடியரசுத் தலைவர்’ என்ற பதவியை விட அதி முக்கியத்துவம் வாய்ந்த பிற்ப்பால் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள பேருதவி புரியும் பார்ப்பனப் பட்டமே பெரிதும் தேவை என திருவாளர் பிரணாப் உணர்ந்துள்ளார்.

இந்து சட்டத்தைப் பொருத்தவரை இந்த கயிற்றை ( பூணூல்) அணிபவர்களைத் தவிர மற்ற அனைவரும் ’சூத்திரர்கள்’. இதை நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இன்றைய வரையிலும் கூட இதுதான் சட்டம்.

கீழ்க்கண்ட நீதிமன்றத் தீர்ப்புகள் இதை நன்கு விளக்குகின்றன.

S.A. 820 of 1906.
Muthusawmi Mudalliar and another
Versus
Masilamani alias Subramania Mudaliar and others என்ற வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் 1909 ஆம் ஆண்டு டிசம்ப 1-ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேற்கண்ட வழக்கானது ’கைக்கொல்லர்’ சாதியைச் சேர்ந்த கிருத்துவ பெண்ணுக்கும் அதே சாதியை சேர்ந்த இந்து ஆணுக்கும் இந்து முறைப்படி நடந்த திருமணம் செல்லுமா, செல்லாதா என்பது தொடர்பான வழக்காகும்.

மநு சூத்திரத்தின் பல்வேறு மேற்கோள்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் சங்கரன் நாயர் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சூத்திர சாதிகளுக்குள் நடைபெறும் திருமணம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.

தங்கள் தீர்ப்பில் “The term “Sudra” includes all, but those of the twice born classes, among Sudras. ” என்று விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி சூத்திரர் எனும் பதம் இரு பிறப்பாளர்களைத்தவிர மற்ற அனைவரையும் உள்ளடக்கியது.

மேலும் நீதிபதிகள் ’இரு பிறப்பாளர்’களான பிராமணர்கள் மற்றும் அவர்களின் முன்னால் உட்பிரிவுகளான சத்திரியர், வைசியர் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்களே என்றும் நிறுவியுள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டியது மேற்கண்ட இரு நீதிபதிகளும் கூட அவர்களின் தீர்ப்புப்படி சூத்திரர்களே!

“எனவே இந்தத் திருமணம் (கீழ்க்கண்ட காரணங்களால்) செல்லும்
1) பழக்கவழக்கத்தின் அடிப்படையில்
2) ஏனெனில் இது இந்து சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்து சட்டம் இருபிறப்பாளர்களைத் தவிர எந்த நபர்களுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை தடை செய்யவில்லை
3) எப்பொழுது அந்த சாதியின் உறுப்பினர்கள் இந்த திருமணத்தை சரியானதாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்களோ அந்தத் திருமணம் இந்து சட்டப்படி செல்லுபடியாகும்”
ஆக ’இருபிறப்பாளர்கள்’ (பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள்) தவிர அனைவரும் சூத்திரர்கள் என்பதும், சூத்திரர்களுக்குள் நடைபெறும் திருமணம் மட்டும் செல்லுபடியாகும் என்பதும், சூத்திரர்களுக்கும் இருபிறப்பாளர்களுக்கும் (பூணூல் அணியும் உரிமை பெற்றவர்கள்) நடைபெறும் திருமணம் இந்து சட்டத்தின்படி செல்லுபடியாகாது என்பதும் தெளிவாகின்றது.

சரி இப்பொழுது சூத்திரன் என்றால் என்ன என்ற கேள்விக்கு சட்டமும் சென்னை உயர் நீதி மன்றத் தீர்ப்பும், சட்ட பொருள் அகராதியும் என்ன சொல்கின்றது என்பதைப் பார்ப்போம்.

A.No. 74 of 1911.
Soundararajam, minor, by his mother and next friend Kannammal (Plaintiff) Versus
T.R.M.A.R.R. Arunachalam Chetty (died) and others. (Defendants)

என்ற வழக்கில் Sir John Edward Power Wallis, Kt., Chief Justice, Mr. Justice Ayling and Mr. Justice Sadasiva Aiyar, என்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தனது 23.3.1915 நாளிட்ட தீர்ப்பில் ,

சூத்திரன் என்பது முன்னர் ‘தாஸா’ என அழைக்கப்பட்டதாகவும் பின்னாளில் தான் சூத்திரன் என்ற பெயர் வந்தது எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட தீர்ப்பில், ”தாஸா என்றால் பொதுவாக அடிமை என்று பொருள். மேலும் 7 வகை அடிமைகள் இருந்ததாக மனுவும், 15 வகை அடிமைகள் இருந்ததாக நாரதரும் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர். படையில் தோற்றவர்கள், சேவைக்காக இருப்பவர்கள், பெண் அடிமைக்குப் பிறந்தவர்கள், விற்கப்பட்டவர்கள் முதலியவர்கள் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் சூத்திரர்கள்.

Manu in Chapter VIII, S. 415 describes a dasa or servant thus.

"There are servants of seven sorts; one made captive under a standard or in battle, one maintained in Consideration of service, one born of a female slave in the house, one sold, or given, or inherited from Ancestors and one enslaved by way of punishment on his inability to pay a large fine." Narada gives 15 Sources from which a Dasa can be drawn.

மேலும், முதன்மை நீதிபதி அவர்கள், "தாஸி என்பது தாஸா என்பதன் பெண் பால். தாஸா என்றால் முதலில் எதிரியைக் குறிக்கும். பின்பு அடிமையாக்கப்பட்ட பிடிபட்ட எதிரியைக் குறிக்கும். முதலில் தாஸா என்ற வார்த்தை தான் இருந்தது. பின்பு தான் சூத்திரன் என்ற சொல் அறிமுகமாகியது. தற்பொழுதும் இந்தியாவில் சூத்திரர்கள் ’தாஸா’ என்ற பின்னொட்டை பயன்படுத்துகின்றனர். பிராமண‌ர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘அய்யர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது போல......” என்று குறிப்பிடுகின்றார்.

The only; other question then is, was she a Dasi is the feminine of of dasa which according to MacDonnell's Vedic, Index Vol. I.P. 356, Vol, II P. 883 at first meant an enemy and was afterwards applied to conquered enemies reduced to a servile condition, The word dasa was long applied to this class, the term Sudra being introduced later, and even to this day dasa and dasi are in use in some parts of India as suffixes to Sudra names in the same way as Aiyar, etc., in the case of Brahmin names ..........

நீதிபதிகளுள் ஒருவரான் சதாசிவ அய்யர் “தாஸி என்றால் சாதாரணமாக சூத்திரப் பெண்” என்று குறிப்பிடுகின்றார். Sadasiva Aiyar, J.-I think "dasi," simply means a Sudra woman.]

தாஸா என்றால், ’பொதுவாக அடிமை, சூத்திரன், நான்காம் வர்ணத்தவன், சூத்திரனின் சாதிப் பட்டம். தாஸி என்றால் ‘பெண் வேலையாள்'. சூத்திரன் என்றால் மேல் சாதிக்காரர்களின் வேலைக்காரன் . சூத்திரர்களுக்கு என்று அங்கீகரிக்கப்பட்ட திருமண முறை என்று எதுவும் இல்லை.” என மநுவின் சுலோகங்களையும் இன்ன பிற தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக சூத்திரன் என்றால் அடிமை. தாசி என்றால் சூத்திரனின் பெண்பால். இப்பொழுது தாசி என்றால் என்ன என்று பார்ப்போம்.

’Law-Lexicon ’ என்ற சட்டப் பொருள் அகராதியில் குறிப்பிட்டுள்ள விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dasi “A non-Brahman female attendant upon a Nambudri woman. (Moore’ s Mal. Law)

தாசி: “ நம்பூதிரிப் பெண்ணுக்கு சேவை செய்யும் பார்ப்பனரல்லாத பெண் வேலையாள் ”

Dasi and Dasiputra. Although the primary meaning of the word ‘ dasi ’ in Hindu Law, is a slave, it includes also a concubine or a woman of the servile class in a secondary sense, and an unmarried Sudra woman kept as a continuous concubine comes within its scope. The off-spring of such a woman is a dasiputra. (7 M. 407. See also 28 Cal 194).

தாசா மற்றும் தாசிபுத்ரா: இந்து சட்டத்தின் படி தாசி என்ற சொல்லுக்கு முதன்மைப் பொருள் அடிமை என்றாலும் அது வைப்பாட்டி அல்லது அடிமை பிரிவைச் சேர்ந்த பெண் என்பதைக் குறிக்கும். மேலும் ’மணமாகாமல் நிரந்தர வைப்பாட்டியாக வைக்கப்பட்ட பெண்’ என்பதும் மேற்கண்ட விளக்கத்தின் கீழ் வரும்.

எனவே இந்தாட்டின் தொல்குடி மக்கள் அனைவரும் ‘வேசி மக்களே’ என்பதுதான் பார்ப்பனிய சட்டம் சொல்லும் விளக்கம். ஒவ்வொரு பார்ப்பனரும் தன் உடம்பின் குறுக்கே கட்டிக்கொள்ளும் கயிறு இதை வலியுறுத்தத்தானே அன்றி வேறெதற்காகவும் அல்ல.

உலகின் வேறு எந்த பகுதியிலும் இது போன்ற இழிவு செய்யும் விலங்காண்டித்தனம் நடைமுறையில் இல்லை. பார்ப்பனர்கள் தானாக இதை கைவிடுவார்கள் என எண்ணுவது கானல் நீரை நம்பி பயணம் செல்வது போலாகும். பூணூல் அணிவது அருவருப்பானது, இழிவானது, அவமானகரமானது என்பதை என சமூகம் உணராதவரை இதை சட்டத்தின் துணை கொண்டு கூட தடுத்துவிட முடியாது.

- செ.சரவணன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

Pin It