செப்டம்பர் 28ம் தேதி இரவு 10.30 மணி. உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரி அருகே உள்ள பிஸாரா என்ற கிராமத்தில் ஒரு குறுகிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் அஹ்லாக்கின் குடும்பத்தினர் நிம்மதியான தூக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். தூங்குவதற்கான விரிப்புகள் விரிக்கப்பட்டு கொண்டிருக்கும்பொழுதுதான், அந்த கொலைகாரக் கும்பல் வீட்டின் கதவை அடித்து உடைத்து, ஜெய் ஸ்ரீராம் என்ற கோசத்துடன் உள்ளே நுழைந்து, பசுவை ஏன் அறுத்தீர்கள் என கூறி அஹ்லாக்கை வெட்டி வீழ்த்தினர். தடுக்க வந்த அவரது 20 வயது மகன் தானிஷ் மீதும் கொடூரத் தாக்குதலை அந்தக் கும்பல் அரங்கேற்றியது. அஹ்லாக்கின் வீட்டுப் பெண்களையும் இந்த ராமரின் பிள்ளைகள் கொடூரமாகத் தாக்கினர்.

உலக நாடுகள் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகவும் வியப்பாக பார்க்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்துப் பிம்பங்களையும் இந்த சம்பவம் உடைத்து நொறுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்த வந்த உ.பி. போலீஸார் அஹ்லாக்கின் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி மாமிசத்தை தடயவியல் துறைக்கு அனுப்பி பரிசோதித்தது எவ்வளவு குரூரமானது. கடந்த 2002ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் கிராமத்தைச் சேர்ந்த 5 தலித்துகள் பசுவை அறுத்ததாகக் கூறி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அப்போதும் ஹரியானா காவல்துறை தலித்துகளின் கையில் இருந்த பசு ஏற்கனவே இறந்ததா... அல்லது அந்த ஐந்து பேரும் கொன்றார்களா என்பது குறித்து ஆராய பசுவை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். எவ்வளவு வினோதமான செயல்.

இந்திய நாட்டின் 80 சதவீத மக்கள் மாட்டு இறைச்சி உண்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். மிகவும் சிறுபான்மையான பார்ப்பனர்களுக்கு பசு கடவுள் என்றால் மற்றவர்களுக்கு அது உணவுப் பொருள். அப்படி இருக்கும்போது பசுவை உணவுக்காக அறுப்பதில் என்ன தவறு இருக்கிறது? எனது உணவு உரிமையைப் பறிக்க யாருக்கு அனுமதி இருக்கிறது? எனது உணவுத் தட்டில் பசுக் கறி வேண்டுமா அல்லது நாய்க் கறி வேண்டுமா என்று முடிவு செய்யக்கூடிய அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது.

நாடு முழுவதும் நடக்கின்ற இக்கொலை சம்பவங்களின் பின்னணியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற இயக்கத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த அமைப்பில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் குண்டர்களும் குற்றவாளிகளும்தான். மேனகா காந்தியின் தலைமையில் செயல்படுகின்ற இந்த மிருக வதைக்கு எதிரான அமைப்பு தன்னை என்.ஜி.ஓ என பதிவு செய்து விட்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இந்த என்.ஜி.ஓ அமைப்பு முசுலீம்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக பரப்புரை செய்து கொலைக்களங்களை உருவாக்கி வருகிறது. டீஸ்ட்டா செடல்வாட்டின் என்.ஜி.ஓ மீது மட்டும் கொடூர பார்வை பார்க்கும் சி.பி.ஐ.க்கு மேனகா காந்தியின் என்.ஜி.ஓ கண்ணில் படாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

அஹ்லாக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் சவுரப், கவுரவ் குப்தா ஆகியோர் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த அமைப்பின் கிளைகள் பக்ரீத் நாள்களில் இந்தியா முழுவதும் முசுலீம்களுக்கு குடைச்சலை கொடுத்திருக்கின்றன.

மேலும் உ.பியில் பாஜக தனது முழு அதிகாரத்தை நிலைபெறச் செய்ய பல்வேறு இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கி உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ராஷ்ட்ராவதி பிரதாப் சேனா, சமதான் சேனா ஆகிய பயங்கரவாத இயக்கங்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி இருக்கிறது. இந்த இயக்கங்களை வைத்து கொலைக்களங்களை உருவாக்கி வரும் ஆர்.எஸ்.எஸ் இந்த இயக்கங்கள் பரிவார இணைப்புக்குள் இல்லை என மறுதலிக்கிறது. இந்த அமைப்பைச் சார்ந்தவர்களும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் இணைந்துதான் அஹ்லாக் கொலையை அரங்கேற்றினார்கள்.

கடந்த செப்டம்பர் 16ம் தேதி முதற்கொண்டு பசுக் கன்று ஒன்றைக் காணவில்லை என வதந்தியை வாட்ஸ் அப் மூலம் பரப்பினர். அஹ்லாக் குடும்பத்தினர்தான் அந்த பசுக் கன்றுவை பக்ரீத்திற்காக அறுத்ததாக பொய்த்தகவலை பரப்புரை செய்து பிஸ்ராவில் உள்ள காளி கோவில் அர்ச்சகர் மூலம் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து இந்து மக்களை தூண்டி விட்டனர். அஹ்லாக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான்.

அஹ்லாக் கொலை பரபரப்பு அடங்குவதற்குள்ளாக உ.பி. ஹாமீர் பூர் பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த 90 வயது தலித் சமூகத்தைச் சார்ந்த முதியவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். காட்டு மிராண்டிகளின் தேசமாக இந்த நாடு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் தான் நமது பிரதமர் வாய்மூடி மவுனியாக டிஜிட்டல் இந்தியா குறித்து கதைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த கணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது உயிர் பாதுகாப்பு குறித்து சில தவிர்க்க முடியாத கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயம். அஹ்லாக்கின் வீட்டிற்கு 9 பேர் கொண்ட இந்துத்துவ பயங்கரவாதிகள்தான் வந்திருக்கிறார்கள். அஹ்லாக்கின் வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் உள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி இவர்களைத் தாக்கி இருந்தால் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள். இசுலாமிய சமூகத்தில் இருந்து கோழைத்தனம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இந்துத்துத்துவ பயங்கரவாதிகளை சந்திக்க ஒவ்வொரு வீட்டுப் பெண்ணும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வன்முறைக்கு தீர்வு கிடைக்கும்.

இந்திய சட்டமே உயிரை தற்பாதுகாத்துக்கொள்ள அனுமதி அளிக்கும்போது, இன்னும் தயக்கம் ஏன்? இந்த பயங்கரவாதிகளை எதிர்கொள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளும் தயாராக இருந்தால் இவர்கள் குறித்து பதட்டப்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஆதிக்க சக்திகளின் படை கோழைகளின் கூட்டம் எனபதுதான் வரலாறு. அதை ஒடுக்கப்பட்டவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு திரிசூலங்களுடனும் ஆயுதங்களுடனும் நமது தெருவுக்குள் வீட்டுக்குள் நுழையும் இவர்களை அடித்து துரத்துவோம்.

- ஷாகுல் ஹமீது

Pin It