தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் நடந்த ஒன்றியக் குழு கூட்டத்தில் சேர்மனுக்கும், துணை சேர்மனுக்கும் 13.08.12 அன்று மோதல் அரங்கேறியுள்ளது. சேர்மன் காந்தி என்ற காமாட்சியும், துணை சேர்மன் ஜெயலலிதாவும் அதிமுகவை சேர்ந்தவர்கள். சேர்மன் மீது 10 கோடி நிலமோசடி புகாரை ஜெயலலிதா தெரிவித்தாராம். அவருக்கு உட்கார நாற்காலி கூட கொடுக்கவில்லையாம். அதனால் மோதல் என்கின்றனர். சேர்மன் தரப்பிலோ எங்கள் பக்கம் தவறே இல்லை என்கின்றனர்.

மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியனும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரையும், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயனும் சேர்மன் காமாட்சிக்கு ஆதரவு. கயத்தார் ஒன்றியத்தில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சேர்மன்  திருமதி. பெருமாள் அவரது நாற்காலியில் கூட அவரால் உட்காரவே முடியாது. துணை சேர்மன் மாணிக்கராஜாதான் எல்லாமுமே. சேர்மன் அறையில் எப்போதும் மாணிக்கராஜா மட்டும்தான் அமர்ந்திருப்பார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான கயத்தார் சேர்மன் பெருமாள், ஓட்டப்பிடாரம் துணை சேர்மன் ஜெயலலிதா இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள், பெண்கள். அவர்களிடம் உள்ள ஒரே தவறு இருவரும் இந்து பள்ளர் என்கின்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஓட்டப்பிடாரம் சேர்மன் காந்தி என்ற காமாட்சி நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். கயத்தார் ஒன்றிய துணை சேர்மன் மாணிக்கராஜா தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் அதிகாரத்திற்கு வருவதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரியவில்லை. கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அது எதுவரை?

இதெல்லாம் எந்த நடுநிலை ஊடகத்திலும் வெளிவராது.. ஏனென்றால் அதற்கெல்லாம் கொஞ்சமாவது தைரியம் இருக்கணும்!..

- ஜெ.பிரபாகர்

Pin It