kurdista 350சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தைநோக்கி இசுலாமியப் பயங்கரவாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே வாழ் மக்கள் இசுலாமிய அவர்களைஎதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கொபனே வாழ் குர்திஸ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் சென்ற நவம்பர் முதல் நாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

குர்திஸ்தான் மக்களைப் பாதுகாப்பதற்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்று பல்வேறு இனமக்கள் சேர்ந்து குரல் கொடுத்தனர்.

அந்த அடிப்படையில் பிரான்சில்ச் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தின.

அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, அனைத்துலக ஈழத் தமிழர் அவை, மகளிர் அமைப்பு, இளையோர் அமைப்பு ஆகியோர் சேர்ந்து குர்திஸ்தான் இன மக்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவை அளித்தனர்.

விடுதலைக்கு உலக மக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தென் ஆப்பிரிக்கப் போராட்டத்துக்கு பிறகு இன்று குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவாக உலக மக்களின் குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Pin It