சுத்திர தீப் சக்கரவர்த்தி ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். கோத்ராவில் 2002ஆம் ஆண்டு நடந்த இரயில் எரிப்பை மையப்படுத்தித்தான் குஜராத் 2002 இனப்படுகொலைகளை சங்கப்பரிவாரம் நடத்திக்காட்டிற்று. அதற்கு இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதனை 2002 குஜராத் இனப்படுகொலை என்றும், மோடியின் மனித இனத்திற்கெதிரான குற்றம் என்றும் உலகெங்கும் அழைக்கிறார்கள்.

sutradeep chakravarthyஇந்த இனப்படுகொலைகளுக்காக மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் அடைக்கலாம் என ஏ.ஜி. நூரானி என்ற மூத்த வழக்கறிஞரும், பிரபலமான பத்திரிக்கையாளரும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றார்.ஆனால் ஜனநாயகம் எனும் கபடநாடகத்தில் சிறையிலிருக்க வேண்டிய மோடி சிம்மாசனத்தில் இருக்கின்றார்.

குஜராத்தில் 20,000 முஸ்லிம்களை கொலை செய்யப்பட்ட மொத்த நிகழ்விற்கும் குஜராத்தில் கோத்ரா என்ற இடத்தில் உள்ள இரயில் நிலையத்தைத்தான் காரணம் காட்டினார்கள்.இந்த இரயில் நிலையத்திலிருந்து சற்று வெளியேதான் சபர்பதி எக்ஸ்பிரஸ் என்ற இரயிலின் இரண்டு பெட்டிகள் எரிக்கப்பட்டன. இந்த இரயில் பெட்டிகளை கொளுத்தியதாக முஸ்லிம்கள் மேல் பழி. படுகொலைகள்.

ஆனால் இரயில் பெட்டிகள் எரிந்தது உள்ளிருப்பு என்பது பின்னர் தெரியவந்தது. இதனை மிகவும் ஆதாரப்பூர்வமான ஆவணப்படமாக தயார் செய்தவர் சுத்திர தீப் சக்கரவர்த்தி.அதில் வெளியிலிருந்து இரயில் பெட்டியை நோக்கி பெட்ரோலை வீசி இருக்கவியலாது ஏனெனில் இரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்த இடம் மிகவும் மேடானது. ஒரு மலை முகட்டின் மேல் நின்றுக் கொண்டிருந்த இரயில் பெட்டியின் மீது கீழிருந்து யாரும் பெட் ரோலை ஊற்றி இருக்கவியலாது என்பதை ஆணித்தரமாக படக் காட்சிகளின் மூலம் நிருபித்தார்.

சுத்திர தீப் சக்கரவர்த்தியின் ஆவணப்படத்தை பார்த்தவர்கள் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு என்பது ஒரு போலி நாடகம் என்பதை புரிந்துக் கொண்டார்கள்.இதில் சுத்திர தீப் சக்கரவத்தியிடம் பாராட்ட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அவர் இந்த ஆவணப்படத்தை மோடியின் ஆட்சியின் போதே குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் திரையிட்டுக் காட்டினார். தங்களுடைய சதித்திட்டமும், உண்மையும் உலகமக்களுக்குத் தெரிந்திட வந்ததைக் கண்டு, ஆத்திரமடைந்த சங்கபரிவாரத்தினர் - அதாவது மோடியின் வகையறாக்கள் அவரை தாக்கினார்கள். இரத்தம் சிந்த வைத்தார்கள். அவருடைய திரைப்பட கருவிகளை உடைத்தெரிந்தார்கள். அத்தனையையும் தாங்கினார் சுத்திர தீப் சக்கரவர்த்தி. ஆனாலும் தனது முயற்சியை கைவிடவில்லை. தனது ஆவணப்படத்தை நாட்டின் முக்கியத் தலை நகரங்களிலெல்லாம் வெளியிட்டுக்கொண்டே வந்தார். அப்போது அவர் சென்னை வந்திருந்த போது நாம் அவரை வரவேற்று, சிறியதொரு நிதி உதவியையும் செய்தோம். அவருடைய பேட்டி ஒன்றும் நம்முடைய பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது.

பின்னர் உலகின் பல அரங்கங்களிலும் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் சுத்திரதீப் சக்கரவர்த்தி அவர்கள்.இவர் கோத்ராவில் நடந்த இரயில் எரிப்பு பற்றிய மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்திய பின்னர், சங்கபரிவாரத்தின் உண்மை முகம் உலகுக்கு வெளிச்சமானது. தொடர்ந்து லல்லுபிராசத் அவர்கள், நீதி, Î.C..பானர்ஜி அவர்களின் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை நியமித்தார்கள்.

அந்த கமிஷன் " இரயில் பெட்டியின் உள்ளேயிருந்துதான் தீப்பிடித்திருக்கின்றது. அது வெளியே உள்ளவர்களின் வேலை அல்ல. " என்பதை வெளிப்படுத்தியது.இதற்கு முன்னால் டெல்லியில் ஒரு இரயிலில் இதே போல் தீப்பிடித்திருக்கின்றது, என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி முஸ்லிம்களுக்கும், கோத்ரா இரயில் நிலையத்திற்கு அருகாமையில் நடந்த இரயில் பெட்டி எரிப்பிற்கும், எந்த சம்பந்தமுமில்லை என்பதை தெளிவுப்படுத்தினார்.

ஆனால் இந்த கமிஷனின் அறிக்கை வெளியே வந்து விடாமல் தடுத்து விட்டார்கள். மோடிப்பேரவையாக இயங்கிய குஜராத் நீதி மன்றங்கள் அதை மறுத்து விட்டன. இத்தனையையும் இவருடைய " கோத்ர அட்டாக் " [gotra attack] எனும் ஆவணப்படம் சாதித்துக் காட்டியது. ஆனால் இரயில் பெட்டிகளில் தீவைத்தது, அதில் பயணம் செய்த கரசேவகர்களா என்பதை பற்றி ஆய்வு செய்திட அனுமதிக்கவில்லை அதிகார வர்க்கத்தினர்.

எதிர் தாக்குதல்கள்

இந்தியாவில் முஸ்லிம்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களைக் கொலை செய்தால் அதைக் காவல் துறை அதிகாரிகள் செய்தால் அவர்களுக்கு பதவி உயர்வும், பதக்கங்களும், பாராட்டுக்களும் கிடைக்கும். இப்படி பல இளைஞர்கள் குஜராத்திலும், டெல்லியிலும், இப்போது தமிழகத்திலும் கொலை செய்யப்படுக்கின்றார்கள். இவற்றிற்கு எதிர் தாக்குதல் என்று பெயர். இந்த அநீதிகளுக்கு எதிராக ஆவணப்படங்களை தயாரித்தார்கள் சுத்திர தீப் சக்கரவர்த்தி அவர்கள்.

அந்த ஆவணப்படத்தின் குறுந்தகடுகளை விநியோகிப்பதிலும் தாருல் இஸ்லாம் தனது பங்களிப்புகளை தாராளமாக தந்தது. அந்த ஆவணப்படத்திற்கு காவிகளுக்காக நடக்கும் எதிர் தாக்குதல் என்ற கொலைகள் என்று பெயர் வைத்திருந்தார்.

வழக்கறிஞர்கள் கொலை

இந்திய தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் மராட்டிய மாநிலம்தான். இங்கே உள்ள சித்பவன் எனும் இடத்திலிருந்துதான் அத்தனை சங்கப் பரிவார பாசிஸ்ட்டுகளும் பெருக்கெடுத்து வருகின்றார்கள். விடுதலையடைந்த இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே, பாபரி மஸ்ஜித்தை இடிக்க வகை செய்து தந்த தீவிரவாதி நரசிம்மராவ் ( இவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார்) இவர்களையும் மும்பைத் தாக்குதலை நடத்திய அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பையும், சிவசேனா என்ற அமைப்பையும் தந்த மாநிலம் மராட்டிய மாநிலம்.

இப்படி பாசிசத்தின் பிறப்பிடமாகிய மராட்டிய மாநிலத்தில் இன்னொரு தீவிரவாதம் தொடங்கியது. அது அப்பாவி முஸ்லிம்களுக்காக வாதாடும் முஸ்லிம் வழக்கறிஞர்களை சுட்டு கொலை செய்தது. மும்பையில் மஜீத் மேமன் என்ற வழக்கறிஞர் மும்பையில் பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்காக தானாக முன்வந்து வழக்காடினார்.

அவரை கொல்வதற்காக துப்பாக்கியால் சுட்டார்கள். அவருடைய மெய்க்காப்பாளர் அந்த துப்பாக்கிக் குண்டை தன் மார்பில் வாங்கி ஷஹீதானார். மேமன் உயிர்த் தப்பினார். ( இன்னா லில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளூவோம் ).

அதே போல் பல அப்பாவி முஸ்லிம்களுக்காக வாதாடி அவர்களை சிறையிலிருந்து மீட்டவர் ஷஹீத் அப்பாஸ் ஹாஸ்மி. அவர் மீது சரமாரியாக குண்டு மழையைப் பொழிந்து கொலை செய்தார்கள். சங்கப்பரிவாரத்தினர். இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து ஓர் ஆவணப்படத்தைத் தயார் செய்தார் சுத்திர தீப் சக்கரவர்த்தி! அதற்கு "நீதிமன்றத்திற்கு வெளியே முடிந்த தீர்ப்புகள் " () என பெயர் வைத்து ஆவணப்படம் ஒன்றைத் தயார் செய்தார். சங்கப்பரிவாரத்தின் வெறியாட்டங்களை உலகறிய செய்தார்.

"குற்றமற்றவர்கள்" நீதிமன்றங்கள்

நமது மத்திய உளவுத்துறை அதன் கட்டுப்பாட்டில் இயங்கிடும் காவல்துறையினர் இவர்களையெல்லாம் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வையும், அதன் மூலம், அவர்களைச் சார்ந்து வாழும் பெற்றோர்களையும் சின்னாப் பின்னமாக்கி சீரழித்து வரு கின்றார்கள். இதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களுள் ஒன்று ஓர் இளைஞனைப் பிடித்து நாடெல்லாம் ந்டக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இவர்களே காரணம் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறிவிடுவார்கள்.இதனால் இந்த இளைஞர்கள் நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்தி தங்களை விடுவித்திட வேண்டிய இமாலயப் பொறுப்பை சுமக்கிறார்கள்.

பெரும்பாலும் நமது தாய்மார்கள் தான் இந்தப் பெரும் பொறுப்பை சுமக்கிறார்கள். இவர்கள் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டாலும் அவர்களை குற்ற வாளிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் தான் உளவுத்துறையும், காவல் துறையும் பார்க்கிறது. விடுதலை அடைந்தவர்களை வேறு ஏதேனும் வழக்குகளில் இணைத்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுவந்திட ஓர் ஆவணப்படத்தைத் தயார் செய்தார் சுத்திர தீப் சக்கர வர்த்தி. அதற்கு " புயலுக்குப் பின் அமைதி இல்லை " என்ற பெயரில் வெளியிட்டார்.

முசாபர் நகர் அநீதி[உத்திரப்பிரதேசம்]

உத்திரப்பிரதேசத்தில் 130 கலவரங்களை நடத்தி 72 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றினார்கள் பாசிச பரிவாராத்தினர்.இதில் மிகப்பெரிய படுகொலையாக நடந்தது முசாபர் நகர் கலவரம். அங்கே வாழ்ந்த முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள்.அவ்வாறு வெளியேற்றப் பட்டவர்களின் எண்ணிக்கை அகதிகள் முகாம்களில் 63,000 பேர் என முடிந்தது. முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறினால்தான் மீண்டும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியும் என்ற நிலை. ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிட முடியாது என்று கூறிவிட்டார்கள்.

muslim refugee camp

அதனால் அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்கும், வீடுகளுக்கும் திரும்பிட இயலவில்லை.முஸ்லிம்கள் ஐந்து இலட்சம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தங்கள் இல்லங்களுக்குச் சென்றிடக் கூடாது. என முலாயம் சிங் - இன் அரசு எழுதி வாங்கியது. விடுதலையடைந்த இந்தியாவில் இதனையத்ததோர் கோர நிகழ்வு நடந்ததே இல்லை.

இந்த முலாயம் சிங் - இன் அரசுக்குத்தான் முஸ்லிம்கள் சட்டசபை தேர்தலில் தங்கள் வாக்குகளை அள்ளித் தந்தார்கள்.அடுத்து முலாயம் சிங் - இன் சார்பில் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்தும் அகிலேஷ் யாதவ், "144" ஊரடங்கு உத்தரவு செயலிலிருக்கும் போதே சங்கப்பரிவாரம். ஒரு லட்சம் இந்துத் தீவிரவாதிகளை ஒன்று திரட்டி வகுப்புக் கலவரங்களை நடத்தி முடித்தார்கள். அகதிகளாகவும் ஆனார்கள் முஸ்லிம்கள்.

அந்த அகதிகள் முகாம்களில் கூட நிம்மதியாக வாழ்ந்திட விடவில்லை அகிலேஷ் யாதவ். அகதிகள் முகாம்கள் தனது அரசுக்கு அவமானமாகவும் உலக அளவில் நெருக்கடிகள் வருவதாகவும் கூறினார். முஸ்லிம்கள் அனைவரும் உடனே அகதிகள் முகாம்களைக் காலிசெய்துவிட்டு வெளியேறிட வேண்டும் என்றார். மாற்று ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.அகதிகள் முகாம்களிலிருந்தும் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமான இடங்களில் சென்று தங்கினார்கள். அவையெல்லாம் அரசாங்க இடம் என்றும், அவற்றில் தங்கி இருப்பதின் மூலம் அவர்கள் அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் வழக்குகளை பதிவு செய்தார்கள். இதுதான் கஷ்டங்களிலும், நஷ்டங்களிலும் தங்களது கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்களுக்கு தந்த சன்மானம்.

இந்த உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 69 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் சடலங்களாக வீற்றிருக்கின்றார்கள்.ஜனநாயகம்! அதிகமான சட்டசபை இடங்கள் இவையெல்லாம் அகதிகள் முகாம்களில் கூட உதவி செய்யாது.என்பதன் நிதர்சனமான எடுத்துக்காட்டுதான் உத்திரபிரதேசமும் முசாபர் நகர்களும். இவற்றையெல்லாம் ஆவணப்படமாக்கினார் சுத்திர தீப் சக்கரவர்த்தி....ஆனால் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.இந்த ஆவணப்படம் வெளிவராத நிலையில் தனது 42 வது வயதில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் ஆகஸ்ட் 25 ஆம் நாள் 2014 மரணமடைந்தார்கள். சுத்திர தீப் சக்கரவர்த்தி. அடுக்கடுக்கான அநீதிகளுக்கு ஆளாகி நிற்கும், முஸ்லிம்களின் அவலங்களை மக்கள் மன்றத்திற்கு தந்துக் கொண்டிருந்த விளக்கு அணைந்தது.-

- எம்.ஜி.எம்.

Pin It