பாரதீய ஜனதா கட்சி தேர்தகள் வரும் இடங்களில் கலவரமே எங்கள் வழி என்பதை நிரூபித்து வருகின்றது. ஓட்டுக்காக குண்டுவெடிப்பையும் நடத்திட இவை தயங்குவதில்லை. பாட்னாவில் வைத்த குண்டுகள்தாம் பீகாரிலும், ஆந்திராவிலும் அவர்களுக்கு பலன்களை பெற்றுத் தந்துள்ளது.

bengal bomb blast

2006 - இல் மேற்கு வங்கத்தில் பர்துவான் எனும் இடத்தில் குண்டு ஒன்று வெடித்தது. அது குண்டுகளைத் தயாரித்து கொண்டிருந்தவர்களின் வியாபார இடம். குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தவர்கள், குண்டு வெடிப்பில் உயிரை இழந்தவர்கள் என அத்தனை பேரும் முஸ்லிம்கள். இது பாரதீய ஜனதா கட்சியை மேற்கு வங்கத்தில் வளர்க்க வழிதெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அழகான வாய்ப்பாகப் போனது.

குண்டுகள் வெடித்த உடனேயே வங்காளதேச தீவிரவாதம் இந்தியாவுக்குள் பாய்ந்து வந்துவிட்டது எனக்கூப்பாடு போட்டு அரசியலில் இலாபங்களைத் தேடிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார்கள். நமது உளவுத்துறை இதற்கான தாளங்களை போட்டது. மக்கள் பெருமதிப்போடு போற்றி வந்த ' NIA 'என்ற நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸியும் இதற்கு துணைபோனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பர்துவானில் நடந்த குண்டுவெடிப்பு அந்த மொஹல்லாவில் வாழ்ந்த முஸ்லிம்களையும் ஏன் மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஆகிய மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களையும் மத்திய உளவுத்துறையையும், தேசிய புலானாய்வுக் குழுவையும் ஏவிவிட்டு கபளிகரப்படுத்தினார்கள். பின்னர் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பதால் வங்காள தேசம் என்ற நமது அண்டை நாட்டுக்குச் சென்று ஆய்வுகளை நடத்துகிறோம் எனக் கூறி அங்கே சென்றுள்ளார்கள்.இந்த கபளிகரத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த மாணவன் ஒருவனை நெருப்பிட்டுக் கொளுத்த முயற்சி செய்துள்ளார்கள். அங்கே இருக்கும் அரசு இஸ்லாத்திற்கு எதிரானது. அது நமது உளவுத்துறைக்கு பெரிய அளவில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மேற்குவங்க முஸ்லிம்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்ட டெல்லியிலுள்ள மஜ்லிசே முஷாவரத் என்ற அமைப்பு களமிறங்கி உண்மைகளைக் கண்டறிந்திட முன்வந்தது.

இந்த குழு கண்டறிந்த உண்மைகளை இங்கே தருகிறோம் :

1. குண்டுகளை தயாரித்த காங்கிரகார்க் இல்லத்தில் குண்டுகளை தயாரிக்கும் பணி பல மாதங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இது அந்தப் பகுதியுலுள்ள காவல் நிலையத்திற்கு நன்றாகத் தெரியும். அதே போல் அங்குள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் நன்றாகத் தெரியும். எந்த அளவுக்கு என்றால் ஓர் அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே கட்டிடத்தில் காங்கிரகார்க் இல்லத்தில் தனது கட்சி அலுவலகத்தைத் தொடங்கியது. இதனால் காவல்துறையினர் மிகவும் அதிகமாக வந்து போகும் இடங்களில் ஒன்று இந்த காக்கிரா கார்க் இல்லம்.

2. குண்டுகளைத் தயாரித்தவர்கள் அவற்றை அரசியல்வாதிகளுக்கும், குண்டர்களுக்கும் விற்று வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இந்த உண்மையை அனைவரும் அறிவார்கள். குண்டுகளைத் தயாரித்தவர்கள் அரசியல் வாதிகளும், குண்டர்களும் தந்த ஆதரவில் சொ வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்தாம். இதனால் அவர்கள் அந்த பகுதியில் மிகுந்த ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருந்தாரகள். இந்த உண்மைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டே ஊடகங்கள் முஸ்லிம்களை மிகவும் கேவலமாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றது.

3. பாரதீய ஜனதா கட்சியினருக்கும் இந்தக் கூட்டத்தோடு அதாவது குண்டு தயாரிக்கும் கூட்டத்தோடு தொடர்பு உண்டு என எல்லோரும் கூறுகின்றார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் கட்சியாகிய திரினாமுல் காங்கிரஸ் தான் ஆட்சி செலுத்தி வருகின்றது.அதனிடமிருந்து பிர்பூம், பர்துவான் மற்றும் நாதியா ஆகிய மாவட்டங்களைக் கைப்பற்றிட பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகின்றது. இந்த மாவட்டங்களில் தன்னை நிலைபெறச் செய்திட குண்டு வெடிப்பு அரசியல் பெரிய அளவில் உதவுமென பாரதீய ஜனதா கட்சி நம்புகிறது.

இதனால் 2016 தேர்தலை மையப்படுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிகள் இன்னும் அதிகமாக நடக்கலாம் என மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அஞ்சுகின்றார்கள்.-

அல் - இந்தியா மஜ்லிசே முஷாவரத் 155, Kasayar Road, Kolkata – 700017

Pin It