பொது நலம் மறைஞ்சு போச்சு
சுய நலமோ பெருகிப் போச்சு!
விளை நிலங்கள் அழிஞ்சுப் போச்சு
விவசாயியின் நிலைகள் கண்ணீரில் மூழ்கிப் போச்சு
குடிசைகள் எல்லாம் கருகிப் போச்சு மண் - பொன்
ஆசைகள் எல்லாம் பெருகிப் போச்சு
ஏழைக்கு வறுமைக் கோடு என்றபெயர் சூட்டியாச்சு!
சனநாயகக் கொள்கைகளை குழி தோண்டியாச்சு
சமதர்ம கோட்பாடுகளை தீயிலிட்டுக் கருக்கியாச்சு!
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்று - ஒவ்வொரு
அடி எடுத்து வைப்பனுக்கும் தண்டனை வழங்கியாச்சு!
இருதயத்தைக் கழற்றி வைத்தே - ஒவ்வொரு மனிதனும்
இரும்பாகி - வாழ்க்கை எல்லாம் துருப்பிடிச்சாச்சு!
இயற்கையை எல்லாம் விரட்டியாச்சு
செயற்கையை எல்லாம் திரட்டியாச்சு!
சுதந்திரம் என்ற புனித வார்த்தைகள் பொய்யாச்சு -
தந்திரங்கள பல மேற்கொள்ளும் செயல்கள் மெய்யாச்சு!
நாட்டைத் திருத்த முடியா நிலை வந்தாச்சு - இந்த
நாடு வருந்தும் சூழலின் நிலைப்பாடு இரத்தக்கண்ணீராய் தந்தாச்சு!
காலத்தின் கோலம் மாறிப் போச்சு - புள்ளிக்
கோலத்தின் நிலையும் மீறிப் போச்சு!
Pin It