சென்னையை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது 28). இவரது மனைவி மலர் (23) கர்ப்பிணியாக இருந்த மலர் திருவல்லிக்கேணி யில் உள்ள கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டு, அங்கு அவருக்கு பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள இன்குபேட்டரில் வைத்தி ருந்தபோது எலி கடித்து இறந்தது என்பது புகார்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது இந்த சம்பவம். இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் சுற்றி திரியும் எலிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் எலி, பூனை, நாய் பிடிக்கும் பணி யில் சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டது.

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜய், புறநோ யாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் உள்ள கழிவறைகள், புதிய கட்டிடம் கட் டும் பணிகள் ஆகியவற்றை பார் வையிட்டார்.

கழிவறையில் சுகாதார பணிகள் சரிவர இல்லாததை கண்ட அமைச் சர் விஜய், அதற்கு காரணமான சுகாதார ஆய்வாளர் நாகராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

திருவல்லிக்கேணியில் பதிவேட்டை பார் வையிட்ட அமைச்சர், பணிக்கு தாமதமாக வந்த சுகாதார பணியா ளர்கள் அருள்மொழி, மாரிமுத்து, செவிலியர் தனலட்சுமி மற்றும் 6 டாக்டர்களுக்கு மெமோ வழங்க உத்தர விட்டார்.

இதற்கு முன்னர், சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலை யூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலை யில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், கொந்தளிப் பையும் ஏற்படுத்த... சம்மந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகா ரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத் துக் கொண்டது. தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இந்த விவகாரத்தை எடுத்தது, 20 நாட்களுக்கு முன்பு தான் அந்தப் பேருந் துக்கு ஆர்.டி.ஓ. அலு வலகத்தில் எப்.சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள் ளன.

இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்.சி. அளிக் கப்பட்டது? யார் இதைக் கொடுத் தது? இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

உடனே தமிழ்நாடு முழுவதும் எல்லா பள்ளி வாகனங்களுக்கு சோதனை என்ற பெயரில் எல்லோ ருக்கும் வேதனை தந்த அதிகாரி கள் பிறகு அடங்கி விட்டார்கள்.

இவை கடந்த கால சம்பவங் கள். இனி நிகழ்கால சம்பவம் ஒன்று...

சென்னை செங்குன்றம் எம்4 காவல் நிலைய வாலில் 24 மணிநேரமும் காவல் நிலையத்தை காவல் காப்பதைப் போல படுத்துக் கொண்டிருக்கும் நாய் ஒன்று தனது கோரைப் பற் களை காட்டியவாறு,காவல் நிலை யத்திற்கு புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு பீதியை எற்படுத்திக் கொண்டிருக்கிறது.

"காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தவர் நாய் கடித்து பலி' என்று ஒரு சோகச் செய்தி வந்துவிடக் கூடாது என்பதற்காக, முஸ்லிம் கள் மீது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மீதும் அக்கறைக் கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் இப்ராஹீம் காசி மியும், செங்குன்றம் நகரப் பொரு ளாளர் கரீமும்,

"மக்களுக்கு இடை யூறு தரும் இந்த நாயை விரட்டுங்கள்...” என்று காவலர்களை கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கண்டு கொண் டதாகத் தெரியவில்லை.   "காவல்துறை உங்கள் நண்பன்' என்று இவர் கள் எவ்வளவுதான் சொன்னாலும் காவல் நிலையம் என்றாலே மக்களுக்கு ஒரு பயம் இருப்ப துண்டு.

இந்நிலையில்  காவல்நிலையத் தின் உள்ளே உள்ளவர்களைக் கண்டு அஞ்சுவது மட்டுமல்லா மல் வெளியே உள்ள நாய்களை யும் கண்டு அஞ்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது செங்குன்றம் எம்4 காவல் நிலையத்தில்தான்!

பொது மக்கள் புகார் அளித்தும் எகத்தாளம் பேசுபவர்களாக உள் ளனர் காவலர்கள். குறிப்பாக அங் குள்ள காவலர் சங்கர் என்பவரிடம் இதுபற்றி சுட்டிக் காட்டினால் "அது அப்படிதான் இருக்கும் நீங்க ஓரம்போங்க” என்று நம்மை ஓரம் கட்டச் சொல்கிறார்.

மதுவை விற்பனை செய்துவிட்டு, குறிப் பிட்ட வயதுக்குள் உள் ளவர்கள் அருந்தக் கூடாது என்பதை விட பூரண மது விலக்கைக் கொண்டு வரலாம். சிகரெட்டில் மண்டை ஓட்டை வரைவதை விட, புகையிலை விற்பதை முற்றிலுமாகத் தடை செய்யலாம். இவை எல்லாம்  உதாரணங்கள் மட்டுமே, இன்னும் இது போன்று அல்லது இதை விட வீரியம் மிக்க எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன.

இப்படி அரிக்கும்போது மட்டும் சொரிந்து விடாமல் நிரந்திர தீர்வுக்கு மருந்தைத் தரலாமே?

எப்போதுமே லேட்டாவே அலர்ட்டாகும் அரசாங்கம் வரும் முன் காத்தால் மட்டுமே மக்க ளைக் காப்பாற்றும் அரசாங்கமாக இருக்க முடியும்.

எலி கடித்து இறந்த குழந்தை ஸ்ருதியின் செய்தியைப் போலவே, "காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தவர் நாய் கடித்து பலி' என்ற செய்தி வந்தால்தான் செங்குன்றம் எம்4 காவல்நிலை யம் அலர்ட்டாகுமோ?

- ஆலிம் அல் புகாரி

Pin It