இஸ்லாமியர்களிடம் சகிப்புத் தன்மை இல்லை என்கிற ஒரு பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பொதுவாக முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கும் ஏனைய சமயத்த வர்களின் அல்லது சித்தாந்தவாதிக ளின் நம்பிக்கைக்கும் பெருத்த வேறு பாடு உண்டு. இந்த இரு சாராருக்கும் இடையிலான நம்பிக்கைகள் மீதான தாக்கமும், பிடிமானமும் கூட வேறுபட் டவைதான்.

முஸ்லிம்களின் மத நம்பிக்கை என்பது இந்த உலகத்தோடு முடிந்து போவதில்லை. மறுமை என்ற மறு உலகத்தில் அவர்கள் நம்பிக்கை கொண் டவர்கள். மற்றவர்களின் நம்பிக்கை இந்த உலகத் தோடு முடிந்து போய்விடும் நம்பிக்கை என்பதால் முஸ்லிம்களின் நம்பிக்கையில் ஆழமும், ஆத்மார்த் தமும் அதிகம்.

அதனால்தான் இஸ்லாமியர்களை பயங்கரவாதி கள், தீவிரவாதிகள் என்று அழைத்தால் கூட அதி கம் உணர்ச்சிவசப்படாத சமுதாயம், இஸ்லாத்தை யும், நபிகள் நாயகத்தையும் யாராவது அவமதித் தால் வெகுண்டு எழுகிறார்கள். இது அவர்களின் நம்பிக்கையின் உச்சம்.

இதனை உணர்ந்து வைத்திருக்கும் இஸ்லாமிய எதிரிகள் மத உணர்வுகளைச் சீண்டி விட்டு இஸ்லா மியர்கள் ஆற்றும் எதிர்வினைகளை பூதாகரப்ப டுத்தி அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக் கும் பிரச்சாரம் நடந்து வரும் அதே வேளையில், முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையில்லாதவர்கள் என் கிற கற்பிதமும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகி றது. இதனை சங்பரிவாரங்கள் மட்டுமல்ல... முற் போக்கு பேசும் அறிவு ஜீவிகள் கூட விவாதக் களங்களில் முன் வைப்பது தான் வேடிக்கை.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பும் அது குறித்த அலஹாபாத் தீர்ப்பு அநியாயமாக வெளிப் பட்ட பின்பும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் சகிப் புத்தன்மை அசாத்தியமானது.

முஸ்லிம் இளைஞர்களை இந்தியாவின் அத் தனை மாநிலங்களும் தீவிரவாதிகளாக, பயங்கரவா திகளாக காட்டி பொய் வழக்குகள் போட்டு, பின் னர் நீதிமன்றத்தால் அவர்கள் அப்பாவிகள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுகின்றனர். இவ்வளவு அநியாயம் நிகழ்ந்தும் எதிர்வினையாற் றாமல் முஸ்லிம்கள் காக்கும் அமைதிக்குப் பெயர் சகிப்புத்தன்மைதான்!

லட்சக்கணக்கான ஏக்கர்கள் வக்ஃபு நிலங்களை ஆக்கிரமிப்பில் விட்டு விட்டு ஆட்சியாளர்களிடம் முஸ்லிம் சமுதாயம் கோரிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதும் சகிப்புத்தன்மைதான். முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தாக்கரேக்களும், சிங்கால்களும், தொகாடியாக்களும் சொல்லி வரும் வேளையில், எதிர்வினையாற்றாமல் அவர்களின் கருத்துகளை ஜீரணித்துக் கொண்டிருப்பதும் சகிப்புத்தன்மை தான்.

குஜராத்திலும், அஸ்ஸôமிலும் கொத்துக் கொத்தாக முஸ்லிம் படுகொலை நடந்தபோதும் முஸ்லிம்கள் அமைதி காத்ததற்குக் காரணம் அவர் களிடம் உள்ள அபரிதமான சகிப்புத்தன்மைதான். ஆனால்... ஒரு சாதித் தலைவரின் சிலை அவம திக்கப்பட்டால் பல தலைகள் தரையில் உருளுகி றதே அதற்கு சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற அடையாளம் இடப்படுவதில்லை.

ஒரு கட்சித் தலைவிக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்பட்டால் மாணவிகள் பஸ்úஸôடு எரித்துக் கொல்லப்படும்போது சகிப்புத்தன்மை என்ற பதமே மறந்து போகிறதே? ஒரு கட்சியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டதற்காக மது ரையில் ஒரு பத்திரிகை அலுவலகமே எரிந்து அதன் ஊழியர்களும் பலியானது சகிப்புத்தன் மைக்கான அடையாளம்தானா?

தலித் மக்கள் செருப்பு அணிந்து சென்றால், சைக்கிளில் சென்றால், பேண்ட் அணிந்தால், மற்ற வர்கள் டீ குடிக்கும் குவளையை பயன்படுத்தினால், கூலி உயர்வு கேட்டால் தலித் சேரியையே தீயிட்டுக் கொளுத்தப்படுவதற்கு பெயர் சகிப்புத்தன்மை என்று சொல்லலாமா? “பீகாரிகளை விரட்டியடிப்போம்” என்ற தாக்க ரேக்களின் குரல்களில் இந்த முற்போக்கு அறிவு ஜீவிகளுக்கு சகிப்புத்தன்மை தெரிகிறதா?

எம்.எஃப். ஹுசைன் என்பவர் ஓவியம் தீட்டி னால் ஓவியக் கூடத்தை எரிக்கும் செயல் சகிப்புத் தன்மையால் விளைந்ததா? "கற்பு' பற்றி ஒரு நடிகை தனது கருத்தைச் சொன் னால் விளக்குமாறு எடுத்துச் சென்று நடிகையை அடிக்கப் பாய்வது சகிப்புத்தன்மைக்குள்ளும், கருத்து சுதந்திரத்திற்குள்ளும் அடங்குமா?

ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்ற வழக்கு தொடர்ந்போது இந்திய பாராளுமன்றமேகூட சகிப்புத்தன்மையை வெளிப் படுத்தவில்லையே! இப்படி, முஸ்லிம்களின் சகிப்புத்தன்மை குறித்து கேள்வியெழுப்புவதற்கு எதிராக பல நூறு கேள்விகளை முன் வைக்க முடியும்!

நேடியாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செய லுக்கு எதிர்வினை ஏற்படுவது யதார்த்தமானது; இயற்கையானது. மனித இயல்புக்கு உட்பட்டது. அதை சகிப்புத்தன்மையற்றது என்று யாராவது கூறினால் அவர் மனசாட்சியை விற்று விட்டார் என்றுதான் அர்த்தம். இந்த நிலை முஸ்லிம்களுக்கு மட்டும் விதி விலக் கானதல்ல. ஆனால், முஸ்லிம்களுக்கான பிரச்சி னையின்போது மட்டும் சகிப்புத்தன்மை அலசி ஆராயப்படுகிறது.

இந்தியாவில் ரயில் பயணம் செய்ததில் தமிழர்களைப்போல் என் உடம்பு கறுத்து, அழுக்காகி விட்டது என்று அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாயோ கருத்து சொன்னபோது அதை கருத்துச் சுதந்திரம் என்று யாரும் எடுத்துக் கொள் ளவில்லையே. சகித்துக் கொண்டும் இருக்கவில்லையே. தமிழர்களாகிய நாமெல்லாம் கொந்தளிக் கவில்லையா?

சாயோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நமது முதல்வர் ஜெயலலிதாவே கண்டனம் தெரிவித்தாரே. ஆனால், நபிகளாரை இழிவுபடுத்திய அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தால் முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்களா? ஏனிந்த இரட்டை நிலை?

Pin It