உலக முஸ்லிம்களின் உணர்வுகளை ரணப் படுத்தியிருக்கும் அமெரிக்க மத வெறியன்  எடுத்த திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகளை கூகுள் இணைய தளம் இந்தியாவிலும் கடந்த வெள்ளி யன்று தடை செய்துள்ளது. ஏற்கெனவே லிபியா, ஏமன், எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளில் கூகுள் இணைய தளம் இதனை தடை செய்துள்ளது.

இந்த தடை குறித்து கூறிய கூகுல் தளத்தின் செய்தி தொடர்பாளர் எங்க ளுக்கு நீதிமன்ற உத்தரவு அல்லது அதிகாரப்பூர்வ வேண்டுகோள் வந் தால் தடை செய்வோம் என்று தெரிவித் திருப்பதோடு... இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் இந்த தடை மேற் கொள்ளப்பட்டதா என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான குல்தீப் தாத்வாலியா, "இந்த வீடியோ கட்சிகளை தடை செய்ய இந்திய அரசு கேட்டுக் கொண்டதாக தெரியவில்லை...” என்கிறார். ஆனால்... அஸ்ஸாம் பிரச்சினையைத் தொடர்ந்து வட கிழக்கு மாநிலங்களில் மட்டும் கூகுள் தளத்திலிருந்து வகுப்பு பதட்டத்தை ஏற்படுத்தும் செய்திகளை நீக்கவேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டதை கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டு அது போன்ற செய்திகளை தடை செய்துள்ளது என அந்நிறுவனம் கூறுகிறது.

கூகுள் தளத்திற்கு நாம் சென்று பார்த்தால் 2 நிமிடங்கள் ஓடக் கூடிய டிரைலர் காட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது. 14 நிமிடங்கள் கொண்ட டிரைலர் காட்சிகள் தடை செய்யப்ப டவில்லை என்பது தெரிகிறது.

அதே சமயம், முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகள் குறித்த லிங்க்குகளை நீக்க சொல்லி இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக கூகுலையோ, யூ டியூபையோ கேட்டுக் கொள்ளவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

சில மதங்களுக்கு முன் ரஷ்ய நீதிமன்றத்தில், பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்கிற ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட மாத்திரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இது ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் என்று தனது கண்டனத்தை தெரிவித்தது.

மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை எழும்பி நாடாளுமன்றமே கண்டனத்தை பதிவு செய்தது. அப்போது வட இந்திய முஸ் லிம் அமைப்புகளும் கீதைக்கான தடையை கண்டித்தன என்பது குறிப்பி டத்தக் கது. ஆனால் 20 கோடிக்கும் அதிக மான முஸ்லிம் மக்களை கொண்டிருக் கும் இந்திய அரசு அவர்களின் மத உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப் பளிக்காமல் நமக்கு என்ன வந் தது என்பதுபோல் நடந்து கொள்வதை என்ன வென்று சொல்வது.

இந்தியா மதச் சார்பற்ற நாடு

என்று யார் சொன்னது...?

Pin It