அமைதியாக அரபு நாட்டு அதிபர்கள்!

உலகெங்கும் உள்ள முஸ்லிம் மக்கள் கொந் தளிக்கவும், உலக நாடுகளில் வசிக்கும் அமெரிக்க மக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாதவாறு அச்சமடையவும் காரணமான "இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' (முஸ்லிம்களின் அறியாமை) திரைப்படத்தை இயக்கிய மத வெறியன் சாம் பேசில் மீது நடவடிக்கை எடுக்கவோ, யூ டியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் உலா வருகிற இப்ப டத்தின் டிரைலர் காட்சிகளை நீக்கவோ அமெரிக்க அரசு இந்த நிமிடம் வரை தயாராக இல்லை.

லிபியாவில் அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகெங்கும் பரவிய அமெரிக்க எதிர்ப்புணர்வு கண்டு அதிர்ச்சிய டைந்தபோதும் நிலைமையை தணிக்கும் எந்த முயற்சியையும் அமெரிக்கா மேற்கொள்ள வில்லை. அமெரிக்க அதிபர் முதல் அதி காரிகள் வரையிலும் வெளியிட்ட அறிக்கைகள் நிலைமையை மேலும் மோசமடையவே செய் துள்ளன.

இதுவரையிலும் உலக முஸ் லிம் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை ஒபாமா. குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்கா மல் முஸ்லிம்களின் உணர்வுகளை தொடர்ந்து காயப்படுத்தும் வகை யிலேயே ஒபாமா மற்றும் அவரது சகாக்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இன்னொருபுறம், மீடியாக்கள் உண்மையான பிரச்சினையை வெளிப்படுத்தாமல், தங்களது உயி ரினும் மேலான நபிகள் நாய கத்தை அவமதித்ததை தாங்கிக் கொள்ள இயலாமல் எதிர்ப்புணர் வுகளை பல வகையில் வெளிப்ப டுத்தி வரும் முஸ்லிம்களை வன்மு றையாளர்களாக சித்தரிப்பதில் அவை முனைப்பு காட்டி வருகின்றன.

சாம் பேசில் என்ற மதவெறிய னின் கீழ்த்தரமான காரியத்தினால் தான் இத்தனை களேபரங்களும் என்பதை வசதியாக மறைத்து விட்டு செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தை முன் வைத்துதான் லிபி யாவில் தூதரகம் மீது தாக்குதல் நடந்துள்ளது என்பதுபோல் துவ க்கத்தில் செய்திகளைப் பரப்பி அயோக்கியத்தனம் செய்தது அமெரிக்காவும், அந்நாட்டின் சில ஊடகங்களும்.

ஆயினும், விவகாரம் விஸ்வரூ பம் எடுத்ததில் அவர்களின் அயோக்கியத்தனம் அடிபட்டுப் போனது. திரைப்படம்தான் அனைத்திற்கும் காரணம் என்ற செய்தியை தடுக்க இயலாத அமெ ரிக்கா இப்போது முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அலறி வருகிறது.

லிபியாவிற்கு கடற்படையை அனுப்பி மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா... லிபிய தூதரக அதி காரிகளை படுகொலை செய்தவர் களை விட மாட்டோம் என கொக் கரிக்கிறது. அதே போன்று ஏமன், எகிப்து போன்ற நாடுகளிலும் தூதரகத் தாக்குதல்களில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.

ஆனால் தான் மட்டும் இத் தனை பிரச்சினைகளுக்கும் கார ணமான மதவெறியன் சாம் பேசில் மீது நடவடிக்கை எடுக்காதாம்! ஆணவத்து டன் சொல்கிறது அமெ ரிக்கா.

ஆரம்பத்தில், “மற்றவர்களின் மத நம்பிக்கைகள் உள் நோக்கத்துடன் அவ மதிக்கப்படுவது வருத் தத்திற்குரிய செயல் என அமெரிக்கா கருது கிறது” என்று சொன்ன அமெரிக்க வெளி விவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கடந்த 13ம் தேதி மொராக்கோ வெளியுறவு அமைச்சருடனான இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் போது, “உலகம் முழுவதும் தற் போது நிகழ்ந்து வரும் சம்பவங் கள் குறித்து சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்” என்று உலக முஸ்லிம்கள் மீண்டும் கொந்தளிக் கும் வகையில் பேசியிருக்கிறார்.

“இணைய தளங்களில் உலா வருகின்ற வீடியோ காட்சிகள் குறி த்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு எவ்வித பங்குமில்லை. இந்த வீடி யோவில் சொல்லப்படும் செய்தி களை நாங்கள் புறக்கணிக்கிறோம். மத சகிப்புத்தன்மை என்பது துவக்கம் முதல் அமெரிக்கா கடை பிடித்து வரும் தன்மையாகும்.

அமெரிக்காவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். பல மதத்தவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மக்களின் மத உணர்வுக ளுக்கு மிகப் பெரிய மதிப்பளித்து வருகிறோம்.

இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நான் பார்த்தேன். அது வெறுப்புக்குரியதாகவும், கண்டிக்கும் வகையிலும் உள்ளது. இவற்றில் ஒரு மிகப் பெரிய மதத்தின் பெருமைகளைக் குலைத்து பெருங்கோபத்தை தூண்டி விடும் கொடூரமான உள்நோக்கம் தெரிகி றது.

ஆனால், இந்த வீடியோ காட்சி களுக்காக வன்முறையில் ஈடுபடு வதை நியாயப்படுத்த முடியாது. அமெரிக்க முஸ்லிம்களும், ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் பலரும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேசி வருவதை நான் பாராட்டுகிறேன்.

வன்முறைக்கு எந்த மதத்திலும் இடமில்லை. இஸ்லாம் மனித குலத்தின் அடிப்படை கண்ணியம் குறித்துப் பேசுகிறது. பிற மதங்க ளும் அப்படித்தான். தூதரகத்தின் மீதான தாக்குதல் என்பது, இரு நாடுகளும் இரு தரப்பு புரிந்து ணர்வு மற்றும் நல்ல எதிர்கா லத்தை கட்டியெழுப்ப, ஒன்றாக இணைந்து பணியாற்ற வகுக்கக் கூடிய திட்டத்தின் மீதான தாக்குதல் ஆகும்...” என்றெல்லாம் நல்ல பிள்ளையாக பேசி விட்டு, 

I know it is hard for some people to understand why the United States cannot or does not just prevent these kinds of reprehensible videos from ever seeing the light of day. Now, I would note that in today’s world with today’s technologies that is impossible. But even if it were possible, our country does have a long tradition of free expression which is enshrined in our Constitution and our law, and we do not stop individual citizens from expressing their views no matter how distasteful they may be.

(“இதுவரை பார்க்கப்பட்டு வரும் கண்டிக்கத்தகுந்த இது போன்ற வீடியோ காட்சிகளை அமெரிக்க அரசாங்கத்தால் ஏன் தடுக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள உங்களில் பலருக்கு கஷ்டமாக இருக்கும் என் பது எனக்குத் தெரியும்.

ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற இன்றைய உலகில் (இதுபோன்ற வீடியோ காட்சிகளை) தடை செய்வது என்பது சாத்தியமற்றதாகும். ஆனால், இது சாத்தியமானாலும் கூட அமெரிக்கா கருத்து சுதந்திரத்தைப் பேணுவதில் நீண்ட கால பாரம்பரியம் உள்ள நாடு. இந்த கருத்துச் சுதந்திரம் நமது அரசியல் சாசனம் மற்றும் சட்டத்தில் போற்றுதலுக் குரியதாக உள்ளது.

அதனால் தனிப்பட்ட குடிமக் கள் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதை நாங்கள் தடுக்க முடியாது. அது எவ்வளவு வெறுப்பானதாக இருந்தாலும் சரியே...” எனப் பேசியிருக்கிறார் ஹிலாரி.

இது எப்படி இருக்கிறது?

தனிப்பட்ட ஒருவன் பிறரை இழிவுபடுத்தும் வகையில் பேசி னால் அது தவறு இல்லையாம். அதனை சட்டம் அனுமதிக்கி றதாம். ஹிலாரி பேசிய இதே கூட் டத்தில், “இப்படி பேசும் உன்னை செருப்பால் அடிப்பேன்...” என்று ஹிலாரியை நோக்கி ஒருவன் (தன் கருத்தை) சொல்லியிருந் தார்.

Yes, I appreciate you; the freedom of expression is long tradition of America and it is enshrined in our constitution and our law

(“நான் உங்களைப் பாராட்டு கிறேன். கருத்து சுதந்திரம் அமெ ரிக்காவின் நீண்ட காலப் பாரம்ப ரியமாகும். இது நமது அரசியல் அமைப்பிலும் நமது சட்டத்தி லும் போற்றுதலுக்குரியதாக உள் ளது...”) என்று தன் நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியிருப்பாரா ஹிலாரி?

இது என்ன வரைமுறை? ஒருவரை அவமானப்படுத்தவோ, இழிவுபடுத்தவோ எவருக்கும் உரி மையில்லை என்பதுதான் அடிப் படை மனிதப் பண்பு. இந்தப் பண்பு இல்லாத சட்டங்கள் எதற்கு? அவமதிப்புக்குள்ளானவ ருக்கு அமெரிக்காவில் என்ன நீதி?

ஹிலாரியின் கூற்றுக்கு, அமெ ரிக்கத் தூதரகங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் - எங்கள் இறைத் தூதரை இழிவுப டுத்தினால் எதிர் வினை இப்படித் தான் இருக்கும் என்பது எங்க ளின் பாரம்பரிய நடைமுறை. எங்களுக்கு எதிர்ப்பை இப்படி வெளிப்படுத்த சுதந்திரம் உள் ளது. அமெரிக்கக் கொடிûயை எரிக்க தார்மீக உரிமை உள்ளது என்று பதில் சொன்னால் ஹிலாரி அதை ஏற்பாரா?

பிரச்சினைக்கு காரணமானவர் களை விட்டு விட்டு பிரச்சினை யைப் பற்றிப் பேசுவதை அமெ ரிக்காவின் - குறிப்பாக இஸ்லா மிய எதிரிகளின் நடைமுறையாக இருக்கிறது.

உலக முஸ்லிம்களிடம் மன்னி ப்பை கேட்கக் கூட அமெரிக்கா தயாரில்லை. இதற்கெதிரான எதிர்வினையை தனது கண்டனம் மூலம் தெரிவிக்க வேண்டிய அரபு நாடுகளில் பெரும்பாலா னவை அமைதி காக்கின்றன.

லிபிய அதிபர் யூசுப் மகாரிய ஃப்வோ, “நடந்த (வன்முறை) சம் பவங்களுக்காக அமெரிக்காவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...” எனக் கூறியிருக் கிறார்.

எகிப்தின் அதிபரான முஹம்மது முர்ஸி மட்டும்தான், “அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம், அறவழியிலான அமெ ரிக்க எதிர்ப்பு போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு ஊறு விளைவித்தவர் கள் மீது அமெரிக்கா நடவடி க்கை எடுக்க வேண்டும். மனித வாழ்வை மதிக்க வேண்டும் என் கிற மாண்புகளை நமக்கு கற்றுத் தந்தவர் நபி (ஸல்) அவர்கள். நபி (ஸல்) அவர்களை அவம தித்தவர்களை எச்சரிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்க ளும் இஸ்லாத்தின் புனிதத்தன் மையும் எங்களுக்கு மதிப்பு மிக் கது...” என திராணியோடும், நியாய உணர்வோடும் பேசியிருக்கிறார்.

இவ்வளவிற்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், பத்து லட்ச டாலர்கள் கடனை தள்ளுபடி செய்வோம் என அமெரிக்கா எகிப்துக்கு உறுதியளித்திருந்தது.

அமெரிக்க வல்லாதிக்கத்தின் அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுப்பதே சிறந்த ஜிஹாத் (புனிதப் போர்). இதனை எகிப்தைப் பார்த்து ஏனைய முஸ்லிம் நாட்டு அதிபர்கள் கத்துக் கொள்ள வேண்டும்.

- ஃபைஸல்

Pin It