அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுங்கள். உடனே தூக்கில் போடுங்கள்! பா.ஜ.க. தலைகளும், இந்துத்துவா வெறியர்க ளும், காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து கத்தித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நியாயம்தான்... 166 பேர் இறந்து போக காரண மான, அதிகம் படிக்காத, இதுதான் புனிதப் போர் என்று தவறாகப் புரிந்து கொண்ட கசாபை தூக்கில் போட்டு விடுங்கள். எவ்வளவு விரைவாக ஒரு பதில் கொலையை செய்ய முடியுமோ செய்து பசியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் சரி... அதுதான் நியாயம்!

ஆனால்...

இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை இன்னொரு நாட் டில் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் செய்கிறார் கள்? அல்லது ஏதோ ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் ஏன் செய்கின்றன என்பதை எனது தொப்புள் கொடி உறவுகளான இந்து மத சகோதரர்கள் கொஞ் சம் யோசிக்க வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

எங்கிருந்து துவங்கியது?

1947ல் சுதந்திர காலகட்டத்தில் நடந்த இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில்தான் பயங்கரவாதத் தின் முதல் விதை விதைக்கப்பட் டது. அதன் பின் நடந்த காந்தி யடிகள் கொலையில் மேற்கொள் ளப்பட்ட அவதூறுகள் அந்த விதைக்கு தண்ணீர் ஊற்றியது. ஆனால் அந்த பயங்கரவாத விதை விருட்சமாகாமல் தூங்கிய படியேதான் இருந்தது.

ஆனால் 1992ல் தங்களது சுய அரசியல் லாபத்திற்காக, பதவி வெறிக்காக இஸ்லாமியர்களின் புனித தலமான, 400 ஆண்டுகளுக் கும் மேலாக வழிபாட்டுத் தல மாக விளங்கி வந்த பாபர் மசூ தியை இடித்தார்ளே...! கரசேவகர் கள் கூட்டம் கூட்டமாக ஏறி நின்று ஆவேசமாக இடித்துத் தள்ளினார்களே...! இடித்து தரை மட்டமாக்கி விட்டு கொக்கரித் தார்களே... அன்றுதான் விதை வினையாக முளைத்தது.

இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர உணர்வோடு பழகி வந்த நமது இந்திய நாட்டிற்கு அன் றுதான் பிரச்சினை ஆரம்பித்தது. 1947க்குப் பின்னால் மதத்தின் பெயரால் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இங்கு நடந்ததில்லை. இந்திரா காந்தி படுகொலையின் போது உலகமெங்கும் சீக்கியர் கள் தாக்கப்பட்டதை மதக் கலவ ரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. எடுத்துக் கொண்டால் கூட அது ஓரிரு நாட்களில் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்திற்கு பின் தான் இந்தியா வெடித் தது. ரத்தம் சிந்துகிறது.

நான் கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டுகிறேன். திடீ ரென யாரோ ஒருவன் வந்து “200 வருடங்களுக்கு முன்பு இங்குதான் என் அப்பா ராமசாமி பிறந்தார்...” என்று கூறி, எனது வீட்டை இடி த்துத் தள்ளினால் எனக்கு வருத் தம் வரும். எனது அடுத்த தம் பிக்கு கோபம் வரலாம்; எனது கடைசி தம்பிக்கு ஆத்திரமும், வெறியும் வரலாம்தானே?

ஒரு வீட்டை இடித்தாலே வரு த்தம், கோபம், ஆத்திரம், வெறி வரும்போது பாரம்பரியமாக கரு தப்படும் ஒரு வழிபாட்டுத் தல த்தை, உண்மையான பாத்திரமா, கற்பனை கதாபாத்திரமா என்று கூட தெரியாத ராமன் பெயரால் கூட்டம் கூட்டமாக திருவிழா போல கூடி நின்று இடித்துத் தள் ளினால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

இந்தியாவில் வாழும் எனக்கு வருத்தம் வந்தது. வெளிநாடுக ளில் வாழும் எனது தம்பிகளுக்கு கோபம், ஆத்திரம், வெறி வந்து விட்டது. அதன் விளைவுதான் இந்தியா ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது. இனி டிசம்பர் 6 என்பது ஆறாத வடு. ஆற்ற முடியா துயரம்! ஆறு மனமே ஆறு என்பது டிசம்பர் 6க்கு எப்படி பொருந்தும்? ஆறாது. விஷயம் கை மீறி விட் டது.

சரி இவ்வளவிற்கும் காரண மாக இருந்து இந்துத்துவா தொண்டர்களையும், மக்களை யும் உசுப்பி விட்டு விட்டு, கறுப்பு பூனை பாதுகாப்புடன் வலம் வரும் அத்வானி கோஷ்டிக்கு ஒரு சிராய்ப்பு கூட ஏற்படவில்லை. தொடர்ந்து ரத யாத்திரை நடத் திக் கொண்டிருக்கிறார்.

அப்பாவி இந்துக்களுக்கு மேலும் மேலும் வெறி ஏற்றிக் கொண்டிருக்கிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய கசாப்புக்கு தூக்கு என்றால் இவ்வளவிற்கும் காரண மான அத்வானி கோஷ்டிக்கு என்ன தண்டனை கொடுப்பது? யார் கொடுப்பது? இவர்களை எத்தனை முறை தூக்கில் போடு வது?

குஜராத்தில் நரேந்திர மோடி யின் தூண்டுதலின் பேரிலோ அல்லது அவரின் ஆசியுடனோ வன்முறை வெறியாட்டம் போட்டு உலகம் கண்டிராத இனப் படுகொலையை நிகழ்த்தி னார்களே... கர்ப்பிணிப் பெண் ணின் வயிற்றிலிருந்து குழந் தையை வெளியே எடுத்து கொன் றார்களே... அவர்களை யார் தூக்கிலிடுவது?

குஜராத் பெண் மந்திரி மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலை வர் பாபு பஜ்ரங்கி போன்று 70 பேர் மீது வழக்கு நடந்து, கிட் டத்தட்ட 10 வருடங்களை இழுத் தடித்து விட்டு இப்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட 39 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக் கிறார்கள். இது எந்த ஊர் நியா யம்?

166 பேரை கொன்ற கசாப்புக்கு தூக்கு தண்டனையாம்! நரோடா பாட்டியாவில் அப்பாவி முஸ் லிம்கள் 97 பேர் கொல்லப்பட் டார்களே... இதைச் செய்தவர்க ளுக்கு ஆயுள் தண்டனையாம். நன்றாக இருக்கிறது இந்தியா வின் சட்டம். இந்தியாவின் நீதி! இது கண்துடைப்பு நாடகம் என்று சிறு குழந்தைக்குக் கூட தெரிகிறதே!

இதுபோன்ற நாடகங்கள்தான் எங்கோ இருக்கும் சில இஸ்லா மிய போராளி அமைப்புகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கி றது. வன்மத்தை உருவாக்குகிறது. விளைவு தீய இந்துத்துவா தலைவர்கள் பதுங்கிக் கொள்ள அல்லது பாதுகாக்கப்பட்டு விட அப்பாவி பொது மக்கள் ரத்தம் சிந்துகிறார்கள். நேர்மையான நீதி கிடைக்காதவரை ஒருபோ தும் இந்தியா அமைதி பெற்று விடாது.

கசாப்புக்கு தூக்கு அறிவித்த தும் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டா டினார்களாம். ஒருவனின் உயி ரைப் பறிப்பதற்கு நாம் கொண் டாடுகிறோம். எவ்வளவு இழி வான மனம் படைத்தவர்களாக இருக்கிறோம்.

கசாபு செய்தது நியாயம் இல் லைதான்! கொடூரம்தான். மறுப் பதற்கில்லை... அதே நேரம் அவன் படிக்காதவன். நல்லது கெட்டதை பாகுபடுத்த தெரியாத வன். மிக இளம் வயது. அவ னுக்கு புனிதப் போர் பற்றி தவ றாக போதிக்கப்பட்டிருக்கிறது.

கொடுஞ்செயலுக்கான மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறது. அவனது குடும்ப வறுமை தீர்க் கப்பட்டிருக்கிறது. அவன் அம்பு மட்டுமே. ஏவியவர்கள் எங்கோ இருக்கிறார்கள். இப்படி ஒரு அப்பாவியை தூக்கில் போட்டு விட்டு என்ன சாதித்து விடப் போகிறோம்? ஒரே ஒரு கசாபை கொன்று விட்டால் நாடு சுபிட்சம் அடைந்து விடுமா? அடைந்து விடாது.

தீவிரவாத இந்துத்துவ அமைப்புகள் திருந்த வேண்டும். ராமன் லட்சுமன்களை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது. மத துவேசத்தை விதைக்கக் கூடாது. அயோத்தி பிரச்சினைக்கு நியா யமான, நேர்மையான, நாணய மான தீர்வை உருவாக்க இஸ்லாமிய பெரியவர்களுடன் கலந்து பேசி சுமூகமான நிலையை உரு வாக்க வேண்டும்.

இந்தியா அமைதி பெற, இந்திய இஸ்லாமிய அமைப்புகள் எப் போதுமே தயாராகத்தான் இருந் தன. இருக்கின்றன. இந்த முயற்சியை விட்டு விட்டு ஆட்சிக் கட்டிலில் அமர தேர்தலை மனதில் வைத்து "ராமர் கோவில் கட்டுவோம்' என்று அரசியல் பஞ்ச் டயலாக் எல்லாம் பேசக் கூடாது.

எனது தொப்புள் கொடி உறவு களே... நமக்கு அமைந்த தலைவர் கள் குழப்பவாதிகள், கலகக்காரர் கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழப்பம் செய்து மத நல்லிணக்கத்திற்கு இடைஞ்சல் செய்பவர்களை இறுதி தீர்ப்பின்போது இறைவன் பார்த்துக் கொள்வான். நாம் அனைவரும் ஒன்றே! ஒன்று படுவோம்!!

கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்!

- எம்.ஏ.கென்னடி (எ) அப்துல் ரஹ்மான்

Pin It