இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பங்கேற்பு!

தஞ்சை மாவட்டம் பாபநாசத் தில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 16ம் தேதி மின் வெட்டை கண்டித்து சி.பிஐ.எம்.எல். மக் கள் விடுதலை கட்சியின் சார்பாக கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் விடு தலை கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ஜான்சன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மி.தா. பாண்டியன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மண்டலச் செயலாளர் நாச்சியார் கோவில் ஜாபர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஐஎன்டிஜே மண்டலச் செயலாளர் நாச்சி யார் கோவில் ஜாபர் பேசும்போது, “இல் லாத மின்சாரத்திற்கு கட்டண உயர்வை அறிவிக்கும் ஒரே அரசு தமிழக அரசுதான்; மாநில அரசுகள் உருப்படியான திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி நாடகம் நடத்தி வருகின்றன.

நாட்டின் வளர்ச்சிக்கு நல திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாத தமிழக அரசு ராமேஸ்வரத்திற்கும் இலங் கைக்கும் இடையில் கடல் பகுதியில் இருக் கும் வண்டல் கலந்த மணல் திட்டை ராமர் பாலம் என்று பச்சை பொய்யை சொல்லி, இந்த பச்சைப் பொய்யை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கடிதம் எழுதி மிரட்டி வருகிறது.

அதோடு, இல்லாத ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக நிர்பந்தித்து வருகிறது. தன்னுடைய பாசிச மத வெறிப் போக்கை நிறுத்திக் கொண்டு நடுநிலையோடு தமிழக அரசு நடந்து கொண்டு உருப்படியான திட்டங்களைத் தீட்டி தடை இல்லா மின்சாரத்தை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்...'' என்று வர லாற்று ஆதாரங்களோடு மேற்கோள் காட்டி பேசினார்.

சி.பி.ஐ.எம். மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் மீ.தா. பாண்டியன் பேசும் போது,

“தமிழக அரசு செயற்கையாக மின்சாரத் தட்டுப்பாட்டை உருவாக்கி கூடங்குளம் போராட்டம் தீவிரம் அடையாமல் முடக்கு வதற்காக இந்த சூழ்ச்சியை செய்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப் பட்டால் தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் என்று மக்களை நம்ப வைப்பதற் கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி 8 மாதங்களாக போராட்டம் நடத்தும் போராளிகளை மக் கள் விரோதிகளாக காட்டுவ தற்கும் இந்த செயற்கை மின் தட்டுப்பாட்டை தமிழக அரசு உண்டாக்குகிறது.

உண்மை என்னவென் றால், கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் வெறும் இரண்டரை சதவீத மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு நகரத்திற்கு கூட மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இயலாது என்பதே உண்மை யாகும்...'' என்றவாறே மின்வெட்டை விட்டு சற்றே டைவர்ட் ஆகி,

“தமிழக அரசு நியாயத்திற்கு புறம்பாக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விசாரணை கைதிகளாக பல வரு டங்களாக சிறைக் கொட்டடியில் வைத்து சித்திரவதை செய்து வருகிறது. ராமன் என்று பெயர் வைக்கப்பட்ட ஒரு நாய் இறந்து விட்டால் கூட இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது...'' என்று முஸ்லிம் சிறைவாசிகளுக்காக குரல் கொடுத்து விட்டு மீண்டும் மின் வெட்டுப் பிரச்சினைக்கு வந்தார்.

“மின் வெட்டை மூன்று மாதத்தில் சரி செய்வேன் என்று ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா இன்று வெறும் எட்டு மணி நேரம் மட்டுமே தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார். கூடவே மின் கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறார். இலவசம் என்ற வீண் திட்டத்தைக் காட்டி மக்களை ஏமாற்றுகி றார்...'' என்றெல்லாம் கணீர் குரலில் பேசி னார்.

இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெறும் வரை பாபநாசம் புதிய பேருந்து நிலையமே நிசப்தமாக இருந்தது. அந்த அளவிற்கு மக்க ளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந் திருந்தது மின் வெட்டை கண்டித்து நடந்த இந்தப் போராட்டம்.

- அபு யாசிர்

Pin It