ஹிந்து வாஹினி அமைப்பினர் கைது!

ஆந்திரத் தலை நகர் ஹைத ராபாத் மத னப்பேட் குர்மகுடாவில் உள்ள ஹனுமன் கோவிலில் மாட்டுக் கறியை வீசி விட்டு, முஸ்லிம்கள்தான் இந்தச் செயலைச் செய்தனர் என பிரச்சாரத்தையும் செய்து ஹைதராபாத்தில் பெரிய அள வில் கலவரத்தை நிகழ்த்தி யது சமூக விரோத கும்பல்.

இந்தச் செய்தியை ஏப்ரல் 20-26, 2012 தேதியிட்ட சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் விரி வான தகவல்களாக வெளியிட் டிருந்தோம். நாம் வெளியிட்ட அந்தச் செய்தியில்,

“இக்கலவரத்தை நடத்திட சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கி றது என்கிறது ஹைதராபாத் உளவுத்துறை. கைது செய்யப் பட்டுள்ள 5 பேரும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என் பது வெளிப்படையாகத் தெரிந் தும் இவர்கள் இந்துத்துவாவின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறை வெளிப்ப டுத்தவில்லை...'' என்று குறிப் பிட்டு, இந்துத்துவாவினர்தான் ஹைதராபாத் கலவரத்தின் கதா நாயகர்கள் என்பதை அழுத்தந் திருத்தமாக எழுதியிருந்தோம்.

இந்நிலையில், ஹைதராபாத் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன் ஹிந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்த நால்வரை கைது செய் துள்ளது.

நாகராஜ், கிரண் குமார், ரமேஷ், தயானந்த் சிங் ஆகிய நால்வரும், மதனப்பேட் ஹனு மன் கோவிலில் வெட்டப்பட்ட மாட்டின் கால்களையும், பச்சை நிற பெயிண்டை கோவில் சுவ ரில் பூசிவிட்டு சயீதா பாத், மத னப்பேட்டை, ஹைதராபாத் பழைய நகரம் ஆகிய இடங்க ளில் கலவரத்தைத் தூண்டி விட்டனர் என்று காவல்துறை கூறு கிறது.

இப்போதும் கூட இந்த நால் வரும் எந்த அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்று இதுவரை கூற வில்லை. ஆயினும் உள்ளூர் மீடி யாக்கள், இந்த நால்வரும் ஹிந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் ஹிந்து வாஹினி அமைப்பில் தீவிரமாக இயங்கி வருபவர்கள். ஹனுமன் ஜெயந்தி, ராம நவமி விழாக் களை ஒருங்கிணைப்பதில் முக்கி யப் பங்காற்றி வருபவர்கள் என தெரிவித்துள்ளன. போலீசாரும் இவர்கள் விநாயக சதுர்த்தி, தசரா விழாக்களில் பங்கெடுப்ப வர்கள் என்று கூறி உள்ளூர் மீடி யாக்களின் கூற்றை மெய்பிக் கிறது.

இந்த கலவரத்தை தூண்டி விட்ட மாஸ்டர் மைண்ட் நப ரான சாராய வியாபாரி நிரஞ்ச னையும், தண்டல்காரரான ஸ்ரீநி வாûஸயும் தேடி வருகிறது காவல்துறை. இவர்கள் இருவர் தான் ஹனுமன் கோவிலில் மாட் டிறைச்சியைப் போட்டுவிட்டு இந்து முஸ்லிம் கலவரத்தை உரு வாக்கும் திட்டத்தை வகுத்துள் ளனர். இவர்கள் இருவரும் ஹிந்து வாஹினி அமைப்பின் உள்ளூர் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துக்களை ஒருமுகப்ப டுத்த, விரும்பிய அவர்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்து அச் சுறுத்தல் விடுக்கப்படுகின்றன. அதனால் இந்து சமூகம் ஒன்று பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய இவர்கள் (ஹிந்து வாஹினி அமைப்பினர்) திட்ட மிட்டதாகக் கூறும் புலனாய்வுத் துறை, இதற்காக இவர்கள் ராமநவமி மற்றும் ஹனுமான் ஜெயந்தி விழாக்களின்போது கலவரம் ஏற்படுத்தலாம் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த விழாக்களின் போது பந்தோபஸ்து கடுமை யாக இருந்ததால் இரண்டு விழாக் களும் அமைதியாக நடந்த முடிந்தன. இதனால் வேறு வகை யில் கலவரங்களை உருவாக்க சதித் திட்டங்களை இவர்கள் தீட்டியுள்ளனர் என்கிறது.

ஹைதராபாத் காவல்துறை டி.சி.பி.யான பி.ஜே. விக்டர் செய் தியாளர்களிடம் பேசுகையில், “கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு பேரும் (தேடப்படும்) நிரஞ்சன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தலைமையில் உள்ளூர் மதுபா னக் கடையொன்றில் கூடி அங்கே கலவர திட்டத்தை தீர்மானித்துள்ளனர்.

இதில் நாகராஜ் என்பவன் துப்புரவுத் தொழிலாளி என்ப தால் இறைச்சிக் கடைகளின் கழி வுகள் கொட்டப்படும் இடத்தை நன்கு அறிந்தவன். அதனால் மாட்டின் வெட்டப்பட்ட கால் களையும், பச்சை நிற பெயிண் டையும் (பச்சை நிறம் எதற்கு என்றால் இதை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று தெரி விப்பதற்காகவாம்(!?)) எடுத்து வந்திருக்கிறான் நாகராஜ்.

பின்னர் ஏப்ரல் 7ம் தேதி நள்ளிரவுக்குப்பின் மதனப்பேட் ஹனுமன் கோவிலின் கிரில் கேட்டில் மாட்டின் கால்களை நட்டு வைத்திருக்கிறார்கள். கோவி லில் பச்சை நிற பெயிண்டை ஸ்பிரே செய்து விட்டு மறுநாள் காலை உள்ளூர் இந்துக்களிடம் தகவலை சொல்லி தூண்டி விட்டுள்ளனர்.

இதனால் கொந்தளித்துப் போய் ஒன்று திரண்ட இந்துக் களை முஸ்லிம்கள் வசிக்கும் பகு தியில் (காவல்துறை அனுமதி யைப் பெறாமலே) முஸ்லிம்க ளுக்கு எதிராக கோஷமிட்டபடி பேரணியாகச் சென்று முஸ்லிம்க ளின் வீடுகள், வர்த்தக நிறுவனங் களைத் தாக்கியுள்ளனர். இதில் 9 முஸ்லிம்கள் படுகாயம் அடைந் துள்ளனர்...'' என ஹைதராபாத் கலவரத்திற்கு ஹிந்துத்துவா வகுத்த சதித் திட்டத்தின் பின்ன ணியை வெளிப்படுத்தியுள்ளார் டி.சி.பி. விக்டர்.

கைது செய்யப்பட்டிருப்பவர்க ளில் ரமேஷ் என்பவரை கலவரத் தின்போது கல்லெறிந்ததாக காவல்துறை ஏற்கெனவே கைது செய்திருந்தது. ஆனால் 4 நாட்க ளில் அவர் பெயிலில் வெளியே வந்து விட்டார்.

ஆயினும், ஆந்திர காவல்துறை டி.ஜி.பி. நியமித்த சிறப்பு புல னாய்வு குழு மீண்டும் ரமேஷை கைது செய்தது. அப்போது கல வரத்திற்கு தான்தான் காரணம் என்பதை ஒப்புக் கொண்ட ரமேஷ் மற்ற மூவரையும் காட்டிக் கொடுத்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் வர்த்த ரீதியாக வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறார்கள். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத இந்துத்துவாவினர், முஸ்லிம்களின் பொருளாதா ரத்தை பலவீனப்படுத்தவே இது போன்ற கலவரங்களை உண்டு பண்ணி வருகிறார்கள். இந்த திட்டம் இந்துத்துவாவின் செயல் திட்டத்தில் உள்ளதுதான். ஹைத ராபாத் காவல்துறை இவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

- அபு

Pin It