ஆர்ப்பரித்த ஐஎன்டிஜே

இலங்கையின் மாத்தளை மாவட்டத் தில் அமைந்திருக்கும் தம்புல்ல என் கிற நகரத்தில் 60 ஆண்டுகளாக இருந்து வருகிற மஸ்ஜித் கைரிய்யா பள்ளிவாசல் மீது புத்த பிக்குகளின் தலைமையில் வந்த சிங்கள இனவெறிக் கும்பல் தாக்குதல் நடத்தி பள்ளி வாசலை சேதப்படுத்தியதை கடந்த வார மக்கள் ரிப்போர்ட் இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.

தம்புல்ல பள்ளிவாசல் தாக்குதல் பற்றிய முழு பின்னணித் தகவல்களை தமிழகத்தின் வேறு எந்த தமிழ் பத்திரி கையும் தராத நிலையில் சமுதாய மக்கள் ரிப்போர்ட்தான் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படு வதையும், முஸ்லிம்களை நோக்கி சிங்களப் பேரினவாதம் தனது ஆக்டோ பஸ் கைகளை நீட்டிக் கொண்டு வருவ தையும் உணர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்தது.

அயோத்தியைப் போன்றே அரச பயங்கரவாதம்தான் தம்புல்லவில் நிகழ்ந்திருக்கிறது. அதனால் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்காக குரலெ ழுப்ப வேண்டும் எனத் தீர்மானித்து, கடந்த 28ம் தேதி அன்று சென்னையிலுள்ள இலங்கை அரசின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்ப டுத்தியுள்ளது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

மாலை 4 மணிக்கு சென்னை டி.டி.கே. சாலையில் குவியத் துவங்கிய ஐஎன்டிஜே தொண்டர்கள், அருகிலிருந்த பள்ளிவாசலில் மாலை (அஸர்) தொழு கையை முடித்து விட்டு பேரணியாக புறப்பட்ட னர்.

டி.டி.கே. சாலை - ராதாகிருஷ்ணன் சாலை பிரிவில் முற்றுகைப் போராட்டத்திற்கான களம் அமைக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசே! இலங்கை அரசே!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

பள்ளிவாசலை இடித்த புத்த பிக்குகள் மீது நடவடிக்கை எடு!

தம்புல்லவில் மதுவுக்கு அனுமதி!

விபச்சாரத்திற்கு அனுமதி!

வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பா?

அனுமதியோம்! அனுமதியோம்!

புத்த பிக்குகளின் மத வெறியை இனிமேலும் அனுமதியோம்!

என்பது போன்ற கோஷங்கள் எழுச்சியு டன் ஒலிக்க... டி.டி.கே. சாலையிலி ருந்து போராட்டக் களத்தை அடைந் தது பேரணி.

முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமையேற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர்,

“60 ஆண்டு காலமாக தம்புல்ல பகுதி முஸ்லிம்கள் தொழுது வந்த பள்ளி வாசலை புத்த பிக்குகள் இடித்துத் தகர்த் திருக்கிறார்கள். இலங்கை அர சின் ஆதரவோடு இந்த தாக்கு தல் நடந்தேறி இருக்கிறது. இரா ணுவம், காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்த நிலையில் சிங்கள இன வெறியர்கள் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இதுபோன்ற நிலை தொடர்ந் தால் இந்தியாவிலுள்ள இல ங்கை அரசின் தூதரகமும், துணைத் தூதரகங்களும் இழுத்து மூடப்படும் நிலைமையை ஏற்படுத்துவோம்...'' என்றார் தனது கண்டன உரையில்!

முஹம்மது முனீரைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் வேலூர் இப்ராஹிம், மசூதா ஆலிமா, சமூக ஆர்வலர் டி.எஸ்.எஸ். மணி ஆகியோர் இலங்கை அரசின் அராஜகப் போக்கை கண் டித்து கண்டன உரை நிகழ்த்தினர்.

தடையை மீறி போராட்டம் நடத்தப்பட் டதால் அனைவரையும் கைது செய்த போலீசார் பின்னர் விடுவித்தனர்.

முற்றுகைப் போராட்டத்தின் விளை வாக அப்பகுதியின் போக்குவ ரத்து தற்காலிகமாக தடைபட்டது. போக்கு வரத்து போலீசார் வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டனர்.

போராட்டக் களத்தில் பெருமளவு போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப் பட்டிருந்தபோதும் காவல்துறைக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் கட்டுக்கோப்பாக களம் கண்ட ஐஎன் டிஜே தொண்டர்கள் அமைதியான முறையில் இலங்கை அரசுக்கு எதி ரான தங்களின் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்தினர்.

 

வழக்கத்திற்கு மாறாக மீடியாக்க ளும் அதிகளவில் குழுமியிருந்தனர். முற்றுகைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையிலேயே கலை ஞர் டி.வி., சன் நியூஸ் போன்ற தொலை க்காட்சிகள் முற்றுகைப் போராட் டத்தை ஃப்ளாஷ் நியூசாக ஓட விட்டன.

இலங்கையில் பள்ளிவாசல் இடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்த போதும், இலங்கை ஊடகங்கள் இந்தச் செய் தியை பெரிய அளவில் வெளிப்படுத்த வில்லை. இதற்கு காரணம் இலங்கை அரசு அமல்படுத்தியிருக்கும் செய்தி தணிக்கை சட்டம் என்று சொல்லப்படு கிறது.

அதே சமயம், சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழிந்த நிலையிலும், இந்திய ஊடகங்களிலும் பள்ளிவாசல் இடிப்பு குறித்த செய்திகள் வெளியாக வில்லை.

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக (27ம் தேதி) இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து பள்ளிவா சல் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்தியி ருந்தன. சில இடங்களில் கடையடைப் பும் நடந்துள்ளது. இந்த கடையடைப் பின்போது நடுநிலை பேணும் சிங்கள மக்களும், தமிழர்களும் கடையடைப் புக்கு ஆதரவளித்துள்ளனர். ஆயினும் இந்தச் செய்திகள் இலங்கை - இந்திய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டுள் ளது.

இந்திய ஊடகங்களும் புறக்கணித் தன என்று சொல்வதைவிட இந்திய ஊடகங்களுக்கு இந்தச் செய்தி எட்ட வில்லை என்று கூட சொல்லலாம். ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முற்றுகைப் போராட்டம் அனைத்து தமிழ் ஊடகங்களையும் சென்றடைந்ததோடு, அந்த ஊடகங் கள் வழியாக சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும் எடுத்துச் செல்லப்பட் டுள்ளது. பல இணைய தளங்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முற்றுகைப் போராட்டத்தை படத்து டன் வெளியிட்டிருந்தன. மறுநாள் நாளிதழ்களிலும் போராட்ட செய்திகள் வெளியாயிருந்தன.

தம்புல்ல பள்ளிவாசல் சம்பவத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு சென் றதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முன் முயற்சியை எடுத்ததோடு மிக முக்கி யப் பங்கையும் ஆற்றியிருக்கிறது.

இலங்கையிலும் ஆர்ப்பாட்டம்

இந்திய தவ்ஹீத் ஜமா அத் சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தியதற்கு முன் தினம் 27ம் தேதி இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி தம்புல்ல பள்ளிவாசல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந் தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஸ்ஜித் தவ்ஹீத் நிர்வாகிக ளும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சகோதர சமுதாய இயக்கங்களும் புத்த பிக்குகளின் அராஜகத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்பு ணர்வை வெளிப்படுத்தின.

ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன், அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் குமர குருபரன், நவ சமஸ் சமாஜ என் கிற சிங்களக் கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரம பாகு, கருண ரத்னா, ஐக்கிய தேசிய கட்சிப் பிரமுகர்களான என்.எஸ்.எம். பைறூஸ், முஜிபுர் ரஹ்மான், மஸ்ஜித் தவ்ஹீத் நிர்வாகியான ஷராபுத்தீன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

போராட்டங்கள் கூடாது துஆ மட்டும் செய்யுங்கள் என்ற அகில இலங்கை ஜமா அத்துல் உலமாவின் அறிவிப் பையும் மீறி இலங்கை முழுவதி லும் ஆர்ப்பாட்டம் நடந்திருக் கிறது என்பது குறிப்பிடத்தக் கது.

Pin It