2002ம் ஆண்டில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பையடுத்து நிகழ்த்தப்பட்ட முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு குறித்து ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், மோடி மீது புதிதாக சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதன் பின்னணியில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார் மோடி.

குஜராத் மாநிலம் பொன்விழாவை நிறைவு செய்து, 51ம் ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய மோடி, "கடந்த ஓராண்டாக எனக்கு எதிரான பல்வேறு சதிகள் நடைபெற்றபோது நான் அமைதியாகவே இருந்தேன். எனக்கு தொல்லை கொடுக்க வேண்டு மென்று பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பினார்.

மத்திய அரசு தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் எனக்கு எதிராக ஏவி விட்டு வருகிறது. வரும் காலத்தில் இப்போதுள்ள சோதனைகளை விட மேலும் பல சோதனைகளுக்கு நான் ஆளாக நேரிடும். இதனை எதிர்கொள்ள மக்களின் ஆசி தேவை.

நமக்கு எதிராக அநீதி நடக்கும் போது அதனை பொறுத்துக் கொண்டிருப்பதும் கூட குற்றம் தான். இனியும் குஜராத் அதனை பொறுத்துக் கொள்ளாது என கூறியுள்ளார். இதன் மூலம் குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு விஷயத்தில் மோடிக்கு எதிராக மத்திய அரசு தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டும் மோடி, தனக்கு ஆதரவாக மக்க ளின் உதவியை நாடியுள்ளார்.

அதோடு தனக்கு ஒரு சோதனை என் றால் குஜராத் அதை பார்த்துக் கொண்டிருக்காது என்று கூறுவ தன் மூலம், ஒரு வேளை சஞ்சீவ் பட்டின் அபிட விட் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மோடி கைது செய்யப்பட்டால், மீண்டும் ஒரு கலவரத்தை சந்திக்க நேரும் என்று அரசை மிரட்டும் தொனியிலேயே மோடி இவ்வாறு கூறியதாக கருதுகிறார்கள் நடுநிலையாளர்கள்.

மராட்டிய மாநிலத்திலிருந்து குஜராத் எனும் தனி மாநிலம் அமைவதை பாராட்டி உயிர்நீத்தவர்களில் முஸ்லிம்களும் அடங்குவர். அத்தகைய சமுதாயத்தை சொந்த மாநிலத்தில் அகதிகளாக ஆக்கி சாதனை புரிந்த மோடி, இவ்வாறு மிரட்டும் தொனியில் பேசுவது குற்றவாளிகள் எல்லாம் கோபுரத்தில் இருந்தால் இப்படித்தானோ என எண்னும் வகையில் உள்ளதை மறுக்க முடியாது.

Pin It