பாஜக செய்யும் மாநிலங்களில் வளர்ச்சி வான்தொட்டு நிற்கிறது என்று அக்கட்சியினர் பீற்றிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பலவீனமாக ஆட்சி நடத்துபவர்கள் அவர்கள்தான்.

இதை நாம் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் வளர்சியை கவனத்தில் கொண்டு சில திட்டங்கள் தீட்டப்படும்போது, அதை செயல்படுத்துவதற்காக தனியாருக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.

அந்த நிலங்களுக்கு உரியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, அரசு அதை கையகப்படுத்தி தனது திட்டங்களை நிறைவேற்றும். ஆனால் சாதாரண இந்த நில கையகப்படுத்தும் திறமை கூட கர்நாடக பாஜக அரசுக்கு இல்லை என்ப துதான் அவர்களின் ஆளும் திறனுக்கு சான் றாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் - மைசூர் இடையே அதி விரைவு தனிச் சாலை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டது. தனியார் உதவி யோடு 5 செயற்கைகோள் நகரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேறினால் பெங்களூரில் இருந்து மைசூருக்கு 90 நிமிடங்களில் செல்ல முடியும். ஆனால், கடந்த 2004ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டாலும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கல் நீடிக்கிறது.

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இந்த நிலையில், நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு ஆர்வமின்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின் போது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மாநில அட்வகேட் ஜெனரல் ஹர்னகள்ளி தாக்கல் செய்த அறிக் கையில், "கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணியில் சிக்கல் உள்ளது. விவசாயிகளால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். இதுபோன்ற விவகாரங்கள் மிகவும் உணர்வுப் பூர்வமானவை'' என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "உங்களால் (கர்நாடக அரசு) நிலத்தை ஏன் கையகப்படுத்த முடியாது? சட்டம்#ஒழுங்கு பிரச்சினை என்ற கேள்வி இங்கே ஏன் எழுகிறது? நீங்கள் அச்சப் பட்டால் மாநிலத்தை ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் பயப்பட்டால் உங்களால் உயிர் வாழ முடியாது.

அடிப்படை வசதியான சாலை அமைப்ப தற்கு கூட நிலத்தை கையகப்படுத்த முடியாது என மாநில அரசு ஒப்புக்கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது. இது பொது விவகாரம். அதிகாரத்தில் இருந்து கொண்டு எந்த பணிகளையும் அரசு செய்யவில்லை. இதனால், 'கோமா' நிலையில் இருப்பது போன்று நீங்கள் காணப்படுகிறீர்கள்...'' என்று சாடியுள்ளனர்.

ஏற்கனவே நில மோசடி புகார் எதிரொலியாக முதல் மந்திரி எடியூரபபாவின் மகனும், மகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை திருப்பி கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து எடியூரப்பாவின் உறவினர்கள் இருவர் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் மூலம் தாங்கள் பெற்ற நிலத்தை திருப்பி ஒப்படைத்தனர்.

அரசு நிலத்தை மகனுக்கும் - மகளுக்கும் - உறவினர்களுக்கும் கையளிக்கத் தெரிந்த எடியூரப்பாவிற்கு, மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த தெரியவில்லை. இந்த இயலாமையால் உச்சநீதிமன்றத்தின் சரமாரி விமர்சனத்திற்கு இவரது அரசு ஆளாகியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"என்னமோ உச்சநீதிமன்றம் என்னை மட்டும்தான் குறைசொன்னது மாதிரி சொல்றீங்க; எங்க மோடியையும்தான் "நவீன நீரோ மன்னன்'ன்னு விமர்சனம் பண்ணுச்சு. இதெல்லாம் அரசியலல்ல எங்களுக்கு சாதரணமப்பா' என்று எடியூரப்பா சொன்னாலும் சொல்லலாம். இந்த லட்சணத்துல தேச பக்தியில் எங்களை மிஞ்ச ஆள் உண்டான்னு வெற்றுக் கூச்சல் வேறு.

- சூரிய குமாரன்

Pin It