தில்லி ஷாஹி இமாம் அப்துல்லாஹ் புஹாரி, சமாஜ்வாதி கட்சியினரிடையே செல்வாக்குடன் திகழ்பவர். இதற்கு காரணம், அக்கட்சியின் சுப்ரீம் தலைவரான முலாயம் சிங் யாதவுடன் அவருக்கு இருக்கும் நீண்ட கால நெருங்கிய உறவுதான்.

இந்த உறவை, கடந்த 16ம் தேதி தனது மருமகனும், மேல்சபை உறுப்பினருமான உமர் அலிகான் மற்றும் சிவில் பாதுகாப்பு கவுன்சி லின் தலைவரான வசீம் அஹ்மது ஆகியோரின் ராஜினாமா கடிதங் களை முலாயம் சிங்கிற்கு அனுப்பி வைத்து விட்டு ஒரேயடியாக ஒட் டுமில்லை, உறவுமில்லை என்று முறித்துக் கொண்டிருக்கிறார் புஹாரி.

இவர்கள் இருவருமே உ.பி. தேர் தலில் புஹாரியின் வேட்பாளர்க ளாக இருந்தவர்கள்.

ஏன் இந்த முறுகல்?

இதற்கான காரணத்தை அந்த ராஜினாமா கடிதங்களுடன் முலாயம் சிங்கிற்கு தனிப்பட்ட முறை யில் அப்துல்லாஹ் புஹாரி எழு திய கடிதத்தில் அவரே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து தி ஹிந்து பத்திரி கைக்கு பேட்டியளித்திருக்கும் அவர், “சமாஜ்வாதி அரசாங்கத்தி டமிருந்து முஸ்லிம்கள் பெற வேண் டிய சலுகைகளுக்காக அவர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக் கின்றனர். முஸ்லிம்களுக்கு அவர் எதையும் வழங்கவில்லை. முஸ் லிம்கள் முலாயம் சிங்கிற்கு கொத் தடிமைகள் இல்லை!

முஸ்லிம்கள் தங்களின் அரசி யல் போக்கை தீர்மானிக்கும் திறன் கொண்டவர்கள். 2014 நாடா ளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு அவர்கள் ஆதரவு தெரி விக்க மாட்டார்கள்...'' என்று தெரி வித்துள்ளார்.

மேலும், “உத்திரப் பிரதேசத் தின் தற்போதைய அரசு முஸ்லிம் களை கை விட்டு விட்டதாக முஸ் லிம்கள் உணருகின்றனர். அத னால் சமாஜ்வாதி கட்சியை விட்டு அவர்கள் வேகமாக விலகிக் கொண்டிருக்கின்றனர்...'' என்றும் தெரிவித்த புஹாரி,

“முலாயம் சிங்குடன் இன் னொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு தயக்கம் இல்லையென்றாலும், இந்த பேச்சு வார்த்தையில் திடமான உத்திர வாதம் பிரதானப்படுத்தப்பட வேண்டும்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் கள் பலர் இன்னொரு வாய்ப்பைத் தாருங்கள் என எனக்கு போன் செய்து பேசுகிறார்கள். ஆனால் வெறும் வாக்குறுதிகளும், உறுதி மொழிகளும் தரக் கூடாது. சாதக மான நடவடிக்கைகளை செயலில் காட்ட வேண்டும் என அவர்களி டம் தெரிவித்துள்ளேன்...'' என்றும் கூறியுள்ளார்.

2012 உத்திரப் பிரதேச சட்டமன் றத் தேர்தலுக்கு முன் தனது நிபந் தனையுடன் கூடிய ஆதரவை முலாயம் சிங்கிற்கு வழங்கியிருந் தார் அப்துல்லாஹ் புஹாரி. இப் பொழுது அவர்களின் உறவு கசந்து போயிருக்கிறது.

முலாயம் சிங் யாதவ் முஸ்லிம்க ளின் நலன் சார்ந்த விஷயங்களில் அவர் கொடுத்த வாக்குறுதிக்கு மாற்றமாகவே நடந்து கொள்கி றார் என்றும் குற்றம் சாட்டியுள்ள இமாம் புஹாரி,

“2012 சட்டமன்றத் தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி முஸ்லிம் களின் பெருவாரியான ஆதரவைப் பெற நான் கருவியாக இருந்தேன். அப்போது முஸ்லிம்கள் முலாயம் சிங்கிற்குத்தான் வாக்களித்தார் கள்; அகிலேஷ் யாதவிற்கு இல்லை. ஆனால் இறுதி முடிவு என்பது எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படாததால் பூஜ்ஜியமாக உள்ளது...'' என்று முலாயம் சிங்கு டன் உறவை முறித்துக் கொண்ட தற்கு காரணங்களை அடுக்கியிருக் கிறார்.

Pin It