ஏகாதிபத்தியத்தின் சதிகளையும் மீறி வரலாற்றின் பக்கங்களில் போராளிகள் வெற்றி வீரர்களாக உலா வருகிறார்கள். அந்த வரிசையில் உலா வருபவர்களில் ஒருவர்தான் உசாமா பின் லேடன்.

சவூதி அரேபியாவின் கோட் டீஸ்வரக் குடும்பத்தில் பிறந்து உல்லாச வாழ்க்கையில் மனதைச் செலுத்தாமல், காட்டிலும், மேட் டிலும் குன்றுகளிலும், மலை முக டுகளிலும், கட்டாந்தரையிலும், பாலைவனத்திலும் வாழ்ந்து இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போர் நடத்தியவர்.

ஆப்கானிஸ்தான் மண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க எண்ணிய சோவியத் யூனியன் தன்னுடைய லட்சக் கணக்கான ராணுவ வீரர்களை ஆப்கான் மண்ணில் களமிறக்கியது. கம் யூனிஸ கொள்கையை திணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இஸ்லாமிய மத நம்பிக்கைகள் சீர்குலைக்கப்பட்டன.

இதனால் வெகுண்டெழுந்த உசாமா பின்லேடன் முஜாஹி தீன் குழுக்களோடு தன்னை இணைத்துக் கொண்டார். அமெரிக்கா, ஒசாமாவிற்கு போர் பயிற்சிகளை கொடுத்தது ஆயுத உதவிகளையும் செய்தது.

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பின் லேடன் தலைமையிலான போராட்டக் குழுவினரை ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சான்றிதழ் வழங்கினார்.

ஈராக் போரை காரணமாக வைத்து சவூதி அரேபிய மண் ணில் களம் அமைத்த அமெரிக்க வீரர்கள் போர் முடிந்த பிறகும் நாட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கி விட்டனர்; நாசார நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட னர்.

தனது சொந்த நாட்டில் அந்நிய ராணுவம் தங்கி இருப்பதை பொறுக்க மாட்டாத பின்லேடன் எதிர்த்து குரல் கொடுத்தார். இதன் காரணமாக, ஆரம்பத்தில் பின்லேடனை தனது நண்பனாக உலகிற்கு காட்டிய அமெரிக்கா, பின்லேடன் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியதும் தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஊடகங்கள் வாயிலாக செய்தி பரப்பியது.

நாட்டை விட்டு பின்லேடனை வெளியேற்றுமாறு சவூதி அரேபிய அரசை நிர்ப்பந்தப்படுத்தியது அமெரிக்கா. 1997ம் ஆண்டு சி.என்.என். தொலைக் காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போது, “அமெரிக்கா நம் நாடுகளை அழிக்க நினைக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.

பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட் டிடத்தில் குழந்தைகளும், பெண் களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம்களை கண்டிக்கிறது...'' என்று கூறினார்.

அதி தீவிரவாதியாக அமெரிக்கா திகழ்கிறது என்று உலகிற்கு பின்லேடன் தெரிவித்த காரணத்தினால்தான் அவர் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டார்.

உசாமா பின் லேடன் சாகடிக்கப்பட்டது பயங்கரவாதி என்பதால் அல்ல. பயங்கரவாதிகளின் தாயகம் அமெரிக்கா என்பதை தெரிந்து அதனை எதிர்க்க முயன்றதால்தான். கண்ணெதிரே நடந்த அநீதியை தட்டிக் கேட்ட காரணத்தினால் அநீதியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈராக்கில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அமெரிக்கா படையெடுத்தது. போர் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பின் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் ஈராக்கில் எதுவுமில்லை என்ற உண்மைகள் வெளியானது. அமெரிக்கா இதுவரை ஆதாரம் தர வில்லை.

இன்னும் சில ஆண்டுகளில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதற்கும், பின்லேடனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற உண்மை வெளிவரும். அப்போது அமெரிக்கா குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்.

பின்லேடனை தீவிரவாதியாக இப்போது சித்தரிக்கும் ஊடகங்கள் அப்போது உசாமாவை போராளியாக தூக்கிப் பிடிக்கும். வரலாறு விடுதலை செய்யும்.

Pin It