ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரியும் இந்நாள் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர ரத்தோரை மத்திய புலனாய்வுத் துறை கடந்த 4ம் தேதி கைது செய்திருக்கிறது. அதோடு ரத்தோர் மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்திருக்கிறது.

இந்தக் கைதும், குற்றப் பத்திரிகையும் ஏன்?

கடந்த 2006ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த சாராய கடத்தல்காரரான தாரா சிங் என்பவர் ராஜஸ்தான் காவல்துறையினரால் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த போலி என்கவுண்ட்டரில் பாஜக எம்.எல்.ஏ. ராஜேந்திர ரத்தோருக்கும் தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கைப்பற்றிய மத்திய புலனாய்வுத் துறை, விசாரணைக்காக உள்ளூர் அலுவலகத்திற்கு ரத்தோரை அழைத்துச் சென்று அலுவலகத் திலேயே அவரை கைது செய்தது.

புலனாய்வுத் துறையின் அலுவ லகத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு ராஜேந்திர ரத் தோருக்கு ஆதரவாக ஆர்ப்பாட் டம் நடத்தியுள்ளனர்.

5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜேந்திர ரத்தோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 120பி (சதித் திட்டம் தீட்டுதல்) 302 (படு கொலை செய் தல்) உள்ளி ட்ட பிரிவுக ளின் கீழ் வழக் குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. ரத்தோரை ஏப்ரல் 9ம் தேதிவரை நீதி மன்றக் காவலில் வைத்திருக்க உத் தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.

ஆபாச படம் பார்ப்பது, கொலை செய்வது, கலவரம் உரு வாக்குவது, காலித்தனம் செய்வது இதுதான் பாஜகவின் தேசிய செயற்பாடுகள் என்பதை இது போன்ற சம்பவங்கள் மூலம் அறிய முடிகிறது.

- காயல் சாலிஹ்

Pin It