அமெரிக்காவிற்கு கோரிக்கை வைக்கும் சீக்கியர்கள்

இலங்கையில் போர்க் குற்றம் நடந்திருக்கிறது; அப்பாவித் தமிழர்களை மகிந்தா ராஜபக்சே அரசு படுகொலை செய்திருக்கிறது; அதனால் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உலகத் தமிழர்க ளால் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத் தம் கொடுக்கப்பட்டு வரும் வேளை யில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் தீர்மானம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவத்து டன் அலசப்பட்டது.

அமெரிக்காவின் இந்த தீர்மா னம் ஏற்படுத்திய தாக்கம், சீக்கியர் களிடமும் எதிரொலித்திருக்கிறது. சீக்கியர்களும் தங்களுக்கான நியா யத்திற்காக அமெரிக்கா குரல் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

ஆம்! அமெரிக்க செயலக அதிகா ரிகளைச் சந்தித்த நீதிக்கான சீக்கியர் கள் அமைப்பின் (எஸ்.எஃப்.ஜே) பிர திநிதிகள் 1984ல் நிகழ்ந்த சீக்கியர்க ளுக்கு எதிரான வன்முறையை சீக் கிய இனப்படு கொலை என அறி விக்க வேண்டும் என வலியுறுத்தியுள் ளனர்.

1984ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க் காப்பா ளர்களால் சுடப்பட்டு படுகொலை செய்யப் பட்டார். சுமார் 16 குண்டுகள் இந் திரா காந்தி யின் உடலில் பாய்ந்தது. சீக்கியர் கள் இந்த காரியத்தில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிர ஸார் வன்மு றையில் ஈடுபட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல் லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம டைந்தனர். இந்த வன்முறைஏற்படுத்திய காயம் சீக்கியர்களின் மனதில் இன்றும் ஆறாமலேயே இருக்கிறது. அவ்வப்போது அவர்கள் இதற்காக நியாயம் கேட்டபடியே வெளிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான், அமெரிக்காவிலுள்ள சீக்கியர்களின் வலதுசாரி அமைப்பான எஸ்.எஃப்.ஜே. அமெரிக்க அதிபரான ஒபாமா வின் நிர்வாகத்திடம், "1984ல் சீக்கியர்களுக்கு எதிராக இந்தியாவில் நிகழ்ந்த வன்முறையை இனப்படுகொலையாக அங்கீகரிக்க வேண் டும்' என புகார் மனுவை அளித்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட மனுவைத்தான் அமெரிக்க செயலக அதிகாரி களையும் சந்தித்து கொடுத்துள்ளது எஸ். எஃப்.ஜே. அமைப்பு.

அண்மையில் அமெரிக்க செய்தி ஊட கங்களிடம் பேசிய இவ்வமைப்புதான் சமர்ப் பித்துள்ள மனுவிற்காக ஆதரத்தையும் திரட்டி வருகிறது. அதோடு, இந்தியாவின் பிற மாநி லங்கள் மற்றும் ஹரியானா மாநிலத்திலுள்ள ஹோந்த் சில்லார் என்னுமிடத்தில் 2011 கண்டு பிடிக்கப்பட்ட சீக்கியர்களின் கல்லறைகள் தொடர்பான ஆதாரங்கள், வன்முறையின் போது தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூ லங்கள் ஆகியவற்றைக் கொண்டு சட்டரீதியா கவும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற னர்.

இது தவிர, 1984 வன்முறையின்போது தாக் குதலில் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பதிவில் இருக்கும் - 35 ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என் கிற புள்ளி விபரங்களையும் தங்களின் வழக்கு விபரத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த 35 ஆயிரம் சீக்கியர்களின் பட்டிய லில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட சீக்கியர்களுக்கு எதிராக, பீகார், சட் டீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்தியப் பிரதே சம், மஹாராஷ்டிரா, ஒரிசா, உத்திரகாண்ட், உத்தி ரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங் கம் ஆகிய மாநிலங்களில் வன்முறை நிகழ்த்தப்பட்டது.

முன்னதாக கடந்த டிசம்பர் 15ம் தேதியே 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடத்தில் கையெ ழுத்து பெறப்பட்டு, ஒபாமா நிர்வா கத்திடம் மனுவாக ஒப்படைக்கப்பட்டிருக்கி றது. அந்த மனுவிலும் சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இனப்படுகொ லையாகக் கருத வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது சீக்கிய அமைப்பான எஸ்.எஃப்.ஜே.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர் மானத்தையடுத்து சீக்கியர்கள் அமெரிக்கா விடம் முறையிட்டுள்ளனர். உண்மையில் பார்த்தால் வன்முறையாளர்களுக்கெல்லாம் வன்முறையாளானாக அமெரிக்கா இருந்து வருகிறது.

போர்க்குற்றம் என்றவரையரைக்குள் மகிந்தா ராஜபக்சேவைக் கொண்டு வருவ தற்கு முன் ஜார்ஜ் புஷ், ஜூனியர் புஷ் போன் றவர்களை சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். இராக்கிலும், ஆப்கா னிஸ்தானிலும் அமெரிக்கா நடத்திய மனித உரிமை மீறல்கள், அராஜகங்கள், போர்க் குற் றங்கள் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

ஆயினும், உலக ரவுடியிடம் நியாயம் கேட் பதன் மூலம் அமெரிக்க எனும் பெரியண் ணனை நல்லவனாக கருதி விட முடியாது. அமெரிக்கா சொன்னால் அதை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் கட்டுப்பட்டு நிற் கும் சமீப கால உலக அரசியலை புரிந்து கொண்டபடியால்தான் தங்களுக்கான நியா யத்தை அமெரிக்காவிடம் சீக்கியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

சீக்கியர்கள் அமெரிக்காவிடம் இப்படி கோரிக்கை வைக்கும்பொழுது இந்திய அர சிடம், 2002 குஜராத் வன்முறையை கலவரம் என்று சொல்லாமல், முஸ்லிம் இனப்படு கொலை என்று அதனை அங்கீகரிக்க வேண் டும் என முஸ்லிம்கள் அழுத்தம் கொடுக்க லாம். இதன் மூலம் மோடியை தொடர்ந்து கொடுங்கோலனாகவே உலகத்தின் முன் அடையாளம் காட்ட முடியும்!

- ஃபைஸல்

Pin It