ஒருத்தரு "போர் நின்றுவிட்டது என்று பொய் சொன்னதும் போர் குற்றமே'' என்று எழுது கிறார். சரி, போர் நின்றதுன்னு பொய் சொல் வதும் போர் குற்றம்தான். அதை யார் சொன்னது அய்யா? மகிந்தா சொன்னார். பிரணாப் முகர்ஜி நம்பி னார்; சிதம்பரம் நம்பி விட்டார் அமெரிக்கா கூட நம்பி விட்டது. நானும் நம்பி விட்டேன். இது கருணாநிதியின் விளக்கம்.

பாவ மன்னிப்பு கேட்கிறாரா? தம்பிங்க பாவ மன்னிப்பு கேட்கச் சொல்லி சுவரொட்டி ஒட்டினார் களே? அது அய்யா உங்கள் கூட் டணி கட்சியின் தலைவர்களுக்கு தானே? நீங்க திடீர்னு பாவ மன் னிப்பு கேட்கறீங்களே? சரி. மனச் சாட்சி உறுத்துது என்கிறீர்களா? சரி போகட்டும்.

ஆனா, வன்னி போர் நடக்கும் போது, வாரத்திற்கு ஒருமுறை, எம். கே.நாராயணன், சிவசங்கர மேனன், பிரணாப் முகர்ஜி, நிருபமா ராவ், என்று உங்கள் கூட்டணி ஆட்சி யின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம், கொழும்புக்கு போய் வந்தார் களே? அது எதற்கு அய்யா?

ஒவ்வொருமுறை கொழும்பு செல்வதற்கு முன்பு சென்னை வந்து இறங்கி உங்களை, அதாவது அன்றைய முதல் அமைச்சரை, சந் தித்து விட்டு போவார்களே? அது எதற்கு அய்யா?

அப்படி சந்தித்த காலங்களில் தானே, "போர் நிறுத்தப்பட்டதா? இல்லையா?'' என்ற விவாதம் வந் தது. நீங்க சொல்வதுபோல! போர் நிறுத்தப்பட்டதாக ராஜபக்சே அர சாங்கம் பொய் சொல்லிவிட்டது என்று இப்போது நாலு ஆண்டு கள் கழித்து கூறுகிறீர்களே?

அய்யா, இது உங்களுக்கே நல்லா இருக்கா? அது மட்டுமின்றி, அப்படி பொய் சொன்னதும், "போர் குற்றமே' என்று இப்போது கூறுகி றீர்களே? எல்லோருக்கும் நீங்கள் உட்பட தெரியும்படிதானே நமது தலைமை அமைச்சர், "நாங்கள் ரேடாரும், செயற்கை கோள் உளவு செய்திகளும்தான் இலங்கைக்கு கொடுத்தோம்'' என்று நடந்த போர் பற்றி கூறினார்?

அதாவது, போரில் பங்காளி என்று திருவாய் மலர்ந்தாரே அப்படியா னால் போர் நின்று விட்டது என்று அவரும் அவரது சகாக்களும் நம்பி யிருக்க முடியாது அல்லவா? அப்ப டியானால் அங்கே கொழும்புக்கு அடிக்கடி சென்று வந்த உங்கள் கூட்டணி ஆட்சியின் அதிகாரிக ளான எம்.கே.நரயாணனும், சிவசங் கர் மேனனும் உங்கள் கூட்டணி ஆட்சியின் அமைச்சரான பிரணாப் முகர்ஜியும் நடந்து வந்த போர் பற்றி முழுமையாக அறிந்து வைத் திருப்பார்கள் என்றுதானே பொருள்?

அதனால்தானே போர் முடிந்த பிறகு ராஜபக்சே, "இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்'' என்று கூறினார்? அப்படியானால் போரை நிறுத்தியதாக யார் பொய் சொன்னார்கள் அய்யா?

ஒரு உண்மையை சொல்லிவிட் டீர்கள். "போர் நின்றதாக பொய் சொன்னதும் போர் குற்றமே'' முர சொலியின் நல்லதொரு தலைப்பு இது. அதனால் இப்போது, போர் நின்றதாக பொய் சொன்னவர்கள் பட்டியலில், பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும், நீங்களும் கூட வருகி றீர்கள் அய்யா! அதனால் நீங்கள் சொன்னதுபோல "நீங்கள் எல்லோ ரும் போர் குற்றம் செய்தவர்கள் தானே?'' இதெப்படி இருக்கு?

நீங்களே வலிய வந்து பாவ மன்னிப்பு கேட்பதும், இப்போது உங்கள் உத்தரவின் பேரில் டி.ஆர். பாலு மக்களவையில், "நாங்கள் தமிழீழம் கோரினோம் ஆனால் இப்போது நாங்கள் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை மட் டுமே கோருவதும் அந்தர் பல்டி தானே?

இது எப்படி தமிழீழ ஆதரவா ளர் அமைப்பு என்ற உங்கள் புதிய டெசோவிற்கு பொருந்தும்? அதா வது உங்கள் புதிய டெசோ உங்க ளது பழைய டெசோவை அழித்து விட்டதோ? அதாவது இப்போது உருவானது "ரா' உருவாக்க சொன்ன டெசோ என்று ஒப்புக் கொள்ள போகிறீர்களா?

"ரா' திட்டத்தின்படி, தென்னாப்பி ரிக்க அரசாங்கம் ஜெர்மனியில் கூட் டம் போட்டு, அதில் லண்டனில் உள்ள "உலக தமிழர் பேரவை'யை கலந்து கொள்ள வைத்து அவர் கள் மூலம் தமிழீழம் வேண்டாம் என்று கூற வைத்தார்களே அதே பாணியில்தானே இன்று மக்கள வையில் டி ஆர்.பாலு பேசியதும்?

அப்புறம் என்ன அய்யா? இன்று அமெரிக்காவிடம் சுப்பிரம ணிய சாமியை அனுப்பி, ஐ.நா. மனித உரிமை கழக தீர்மானத்தை நீர்த்து போக செய்வதும் அதே "ரா' தான் என்பது உங்களுக்கு தெரி யுமே அய்யா அப்புறம் எதற்கு பல்டி அடிக்கிறீங்க?

உங்கள் இந்தியாதான் பன் னாட்டு விசாரணையை கோரும் தீர்மானத்தை தடுக்கிறது என்ற அமெரிக்க குரல் நமக்கு கேட் கிறதே அய்யா! நீங்க எப்படி இதை எதிர் கொள்ள போகிறீர்கள்? அய்யா நல்லா இருப்பீங்க. தமிழன் பிணத் தின் மீது "தந்திர அரசியல்' நடத்தா தீங்கய்யா!

Pin It