மலிவான விளம்பரம் தேடும் இந்து மக்கள் கட்சி

திரைப்பட இயக்குனர் அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்திய செய்தி கடந்த 10ம் தேதி மாலை நாளேடுகளில் வெளியா னது.

எதற்கு இந்த முற்றுகைப் போராட்டம்? விடுதலைப் புலிக ளோடு தாலிபான்களை ஒப்பிட்டு இயக்குனர் அமீர் பேட்டியளித்தற் காக!

வார இதழ் ஒன்றுக்கு பேட்டிய ளித்த இயக்குனர் அமீர், “தாலி பான்களும், விடுதலைப் புலிகளும் ஒன்றுதான். இருவருமே தங்களின் நாட்டுக்காக போராடி வருகின்ற னர். விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக் கப்படவில்லை. தாலிபான்களே தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்...'' எனத் தெரிவித்திருந்தார் அமீர்.

அமீரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சியினர் ஈழத்தமிழர்களை அமீர் கொச்சைப்படுத்தி விட்டார் என்று அவர் வீட்டை முற்றுகையி டக் கிளம்பி விட்டனர்.

அமீருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கும்போது, இந்து மக்கள் கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உண்டு தான். அதை எவரும் தவறென்று சொல்ல முடியாது.

ஆனால், இந்து மக்கள் கட்சி யின் கூற்றில் உண்மையுள்ளதா? எதிர்ப்பில் நியாயம் உள்ளதா என் பதைத்தான் பார்க்க வேண்டியுள் ளது.

ஈழத் தமிழர்களின் நலனிற்காக போராடுவதாக சொல்லிக் கொள் ளும் தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் அமீரின் கருத்தை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் அவர்கள் யாரும் எதிர்ப்பு காட்ட வில்லை.

தாலிபான்களும், விடுதலைப் புலிகளும் தங்களின் நாட்டுக்காக போராடி வருகின்றனர் என்ற கருத்து, மாற்றுக் கருத்திற்கு இட மில்லாத உண்மை. தங்கள் மண்ணை ஆக்கிரமித்து அராஜ கம் செய்யும் அந்நிய நாட்டு படை களை எதிர்த்து தாலிபான்கள் போராடி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளோ தமிழ் இனத்தின் மீதான பேரினவா தத்தை எதிர்த்து தனி ஈழம் கேட்டு போராடியவர்கள். இருவருமே ஆயுதப் போராட்டத்தைதான் கையில் எடுத்தனர். இதுதான் அமீ ரின் கருத்திலுள்ள சாரம். இதில் தமிழர்களை எங்கே அமீர் கொச் சைப்படுத்தினார்?

இன்னும், “விஸ்வரூபம் திரைப் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. தாலிபான் களே தவறாக சித்தரிக்கப்பட்டுள் ளனர்...'' என்ற அமீரின் கருத்தில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத் தும் உடன்பாடும் உண்டு என்று சொல்ல முடியும்!

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம் களும் தவறாகவே சித்தரிக்கப்பட் டுள்ளனர். தாலிபான்களை மட் டுமே கமலஹாசன் காட்சிப்படுத் தியிருந்தால் அமீரின் கூற்று சரியானதுதான். ஆனால் தாலி பான்களைக் காட்டுகிறேன் பேர் வழி என திருக்குர்ஆன் வசனங்க ளையும், தொழுகைக் காட்சிகளை யும் அதில் புகுத்தியதுதான் கமலின் வன்மம் நிறைந்த செயல் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இது ஒட்டுமொத்த முஸ் லிம்களையும் தவறாக சித்தரிக்கும் செயல்தான்.

அதே சமயம், விஸ்வரூபம் திரைப்படம் தாலிபான்களை தவ றாக சித்தரிக்கிறது என்ற அமீரின் கருத்தில் நமக்கு உடன்பாடு உண்டு. தாலிபான்களின் சுதந்தி ரப் போராட்டத்தை விஸ்வரூபம் திரைப்படம் கொச்சைப்படுத் தியுள்ளது. அமெரிக்காவின் அரா ஜக அத்து மீறல்களை நியாயப்ப டுத்தி உலக ரவுடியான அமெரிக் காவிற்கு நற்சான்றிதழ் வழங்கி யுள்ளது.

திரைத்துறையில் இருந்து கொண்டே, கமலஹாசனின் நண்ப ராக இருந்து கொண்டே விஸ்வரூ பம் தாலிபான்களை தவறாகச் சித்தரிக்கிறது என்று பகிரங்கமாக பேசும் அமீரை பாராட்டத்தான் வேண்டும்.

அதேபோல, விடுதலைப் புலி கள் மற்றும் தாலிபான்களின் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் என்று கூறும் அமீ ரின் கருத்தும் ஏற்கத்தக்கதுதான். இதில் இந்து மக்கள் கட்சி எதிர் ப்பு காட்ட ஒன்றுமில்லை மலி வான விளம்பரம் தேடிக் கொள் ளும் நோக்கத்தைத் தவிர!

இந்து மக்கள் கட்சி மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு எதிராக, காதலர் தின எதிர்ப்பு என கலாச் சார சீரழிவுகளை ஏற்படுத்தும் சில நிகழ்வுகளுக்கு எதிராக அவ்வப் போது போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதில் நாமும் நியாயமான நிலைப்பாட்டில் நின்று அவ்வப் போது கருத்தை சொல்லி வருகி றோம்.

காதலர் தின எதிர்ப்பு குறித்த இந்து மக்கள் கட்சியின் கருத்தில் உள்ள நியாயத்தை உணரும் நாம், அதற்காக அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை, அணுகுமு றையை கண்டித்து வருகிறோம்.

அண்மையில் நடிகை குஷ்பு பொது நிகழ்ச்சி ஒன்றில் இந்துக் கள் கடவுளாக வழிபடும் உருவங் கள் பொறிக்கப்பட்ட சேலை அணிந்து உந்திருந்ததை அறிந்து இந்து மக்கள் கட்சி “எங்கள் மத உணர்வுகள் புண்படுகிறது...'' என்று எதிர்ப்பு காட்டியதில் நியா யம் இருந்தது. அதை நாமும் சுட் டிக் காட்டியிருந்தோம். ஆனால் அமீரின் கருத்தை அது எதிர்ப்ப தில் எந்த வித நியாயமும் இல்லை.

அறிவுக்குப் பொருத்தமான, நியாயமான விஷயங்களுக்காக இந்து மக்கள் கட்சி போராட முன் வரட்டும். மலிவான விளம்பரம் தேடும் நோக்கத்தை அது கைவிட வேண்டும் என்பதே நமது அறி வுரை.

- அபு

Pin It