"நான் ராஜபக்சேவை பார்த்தேன். அவா கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன். பிரபாகரன் எங்கேனு கேட்டா... அவா மாலத்தீவு பக்கத்துல மளிகை கடைக்காரர் ஆத்துலதான் ஜீவிதம் பண்றான்னு சொல்லிட்டேன். சீனாவுல இருந்து மூணு கப்பல் போகுது. பிரபாகரன அரெஸ்ட் பண்ணி கொண்டாந்துடுவா. இது விஷயமா ஒபாமாகிட்ட கூட டிஸ்கஸ் பண்ணிட்டேன்...''

என்ன சகோதரர்களே... மண்டை காயுதா? ஒண்ணுமே புரியலையா?

நம்ம ரீல் மாஸ்டர் சுப்பிரமணி யசாமி எல்லா பத்திரிகைக்கும் இப்படித்தான் பேட்டி கொடுக் கப் போறாரு. நிருபர்களும் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேட்டி கண்டு சீரியஸாக எழுதித் தள்ளுவார்கள்.

சரி விடுங்கள். சுப்பிரமணிய சுவாமி மெத்தப் படித்தவர். மேதாவி. ஆக்ஸ்போர்டு மாண வர்களுக்கே போய் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பவர். அரசியல் சாக்கடை. ஸாரி. சாணக்கியர். யோக்கியர். கை, கால், வாய் சுத்த மானவர். எல்லாம் ஓ.கே. தான்.

ஆனா இவ்வளவு இருந்தும் மனசாட்சியே இல்லாத பாவியா இல்ல இருக்காரு!

12 வயது சிறுவனைக் கூட போர் குற்றவாளி என்று குற்றம்சாட்டி... வாயில் பிஸ்கட் இருக்கும் போதே நெஞ்சில் பிஸ்டலை வைத்த கொடுங்கோலன் ராஜ பக்சேவைப் போய் பார் த்து பருப்பு சாதம் சாப்பிட்டு விட்டு வர... இவருக்கு எப்படி மனசு வந்தது.

ஒரு காலத்தில்... இலங்கையின் வட கிழக்கிலிருந்து மொத்த இஸ்லாமியர்களையும் இரவோடு இரவாக அடித்து விரட்டியவர் கள்தான் விடுதலைப் புலிகள்.

ஆனால் மே 18க்குப் பிறகு அவர்கள் மீது காருண்யம் கொண்டு ராஜபக்சே அரசை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வர்களும் அதே இஸ்லாமியர்கள் தான். தொடர்ந்து குரல் கொடுத் தபடி எதிர்ப்பை பதிவு செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

பிஞ்சுப் பாலகன் பாலச்சந்தி ரன் கொல்லப்பட்ட விதம் குறித்து சேனல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட அந்தக் காட் சியைப் பார்த்து அன்று மாலை யில் எஸ்.எம். பாக்கர் வின் டி.வி. யில் பார்த்து நிலைகுலைந்து போனார். “அடப் பாவிகளா... பாவிகளா...'' என்று அரற்றியப டிதான் இஷா தொழுகைக்குப் போனார்.

அன்று இரவு தூக்கமில்லாமல் அடுத்த நாள் காலை வின் டி.வி. யின் "செய்திகளும் நிஜங்களும்' நிகழ்ச்சிக்கு வந்தமர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருக்க... பாலச்சந்தி ரன் படுகொலை பற்றி பேசி கதறி னார்.

ஒளிப்பதிவாளர்ககள் கண் ணீர் விட்டனர். அது தான் தமிழ் உணர்வு. இன உணர்வு. அங்கு எஸ்.எம். பாக்கரை ஒரு இஸ்லாமி யராக பார்த்ததை விட ஒரு மனி தாபிமானமிக்க தமிழ் உணர்வாளராகத்தான் பார்த்தார்கள்.

ஆனால் இலங்கையில் ராஜ பக்சே என்ன செய்து கொண்டி ருக்கிறார்? இருக்கிற அனைத்து இந்து மத கோவில்களையும் இடித்து தள்ளிவிட்டு புத்த விஹா ரைகள் கட்டிக் கொண்டிருக்கி றார். ஆனால் அந்த மத உணர் வுகூட அற்றுப் போனவரா சுப்பி ரமணிய சுவாமி.

அல்லது “இந்து கோவில்களை இடிக்காதீர்கள்'' என்று ராஜபக் சேவின் கால்கலைப் பிடித்து கத றப் போயிருப்பாரா? அப்ப டியெல்லாம் நடந்தி ருக்காது.

அவாள் மாதிரி ஆளுங்க ளுக்கெல்லாம் சாமியை விட மதம்தான் பிடிக்கும். மதத்தின் பெயரால் செய்யும் அரசியல் தான் பிடிக்கும். இதன் மூலம் வரும் கோடிகள்தான் பிடிக்கும். அதைத்தான் சாணக்கியத் தனம் என்று அவா நினைப்பா!

ஒட்டுமொத்த உலகத் தமிழ் உணர்வாளர்களும் பாலச்சந்திரனின் பால் வடியும் முகமும், குண்டுகள் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கும் கோலமும் கண்டு கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்க...

நான் மட்டும் தனி. எனக்கு ஈவு இரக்கம், சூடு, சொரணை, வெட் கம், மானம், மரியாதை எதுவும் கிடையாது என்பதுபோல இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் இலங்கைக்குப் போய் ராஜ பக்சேவை சந்தித்து இளித்தபடி போஸ் கொடுத்து விட்டு வந்தி ருக்கிறாரே... இவரை உலகம் எப்படி மதிக்கும்; மன்னிக்கும்.

ஆனால் சுப்புரமணிய சுவாமி பற்றி ஏற்கெனவே ஒரு வதந்தி உண்டு. அது சீரியஸாகக் கூட இருக்கலாம். அது, அவர் வெளி நாடுகளின் ஏஜெண்ட் என்பது! குறிப்பாக அவாளுக்கு ஒத்துவ ராத கொள்கை கொண்ட அமெ ரிக்காவிற்கு!

ஒருவேளை ஏதாவது பேரம் பேச அமெரிக்கா அனுப்பிய ஏஜெண்டுதான் சுப்புரமணிய சுவாமியா? அப்படியென்றால் எத்தகைய பேரம் குறித்து ராஜ பக்சேவை சந்திக்கச் சென்றார்?

நாம் மிக கவனமாக சிந்திக்க வேண்டும். காரணம், சுப்பிரமணியனைப் போலவே அமெரிக் காவும் ஒரு விஷப் பாம்புதான்! இன்னும் சொல்லப் போனால் மொத்த அமெரிக்காவுமே பாம்பு புற்றுதான். பால் வைத்தவனுக்கே பால் ஊற்றும் நெஞ்சுரம் கொண் டது அமெரிக்கா.

ஒருவேளை, அமெ ரிக்கா கூட தனது கைக் கூலியாக சுப்பிரமணியனை அனுப் பியிருக்கலாம். “நான் அடிப்பது போல அடிக்கிறேன். நீ அழுவது போல அழு...'' என்ற கதையாகவும் இருக்கலாம்.

ஆனால் எது நடந்தாலும் எத் தகைய நாடகங்கள் அரங்கேற்றி னாலும் ஈழத் தமிழர்கள் விஷயத் தில் நடந்த கொடூரம் வெளிச்சத் திற்கு வந்து விட்டது. மதச்சார் பற்ற மொத்த ஜனமும் அழுகிறது. சேனல் 4 தொலைக்காட்சி இன்னும் இதைப் போன்று நிறைய வீடியோ ஆதாரங்களை வைத்திருப்பதாக அவர்களே சொல்கிறார்கள்.

இனி ராஜபக்சேவை யாராலும் காப்பாற்ற முடியாது. போர் முடிந்து விட்டதாக அவர்கள் மார் தட்டுகிறார்கள்.

இல்லை ராஜபச்சே இரத்தக் காட்டேறியே... இல்லவே இல்லை சுப்பிரமணிய சுவாமியே இல்லவே இல்லை!

Pin It