கர்நாடகத்தில் ஆட்சியை இழந்த முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா அக்கட்சியிலி ருந்து விலகி ஒரே இரவில் மதச்சார்பற்ற வாதியாக தன்னைக் காட்டிக் கொண்டு "கர்நாடகா ஜனதா கட்சி' என்ற புதுக்கட்சியை துவங்கிய வேகத் தில் முஸ்லிம்களின் நண்பனாக தன்னை காட்டிக் கொண்டதுடன் ஏறக்குறைய அவரது அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களை அருகில் வைத்துக் கொள்கிறார்.

பாஜகவில் இருக்கும்வரை முஸ்லிம்கள் வாக்கை கவர முடி யாது என்பதை எடியூரப்பா நன் றாக உணர்ந்து கொண்டு விட் டார்.

எடியூரப்பாவின் பாணியை உத்திரப் பிரதேச பாஜக தலை மையும் இப்போது பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. முஸ்லிம் களை வைத்துதான் முஸ்லிம் மக்களிடம் சென்றடைய முடியும் என முடிவு செய்திருக்கும் பாஜக, முதன் முறையாக அக்கட்சியின் சார்பில் ருமானா சித்தீகி என்கிற முஸ்லிம் பெண்மணிக்கு முக்கி யப் பதவியை வழங்கியிருக்கிறது.

கடந்த 23ம் தேதி உத்திரப் பிர தேச மாநில பாஜக, மாநில நிர் வாகிகள் பட்டியலை வெளியிட் டது. இதில் மாநில பாஜகவின் சிறுபான்மை பிரிவின் தலைவி யாக நியமிக்கப்பட்டிருக்கிறார் ருமானா சித்தீகி என்ற செய்தி தான் முக்கியத்துவம் கொண் டது. இவரது கணவர் ஒரு தொழி லதிபர். டெல்லி பல்கலைக் கழ கத்தில் சமூக அறிவியல் பயின் றுள்ளார் ருமானா.

பாஜகவுக்கு ஏற்கெனவே கட்சியின் பெண்கள் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்போதும் ஒரு பெண்மணி தான் தலைவராக தேர்ந்தெடுக் கப்படுவார்.

இதுவல்லாமல் கட்சியின் வேறு எந்த பிரிவுக்கும் பெண்கள் தலைவராக நியமிக்கப்பட்ட தில்லை. கிஸôன் மோர்ச்சா, எஸ்.சி., எஸ்.டி மோர்ச்சா, யூத் மோர்ச்சா, மைனாரிட்டி மோர் ச்சா என நான்கு துணை அமைப் புகள் இயங்குகின்றன. இதில் எதற்கும் பெண்களை தலைவராக பாஜக கடந்த காலங்களில் நிய மித்ததில்லை.

இது தவிர, பாஜகவின் சார்பில் இதர 31 பிரிவுகள் இயங்கி வரு கின்றன. அவற்றில் எந்த பிரிவுக் கும் பெண் தலைவரை பாஜக தலைமை நியமித்ததில்லை. இந்த நிலையில் சிறுபான்மை பிரிவுக்கு ருமானா சித்தீகி என்கிற முஸ்லிம் பெண்மணி நியமிக்கப்பட்டிருப் பது பாஜக கட்சியினரிடத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், இது முஸ்லிம்க ளின் வாக்குகளை கவரும் பாஜக வின் அரசியல் தந்திரம் என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏற்கெனவே உத்திரப் பிரதேச சிறுபான்மை பிரிவின் தலைவ ராக ஷஹாஃபத் ஹுசைன் என்ப வர் இருந்தார். இவரை பாஜக வின் முன்னாள் மாநிலத் தலைவ ரான சூர்ய பிரதாப் ஷாஹி நிய மித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முஸ்லிம் சமூகத்திலுள்ள பெண்களைக் கொண்டே முஸ் லிம் குடும்பங்களை நெருங்கும் எண்ணம் ருமானாவின் நியமனத் திற்கு பின்னால் இருக்கிறது என உத்திரப் பிரதேச பாஜக வட்டா ரம் தெளிவாகவே அறிவிக்கிறது.

லக்னோவைச் சேர்ந்த ருமானா 2004 முதல் பாஜகவில்தான் இருந்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிறு பான்மை பிரிவின் செயலாளராக வும், கட்சியின் தேசிய சிறு பான்மை பிரிவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கி றார் ருமானா.

பாஜக கட்சியில் முஸ்லிம் களை இணைப்பது என்பது அக் கட்சிக்கு எப்போதுமே சவாலா கவே இருந்து வந்துள்ளது என் பதை ஒப்புக் கொள்ளும் ருமானா,

“நான் பெண்ணாக இருக்கின்ற காரணத்தால் முஸ்லிம் ஆண்கள் செல்ல முடியாத முஸ்லிம் குடும் பங்களின் சமையலறைகளில் முஸ்லிம் பெண்களை நான் அணுக முடியும். இதன் மூலம் பாஜக முஸ்லிம்களின் நலன் விரும்பும் கட்சி என்று முஸ்லிம் பெண்க ளையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நம்ப வைப் பேன். எதிர் வரும் பாராளுமன் றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதர வாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்...'' என தெரி வித்துள்ளார்.

பாஜக கட்சியை நோக்கி முஸ் லிம்களை ஈர்க்கும் வகையிலான செயற்பாடுகளைக் கொண்ட பட்டியலை விரைவில் தயாரிக்க ஒரு குழுவை உருவாக்கப் போகி றாராம் ருமானா.

மாநில பாஜகவின் தலைவ ரான லஷ்மி காந்த் பாஜ்பாயோ, சமூகத்தின் அனைத்து பிரிவினர் களையும் அணுகுவதற்காக அல் லது அவர்களை நெருங்குவதற்கா கவே புதிய நிர்வாகக் குழு உரு வாக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒரு பிரிவுக்கு பெண் தலைமை தாங்குவது என்பது இதுவே முதல் முறையாகும். இது நேர் மறையான நடவடிக்கையாகும்...'' என தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தைப் பொறு த்தவரை பாஜகவை தீண்டத்த காத கட்சியாகவே அங்குள்ள சிறுபான்மை மக்கள் பார்க்கின் றனர். உத்திரப் பிரதேசத்தில் பாஜக கட்சிக்கு தேர்ந்தெடுக்கப் படும் முஸ்லிம்கள் கூட அங் குள்ள முஸ்லிம்களின் நன்ம திப்பை எவ்வகையிலும் பெற முடியாதவர்களாகவே இருந்துள் ளனர்.

ருமானா சித்தீகிக்கு முன்பு மாநில சிறுபான்மை பிரிவின் தலைவராக இருந்த ஷஹாஃபத் ஹுசைன் உ.பி. முஸ்லிம்கள் மத் தியில் அறியப்படாதவராகவே இருந்திருக்கிறார். இதேபோல, பாஜக சார்பில் மேல்சபை உறுப் பினராக இருந்த சீமா ரிஸ்வி என் கிற பெண்மணியும் பாஜக கட்சி யின் தலைவர்களுக்கு மட்டுமே தெரிந்தவர். உ.பி. முஸ்லிம்கள் மத்தியில் செல்லாக் காசாகவே இருந்துள்ளார்.

பாஜகவின் கட்சி விதிமுறை கள் 33 சதவீத பெண்கள் கட்சிப் பொறுப்புகளில் இருக்க வேண் டும் என்கிறது. இதன் அடிப்ப டையில் உத்திரப் பிரதேச மாநில நிர்வாகிகளாக புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள 105 பேரில் 41 பெண்கள் இருக்கின்றனர். பெண் களை அதிகளவில் பாஜக கட்சிப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுப் பதற்கு காரணம், நகரப்புறத்தைப் போன்றே கிராமப்புறத்திலும் ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகும் பொருட்டே இந்த ஏற் பாடு என்கிறார்கள் பாஜக தலை வர்கள்.

கட்சிப் பொறுப்பை ஏற்றதிலி ருந்து கட்சித் தலைவர்களிடமி ருந்தும், தொண்டர்களிடமிருந் தும் தனக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிகிறது என புளகாங்கிதம் அடையும் ருமானா சித்தீகியால், முஸ்லிம் கள் எனக்கு வாழ்த்து சொல்கி றார்கள் என்று ஒரு வார்த்தை சொல்ல முடிய வில்லை. இதன் மூலம் உத்திரப் பிரதேச முஸ்லிம் களின் வெறுப்பை அவர் சம்பா திக்கிறார் எனத் தெரிய வருகிறது.

இந்தியாவின் பெரிய மாநிலம் உத்திரப் பிரதேசம். இங்கு முஸ் லிம்களின் எண்ணிக்கை மிக அதி கம் என்பதை விட, அவர்கள் ஆட்சியாளர்களைத் தீர்மானிக் கும் "கிங் மேக்கர்'களாக இருக்கி றார்கள் என்பது எல்லா அரசியல் கட்சிகளும் உணர்ந்து வைத்திருக் கும் உண்மை.

அதனால்தான் மற்ற மாநிலங் களை விட உத்திரப் பிரதேசத் திற்கு கூடுதல் முக்கியத்துவம் தரு கிறது பாஜக. இம்மாநிலத்தி லுள்ள பெரும்பான்மை சமுதா யத்திடம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்'' என்றும், முஸ்லிம் மக்களிடத்தில் “பாஜக முஸ்லிம்களின் நண்பன்'' என்றும் அது வேஷம் போடுகிறது. இதற் காகவே ருமானாக்கள் களமிறக் கப்படுகிறார்கள். ஆயினும் உ.பி. முஸ்லிம்கள் ருமானாக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

- அபு

Pin It