கல்பாக்கம் அணு உலை வளா கத்தை சுற்றியுள்ள கிராம மக்களிடம், அணுக் கதிர் வீச் சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பிரச்சாரத்தையும், கதிர் வீச்சால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மருத்துவத்தையும் செய்து வரும் கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி அணுக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக ஆய்வு செய்து வருகிறார்.

மருத்துவத் தொழில் பொருளாதா ரத்தை மையப்படுத்தி இயங்கி வரும் இன்றைய சூழலில் அந்த மருத்துவப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றி மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறார் டாக்டர் புகழேந்தி.

அடிப்படையில் மருத்துவராக இருப்ப தாலோ என்னவோ, அணு உலை ஆபத்து கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

கல்பாக்கம் அணு உலை, கடல் எரிமலை குறித்து அவரிடம் பேசினோம்.

அணு உலை பாதுகாப்பு குறித்த விஷ யத்தில் அரசாங்கம் மற்றும் அணு சக்தி துறையைக் காட்டிலும் கூடுதலான அக்கறையும், கவலையும் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

“அணு உலை பாதுகாப்பு என்பது இந் திய சட்டத்திலும், அரசியல் அமைப்பிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் நமது பிரதமரே அணு உலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

சுற்றுச்சூழல் அமைச்சகமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது. அணு சக்தி நிர்வாகமும் அணு உலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சூழலில், அணு உலை என்பது பாதுகாப்பாகத்தான் இருக்க வேண்டும் என் பதில் மாற்றுக் கருத்தே இல்லை! ஆக, அடுத்த பாயிண்ட் என்னவென்றால்... சர்வ தேச அணு உலை பாதுகாப்பு விதிமுறை கள், இந்தியாவிலுள்ள அணு சக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. இதை பின்பற்ற வேண்டுமா இல்லையா?

ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற் றாமல் அணு உலை பாதுகாப்பாக இருக்கி றது என்று (அரசாங்கம்) சொல்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அறிவியல் இருக்கிறதா? மக்கள் இதை எப்படி நம்ப முடியும்?

சர்வதேச அளவில் அணு உலைகளை கண்காணிக்க சர்வதேச அணு சக்திக் கழகம் (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் அற்ர்ம்ண்ஸ்ரீ உய்ங்ழ்ஞ்ஹ் அஞ்ங்ய்ஸ்ரீஹ் - ஐஅஇஅ) இருக்கிறது. அது கண்காணிக்கிறது. இந்தி யாவில் அணு சக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது. அதன் விதிமுறைகள் ஏன் பின்பற்றப்படுவதில்லை; கண்காணிக் கப்படுவதில்லை?

நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால்... இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து இந்திய அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். இயல வில்லை என்றால் இழத்து மூடுங்கள்!

சட்டத்தில் இருப்பதைத்தானே பின்பற் றச் சொல்கிறோம். அதை பின்பற்றவில்லை அல்லது பின்பற்ற முடியவில்லை என்றால் எங்கேயோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

இதில் ஒரு முக்கிய விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இன்டிபென்டன்ட் ஆன நாங்கள் அணு உலை குறித்து விரிவாக ஆய்வு செய்து அது குறித்த வாதங்களை முன் வைக்கும்போது, அரசுத் தரப்பிலும் அணுசக்தி துறை தரப்பிலும் என்ன சொல்கிறார்கள் தெரி யுமா?

நாங்கள் பேசுவது அறிவி யலா? அல்லது அவர்கள் (மத்திய, மாநில அணு சக்தி வல்லுனர்கள் குழு) பேசுவது அறிவியலா? என்று கேட்டு பிரச்சினையை திசை திருப்புகின்றனர்.

நாங்கள் என்ன கேட்கிறோம்? எது அறிவியல் என்பதை முடிவு செய்ய அணு உலை இருக்கும் பகுதியைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர், அதிகாரிகள், விஞ்ஞா னிகள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர் கள் எல்லோரையும் கூப்பிடுங் கள். எல்லோர் முன்பு திறந்த நிலை விவாதம் செய்வோம். எங் கள் வாதங்களுக்கு ஆக்கப்பூர்வ மான பதில் சொல்லட்டும்! இதை யெல்லாம் நாங்கள் கேட்டால் அரசுத் தரப்பு வாயே திறப்ப தில்லை!

கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் இருந்து சுனாமி வராது என்று அணு உலை நிர்வாகமும் அணு சக்தித் துறையும் சொல் கிறது. அப்படியில்லை; அருகில் எரிமலை இருந்தால் சுனாமி வரும்' என்று சர்வதேச அணு சக்திக் கழகம் சொல்கிறது என்று நாங்கள் வாதிடுகிறோம்.

கல்பாக்கத்துக்கு அருகில் எரிமலை இருக்கிறது என்பதை சர்வதேச அணு சக்தி கழகம்தான் கண்டுபிடித்து சொல்கிறது! அதற் கான ஆய்வை மேற்கொள்ளு மாறு அதே அணு சக்தி கழகம் தானே சொல்கிறது! நாங்களா சொல்கிறோம்? பிறகு ஏன் இந்த ஆய்வை இவர்கள் மேற்கொள்ள வில்லை? இதை செய்யாமல் அரு கிலிருந்து சுனாமி வராது என்று பச்சைப் பொய்யைச் சொல் கின்றன அணு சக்தித் துறையும், அரசாங்க மும்!

சர்வதேச அணு சக்தி கழ கத்தை விடுங்கள்! இந்திய அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியமே - பூகோள ரீதியாக அணு உலைக்கு எந்தெந்த வகையில் பாதிப்புகள் வரும் என்பதையெல்லாம் ஆய்வு செய்த பிறகே அணு மின் நிலை யம் கட்ட வேண்டும் என்று சொல்கிறது. இந்த நிலையில், கல்பாக்கத்திலிருந்து 104 கி.மீ. தூரத்திலேயே எரிமலை இருப்ப தாக சொல்லப்படுகிறதே... அருகி லிருந்து சுனாமி வரும் வாய்ப்பும் இருக்கிறது என்றும் சொல்லப்ப டுகிறதே... ஆனால் இது குறித்து ஆய்வு செய்யாமலேயே கல்பாக் கம் அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று சொல்கிறீர் களே... இது நியாயமா? அறிவுப் பூர்வமான வாதமா? இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

அணு உலை பாதுகாப்பு விதி முறைகள் சட்டத்தில் இருக்கிறது. அதை நாங்கள் மீறுகிறோமா? இவர்கள் மீறுகிறார்களா? இப் போது நாங்கள் பேசுவது அறிவி யலா? மத்திய, மாநில வல்லுனர் குழுவும், அணு உலை நிர்வாக மும் பேசுவது அறிவியலா?'' என்றெல்லாம் அணு உலையாய் கொதித்த மருத்துவர் புகழேந்தி,

“ஆக, அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கிறது என்று மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஏன் ஊட்ட வேண்டும். இவர்கள் வகுத்த சட்டத்தை இவர்களே கடை பிடிக்காமல் சட்டத்தை மீறுகிறார்கள். சர்வதேச அணு சக்தி கழகத்துடனான இந்தியாவின் ஒப்பந்தத்திற்கும் இது முரணானது இல்லையா? இதுதான் அறிவியலா? நீங்களே சொல்லுங்கள்...'' என்று நம்மிட மும் கேள்வியெழுப்பினார்.

நியாயமான கேள்விதான்! இதற்கான பதிலைச் சொல்ல மத்திய, மாநில வல்லுனர் குழு விற்கும், அணு உலை நிர்வாகத் திற்கும் திராணி இருக்கிறதா என்ற கேள்வியை நாம் அவர்களி டம் கேட்க வேண்டியிருக்கிறது!

- ஃபைஸல்

Pin It