மத அடிப்படையில் சிறுபான்மை சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு வழங்கியிருக்கும் அலுவலக ஆணையை ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சத விகித இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறு பான்மை சமூகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக ஆந் திரப் பிரதேசத்தின் பிற்படுத்தப் பட்டோர் சமூக நலச் சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணய்யா மற் றும் பலர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந் திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மதன் பி. லாகூர், பி.வி. சஞ்சய் குமார் உள்ளிட்ட டிவி ஷன் பெஞ்ச், மத அடிப்படை யில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு வழங்குவதில் எவ்வித நியாயமும் இல்லை என தீர்ப்ப ளித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு அதன் தீர்ப்பை தள்ளி வைத்திருந்த ஆந்திர உயர் நீதிமன்றம், கடந்த 28ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளித்துள் ளது.

முன்னதாக, சிறுபான்மையின ருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக் கீடு மத அடிப்படையில் வழங் கப்பட்டதல்ல... மாறாக அவர்க ளின் பின் தங்கிய நிலையின் அடிப்படையில்தான் வழங்கப் பட்டது. உள் ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் பயன்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு மத் தியில் நியாயமான பங்கீடாக கிடைக்க வேண்டும் என்பதற் காக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி “நீதிமன்ற உத்தரவை படித்து தேவைப்பாட்டால் மட் டும் பதிலளிப்போம்” என தெரித்திருக்கிறார்.

Pin It