இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நக ராட்சி மீது மக்க ளுக்கு எப்போதுமே அதிருப்தி தான். பழுதடைந்த செப்பனிடப் படாத சாலைகள், பஸ் ஸ்டாண்டு பிரச் சினை, குடிநீர் பிரச்சினை என்று பல சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர் கீழக் கரை வாசிகள்.

கீழக்கரை நகராட்சியின் அலட்சியப் போக்கை கடந்த மார்ச் 11-17,2011 தேதியிட்ட சமுதாய மக்கள் ரிப்போர்ட் இதழில், "அரசியல் படுத்தும் பாடு! திண் டாடும் கீழக்கரை மக்கள்' என்ற தலைப்பில் நேரடி ரிப்போர்ட் தந்திருந் தோம்.

தற்போது குப்பை கள் வடிவில் நகராட் சிக்கும் - ஊர் மக்களுக்கும் இடையில் பிரச்சினை உருவாகியிருக்கிறது.

கீழக்கரையில் சேரும் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே சாலை யோரங்களிலும், தெருக்களிலும், மக்கள் புழங்கும் பொது இடங்களிலும் கொட்டிக் கிடப்பதால் அவதி யுறும் கீழக்கரை மக்கள் நகராட்சிக்கு பலமுறை புகார் மனு அளித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற் கொள்ளும்படி கோரி வந்தனர்.

பொது மக்களின் தொடர் அழுத்தங்களின் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு முயற்சி எடுத்தார் கீழக்கரையின் நகராட்சி சேர்மனான பஷீர் அஹ்மது.

இதன்படி கீழக்கரைக்கு வெளியே கிள்ளயேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியாரிடமிருந்து கீழக்கரை நகராட்சிக்கு அரசாங்கம் வாங்கிக் கொடுத்த 11 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் கொட்டலாம் என்று தீர்மானித்தார் நகராட்சித் தலைவர்.

இந்த தகவல் கிள்ளையேந்தல் பஞ் சாயத்திற்கு தெரிய வந்தவுடன் அவ்வூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த இடத்தில் குப்பைகள் கொட்டக் கூடாது என அவர்கள் தடை ஆணை யும் பெற்று விட்டனர்.

இதனால் குப்பைகளை அகற்ற முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்த நகராட்சி நிர்வாகம், கடந்த 3 மாதத் திற்கு முன் கடற்கரையோரம் குப்பை களைக் கொட்ட முஸ்தீபுகளை மேற் கொண்டது. ஆனால் கடற்கரையோ ரம் வசிக்கும் மக்களின் கடுமையான எதிர்ப்பால் அந்த முயற்சியும் பலன ளிக்காமல் போனதால் இ.சி.ஆர் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டியது நகராட்சி நிர்வாகம்.

இ.சி.ஆர். சாலையெங்கும் இறைந்து கிடந்த குப்பைகளைக் கண்டும், நக ராட்சியால் அக்குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்ட புகையின் நாற்றம் தாங்காமலும் இசிஆர் சாலையோர கிராம மக்கள் போர்க் கொடி உயர்த்த குப்பைகளை அப்படியே விட்டு விட்டு செய்வதறியாது திகைத்த நகராட்சி நிர் வாகம் ஒரு வழியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஊர் பிரமுகர்கள், இயக்கப் பிரதிநிதிகள், ஜமாஅத்தார் கள் என அனைவரையும் அழைத்து நகராட்சி கட்டிடத்தில் ஆலோசனை நடத்தியது.

இக்கூட்டத்தில் குப்பைகளைக் கொட்ட கடந்த காலங்களில் நகராட்சி எடுத்த முயற்சிகளை விவரித்தார் சேர் மன் பஷீர்.

இறுதியாக கீழக்கரை நகருக் குள்ளேயே ஒரு இடத்தில் குப் பைகளைக் கொட்டலாம் என்று முடிவு செய்தபோது, கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதி நிதிகள் - கீழக்கரைக்கு வெளியே குப்பைகளைக் கொட்டுவதற்கே எதிர்ப்புகள் கிளம்பி அந்த முயற் சிகள் தோல்வியில் முடிந்த நிலை யில் - நகராட்சிக்குட்பட்ட ஊர் பகுதியில் கொட்டினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி, குடியிருப்புப் பகுதியில் குப் பைகளைக் கொட்ட ஜே.சி.பி., பொக்லைன் ஆகியவற்றைக் கொண்டு சென்று பள்ளம் தோண்ட ஆரம்பித்த நகராட்சி ஊழியர்களை அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களும், முஸ் லிம்களும் சேர்ந்து விரட்டியடித் துள்ளனர்.

இந்நிலையில் குப்பைகளை அகற்ற உருப்படியான முயற்சி எடுக்காத நகராட்சியைக் கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 6ம் தேதி கண் டனக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், "கீழக்கரையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கு, இப்பகுதி மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் திமுக விற்கு எதிராக வாக்களித்தனர் என்று எண்ணி நகர சபை பழி வாங்குகிறது. இதனைக் கண் டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போராட்டம் நடத்தப் படும். ஒரு வார காலம் நகர சபைக்கு அவகாசம் கொடுக்கி றோம். அதற்குள் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் எதிர் வரும் 12ம் தேதி போராட்டம் நடத்துவோம். அப்போது குப் பைகளை அள்ளிக் கொண்டு போய் நகராட்சி சேர்மன் பஷீர் வீட்டு வாசலில் கொட்டுவோம்...'' என்று பேசியிருந்தார்.

இதனால் பதட்டமடைந்த நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற தீவிர முயற்சி எடுத்து ஒரு வழியாக இ.டி.ஏ. குருப்பின் மேனேஜிங் டைரக்டரான சலாவு தீனைச் சந்தித்து பிரச்சினையைச் சொல்லி - கீழக்கரைக்கு அருகா மையிலுள்ள கும்பிடு மதுரை கிராமத்தில் இருக்கும் சலாவுதீ னுக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பைகளைக் கொட்டிக் கொள்ள அனுமதி பெற்று, அரசு மருத்துவமனை, நகராட்சிக் கட்டிடம், தினசரி மார்க்கெட், வடக்குத் தெரு பள்ளி வாசல், பழைய அப்சரா தியேட் டர் ஆகிய பகுதிகளில் குவிந்தி ருந்த குப்பைகளை கடந்த 11ம் தேதியே அகற்றியிருக்கிறது.

இதனால் கீழக்கரை மக்கள் சற்று ஆறுதல் அடைந்திருந்தா லும், இன்னும் கிழக்குத்தெரு, ஹைராதுல் ஜலாலியா பள்ளிக் கூடம், தொடக்கப் பள்ளி, மீன் மார்க்கெட், பஸ் ஸ்டாண்டு பின் புறம் உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் அப் படியே தேங்கிக் கிடப்பதாக புகார் வாசிக்கின்ற னர்.

நம்மைச் சந்தித்த கீழக்கரை கிழக்குத் தெருவாசி ஒருவர், “முந் தைய திமுக ஆட்சியின் அவலத் திற்கு கீழக்கரை நகராட்சியின் லட்சணம் ஒன்றே சான்று சார்...'' என்றார் வெறுப்புடன்.

- ஃபைஸ் & அபு முஜாஹித்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனை

கீழக்கரையின் புறநகர்ப் பகுதி யில் அமைந்துள்ள தாத னேந்தல் கிராமத்திற்கு அரு கில் குப்பைகளைக் கொட்டிக் கொள்ள நகராட்சிக்கு இடத்தை ஒதுக்கித் தந் துள்ளது அரசு. ஆயினும் அந்த இடத்தை பயன்படுத்துவதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தி ருக்கிறது.

அந்த இடத்தை பயன்படுத்தும் வகையில் - நகராட்சி வாகனங்கள் செல்ல சாலை அமை க்க வேண்டும். இடத்தைச் சுற்றி தகர வேலி அல்லது சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும்; பின்னர் தான் குப்பைகளைக் கொட்ட அவ்விடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். நகராட்சி நிர்வாகமோ இதற்காக அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கையை பிசைகிறது.

திமுக சேர்மனான பஷீர் அஹ்மதின் பதவிக் காலம் ஆகஸ்டு மாதத்தோடு நிறைவடைகிறது. அதற்குள் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கண்டு கீழக்கரை மக்களின் நன்மதிப்பை பெற்றுவிட தீவிரம் காட்டி வருகிறார் பஷீர். ஆனால் கீழக்கரை வாசிகளோ “நாலே முக்கால் வருஷத்துல பண்ணாததை இரண்டு மாசத்துல பண்ணி ருவாராக்கும்...'' என்கிறார்கள்.

Pin It