வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுனை அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்த பள்ளிவாசல் டிரஸ்டியான மஹ்பூப் பாஷா என்பவரையும், அவரது மனைவி ஜாகிராவையும் வாணியம்பா டியின் பிரபல கள்ளச்சாராய ராணியான மகேஸ்வரியின் ஆட்கள் தாக்கியதால் பலத்த காயத்திற்குள்ளான இருவ ரையும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்த அப்பகுதி மக்கள், தாக்குதல் நடத்திய குண்டர்களைக் கைது செய்யக்கோரி ஆலங்காயம் நெடுஞ்சாலையில் கடந்த 23-06-2011 அன்று ஐஎன்டிஜே வேலூர் மாவட்டத் தலைவர் அத்தீக் தலைமையில் சாலை யில் அமர்ந்து கோஷமிட்ட னர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத் திற்கு வந்த வாணியம்பாடி கலால் ஏ.டி.எஸ்.பி. முருகேசன், குற்றவா ளிகளை கைது செய்வோம் என்று அளித்த உறுதிமொழியையடுத்து சாலை மறியலை கை விட்டனர் பொது மக்கள்.

கள்ளச்சாராய கும்பல் மஹ்பூப் பாஷாவைத் தாக்கியது ஏன்? ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...

கடந்த 4 மாதத்திற்கு முன்பு வரையிலும் வாணியம்பாடி நேதாஜி நகர் குடியிருப்புப் பகுதி யில் அரரசின் மதுபானக் கடை யான டாஸ்மாக் இயங்கி வந்தது. இதை எதிர்த்த அப்பகுதி மக்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையில் தொடர் போராட் டம் நடத்தி அக்கடையை மூட வைத்தனர்.

டாஸ்மாக் கடை மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் கள்ளச்சாராய வியாபாரம் அதிகரித்ததால்... குடி மகன்களால் தினமும் தொந்தரவுக் குள்ளான அப்பகுதி மக்கள், கள்ளச்சாராயத்தை அப்பகுதியில் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் புகார் அளித்து வந்தனர்.

வழக்கம்போல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் காது குடைந்து கொண்டிருந்தது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன் வாணியம் பாடி பகுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐஎன் டிஜே மாநில நிர்வாகிகளான அபு பக்கர் மற்றும் முஹம்மது முஹை யித்தீனிடம் புகார் அளித்த பொது மக்கள் - டாஸ்மாக் கடையை மூட வைத்தது போலவே கள்ளச்சார யத்தை ஒழிக்கவும் ஐஎன் டிஜே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கள்ளச்சாரய பாக் கெட்டுகளையும் கொண்டு வந்து காட்டி னர்.

இதனையடுத்து காவல்துறை யின் கவனத்திற்கு இப்பிரச்சி னையை கொண்டு சென்ற ஐஎன் டிஜே நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மக்கள் போராட்டத்தை சந்திக்க வேண்டி வருமென காவல்துறையை எச்ச ரித்தனர்.

தொடர்ந்து கள்ளச்சாரயப் பிரச்சினை பூதமாகக் கிளம்பிய தால் பொது மக்களும், காவல்து றையும் கலந்து கொண்ட ஆலோச னைக் கூட்டத்தை கடந்த மே 4ம் தேதி கூட்டியது காவல்துறை. இதில் பேசிய வாணியம்பாடி சரக துணை சூப்பிரண்டு அப்துல் லாஹ், “கள்ளச்சாரய கும்பலை பிடிக்க பொது மக்களும் ஒத்து ழைப்பு தர வேண்டும். காவல் துறையினர் வருவதற்கு முன் அவர் கள் தப்பியோடி விடுகின்றனர். அவர்களைப் பிடிக்க பொது மக்க ளின் ஒத்துழைப்பு அவசியம்...'' என்று பேச... அங்கே கூட்டத்தில் அமர்ந்திருந்த நேதாஜி நகர் மஹ்பூப் பாஷா சற்றே ஆர்வத்து டன் "அவர்களை நான் பிடித்துத் தருகிறேன்...' என குரலெழுப்பி னார். அப்போது அவரைக் குறி வைத்தது கள்ளச்சாராய கும்பல். இந்த ப்ளாஷ் பேக் கோடு இனி விஷ யத்திற்கு வருவோம்.

காவல்துறையினர் - பொது மக்கள் கலந்து கொண்ட ஆலோச னைக் கூட்டத்திற்கு பிறகு ஜரூராக களமிறங் கிய போலீஸ் நேதாஜி நகர் பகுதியிலும், வாணி யம்பாடியின் ஏனைய பகுதிகளிலும் அதிரடி ரெய்டு நடத்தி கள்ளச்சாராய கும்பலை அலற வைத்தது.

இதன் தொடர்ச்சியாக, சாராய ராணி மகேஸ்வரியை குண்டர் சட்டத்திலும் கைது செய்தது காவல்துறை. இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி கும்பல்... இதற்கெல் லாம் காரணம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர்தான் எனக் கருதி ஜமாஅத்தின் நிர்வா கிகளுக்கு மிரட்டல் விடுத்தவண் ணமிருந்தனர்.

இதன் தொடர்ச்சிதான் மஹ்பூப் பாஷா, ஜாகிரா மீது மகேஸ்வ ரியின் ஆட்கள் நடத்திய தாக்குதல்.

காவல்துறை நடத்திய ஆலோச னைக் கூட்டத்தில் “கள்ளச்சாராய கும்பலை நான் பிடித்துத் தருகி றேன்...'' என்று சொன்ன மஹ்பூப் பாஷாவை குறி வைத்த மகேஸ்வரி யின் கூலிப்படை மஹ்பூப் பாஷாவின் வீட்டு வாசலில் சாராய பாட்டில்களையும், பிளாஸ்டிக் பைகளையும் போட்டு வம்புக்கிழுத்து தாக்கு தலை நடத்தியுள்ளது.

மஹ்பூப் பாஷாவையும், அவரது மனைவி ஜாகிராவையும் தாக்கிய மகேஸ்வரியின் கூலிப் படையான விநாயகம், சிவலிங் கம், முருகா உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 25ம் தேதி 3 மூட்டை சாராய பாக் கெட்டுகளோடு 2 கள்ளச்சாராய வியாபாரிகளையும் பிடித்து வந்து தாலுகா காவல் நிலையத் தில் ஒப்படைத்திருக்கின்றனர் பொது மக்கள்.

மறுநாள் 26ம் தேதி நேதாஜி நகர் பகுதிக்கு கத்தி மற்றும் ஆயு தங்களுடன் வந்த மூன்று மர்ம நபர்கள், ஐஎன்டிஜேவின் மாவட் டச் செயலாளர் அப்துல் ரஹீமை கடுமையாக மிரட்டிவிட்டுப் போக...

இதையறிந்து கோபமான அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் வரை திரண்டு - நாங்களே மர்ம நபர்களைப் பிடிக்கிறோம் எனக் கிளம்ப... தகவல் அறிந்து ஓடி வந்த துணை சூப்பிரண்டு அப் துல்லாஹ், “அவர்களை வெகு விரைவில் பிடித்து விடுவோம்...'' என்று உறுதியளித்து கூட் டத்தை கலைத்திருக்கிறார்.

வாணியம்பாடியில் கள்ளச்சா ரயத்தை ஒழித்துக் கட்டும் முயற் சியில் ஈடுபட்டுள்ள ஐஎன்டிஜே நிர்வாகிகள் மீது கொலை வெறி யோடு இருக்கும் கள்ளச்சாராய கும்பல் மீது காவல்துறை கடுமை யான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். போலீசுக்கு ஒத்துழைப்பு தந்து வரும் ஐஎன் டிஜேவினரை கொலைவெறி குண்டர்களிடமிருந்து பாதுகாப் பளிக்கும் பொறுப்பும் காவல்து றைக்கு இருக்கிறது. இதில் காவல் துறை மெத்தனம் காட்டக் கூடாது.

- ஃபைஸல்

போலீஸ் வழக்கு

மஹபூப் பாஷா, ஜாகிரா மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட போதும், வேலூர் மாவட்ட ஐஎன்டிஜே தலைவர் நூருத்தீன் அத்தீக் மீது மட்டும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

சாராய ராணி கைது!

கடந்த மே 20-26,2011 தேதியிட்ட "சமுதாய மக்கள் ரிப்போர்ட்' இதழில் "சாராய ராணிக்கு சலாம் போடும் போலீஸ்' என்ற தலைப்பில் வாணியம்பாடியில் கள்ளச்சாராய சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் மகி என்கிற மகேஸ்வரியின் சமூக விரோதச் செயல்களையும், காவல்துறையின் அலட்சியத்தையும் ரிப்போர்ட்டாகத் தந்திருந்தோம். இச்செய்தியின் எதிரொலியாக கடந்த வாரம் அதிரடியாக மகேஸ்வரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது காவல்துறை.

Pin It