தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் ரமலான் நோன்பு காலத்தில் மைய வாடியில் உள்ள மண்ணறைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நாசரேத்திற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாழையடி கிராமம். ஒரு காலத்தில் இந்தக் கிராமத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசித்து வந்தனர். 1926ம் ஆண்டு இப்பகுதியில் காலரா பரவி அதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள சவரமங் கலத்தில் குடியேறினர்.

வியாபாரத்தில் மிகவும் சிறந்து விளங்கிய அம்மக்களுக்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது. 1956ம் ஆண்டு பெரும் வெள்ளம் சவர மங்கலத்தை தாக்கியது. இதனையடுத்து அம்மக்கள் கேம்ளாபாத், பேட் மாநகரம், ஆழ்வார் திரு நகரி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் பிரிந்து குடியேறினர்.

இந்த மக்கள் வாழையடி கிராமத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் அவர்கள் பயன்படுத்தி வந்த பள்ளிவாசல் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்தது. பள்ளிவாசலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டது. தற்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் முஸ்லிம் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு இவர்கள் நாசரேத்தில் உள்ள முஸ்லிம் வியாபாரிகளிடத்தில் சிதிலமடைந்துள்ள பள்ளிவாசலை தொழுகைக்கு ஏற்ற வகையில் புதுப்பித்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பெருமுயற்சி செய்து வாழையடி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு ஐவேளை தொழுகைகள் சிறப்புற நடந்து வருகிறது.

பள்ளிவாசலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிக்கப் பட்டது போக மையவாடி இருந்த ஒன்னேகால் ஏக்கர் மட் டும் காலியாக இருந்தது. இந்த இடத்தை பாதுகாப்பதற்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மைய வாடியைச் சுற்றி கம்பி வேலியை நட்டு வைத்தனர்.

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிர மித்த கும்பல் மையவாடி நிலம் வேலி போட்டு பாதுகாப்பு செய்யப்பட்டதைக் கண்டவுடன் தமது எண்ணங்கள் ஈடேறாமல் போகிறதே என்று இடைஞ்சல் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

சுதந்திர தினத்தன்று காவல்து றையினர் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலை யில் இதனைப் பயன்படுத்திய ஆக்கிரமிப்பு கும்பல் மையவாடி யில் போடப்பட்டிருந்த கம்பி வேலியை பிடுங்கி எறிந்தது.

மையவாடியில் புதைக்கப்பட் டிருந்த ஜனாஸôக்களின் விவரம் பொதித்த கல்வெட்டுகளையும் அகற்றியுள்ளனர். இதனைய டுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தி னர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆக்கிரமிப்பு தரப்பினர் அது தாங்கள் நீர்மாலைக் காக (நீர்மாலை என்பது இந்துக்கள் சுடுகாட்டிற்கு சென்று விட்டு வந்து குளிக்கும் இடம்) பயன்படுத்தும் இடம் என்று பதில் புகாரை அளித்துள்ளனர்.

இதனால் குழம்பிப் போன காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு பிரச்சினையை ஆர். டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்து விட்டு முடித்துக் கொண்டது. விரைவில் ரமலான் பண்டிகையும், விநாயகர் சர்த்தியும் வர உள்ள நிலையில் பிரச் சினை எங்கு திசை திரும்பி என்னவாகுமோ என்று மக்கள் பயந்த வண்ணம் உள்ளனர்.

சட்டமன்றத்தில் முதல்வர் முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வக் ஃபு சொத்து ஆக்கிரமிப்புக்குள்ளானதை தடுக்காமல் காவல் துறை அமைதி காப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.

அடையாளங்களை மறைக்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்கள்!

மையவாடி குறித்து மஸ்ஜிதுர் ரஹ்மான் கமிட்டித் தலைவர் சாதிக்கிடம் கேட்டபோது, “இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் பத்து பதினைந்து குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். ஆனால் இந்தப் பள்ளிவாசலுக்கு நாசரேத்திலுள்ள முஸ்லிம் வியாபாரிகளும், பக்கத்திலுள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம், இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் மர்காஸஸ் கல்லூரியில் படிக்கும் முஸ்லிம்களும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த பள்ளிவாசல் இல்லாவிட்டால் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆழ்வார் திருநகரியில் உள்ள பள்ளிவாசலில் தங்கள் தொழுகையை நிறைவேற்றவேண்டி வரும்.

மையவாடி உள்ள இடத்தை முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதைக் காட்டும் ஜனாஸôவின் விவரங்கள் அடங்கிய கல்வெட்டுகளை அப்புறப்படுத்தி அடையாளங் களை மறைத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்தவர்களின் சாதியினர் இக்கிராமத்தில் மெஜாரிட்டியாக உள்ளதால் காவல்துறையினரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். பள்ளிவாசல் பகுதியில் பாதுகாப்புக்கு என்று காவலர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய கண் முன்னாடியே ஆக்கிரமிப்பாளர்கள் கும்பலாக எங்களை மிரட்டுகின்றனர். காவல்துறை வேகமாக நடவடிக்கை எடுத்தால் இதற்கு முடிவு கிட்டும் என்று கூறினார்.

Pin It