பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீது மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தாமதித்தது ஏன் என்று மத்திய அரசின் வழக்கறிஞரிடம் அஃபிடவிட் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கோரியிருக்கிறது.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பான சதித் திட்ட குற்றச்சாட்டுகள் அத்வானி உள்ளிட்ட மற்ற வர்களுக்குப் பொருந்தாது என்று அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய காலம் தாழ்த்தி வருவது ஏன் என்று சி.பி.ஐ.யை யும் கேள்வி கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 6, 2012 அன்று, அத்வானி உள்ளிட் டோருக்கு எதிரான பாபரி மஸ் ஜித் இடிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ராய் பரேலி நீதிமன்றத்தை உச்ச நீதி மன்றம் கேட்டுக் கொண்டிருந் தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, அத்வானி உள்ளிட்ட இந்துத்துவா தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்த ரவை கடந்த மே 21, 2010ல் அல ஹாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது சி.பி.ஐ. இதைத்தான் ஏன் தாமதம் என்று கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று, 1992 டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜித் இடித்து தகர்க்கப் பட்டபோது, அயோத்தியில் ராம் கதா குஞ்ச் பகுதியில் (பாபரி மஸ் ஜிதிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில்) அத்வானி உள்ளிட்ட இந்துத்துவா தலைவர்கள் இருந் தனர் என்பது. மற்றொன்று, சர்ச் சைக்குரிய பகுதிக்குள்ளும் அதைச் சுற்றியும் திரண்டிருந்த லட்சக் கணக்கான கரசேவகர்களுக்கு எதிரான வழக்கு.

ஆனால், சி.பி.ஐ. அத்வானி மற்றும் வேறு 20 பேர் மீது இ.பி. கோ. 153ஏ (இரு வகுப்பினருக்கி டையே பகைமையை ஏற்படுத்து தல்) 153பி (தேசிய ஒருமைப்பாட் டுக்கு குந்தகம் விளைவித்தல்) மற்றும் 505 (பொய்யான அறிக்கைகள், கலகம் விளைவிக்கும் நோக் கத்தோடு வதந்திகளை பரப்புதல் அல்லது பொது அமைதியை கெடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியிருந்தது.

தொடர்ந்து 120 பி (குற்றச் சதித் திட்டம்) பிரிவின் கீழ் அத்வானி மற்றும் இதர 20 பேரையும் கொண்டு வந்தது சி.பி.ஐ. இந்த குற்றச்சாட்டைத்தான் சிறப்பு நீதிமன்றம் நீக்கியது. பின்னர் அலஹாபாத் உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இந்த குற்றப்பட்டியலில் பால் தாக்கரேவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. பால் தாக்கரே இறந்த பின் அவரது பெயரை நீக்கியிருக்கிறது சி.பி.ஐ.

20 ஆண்டுகள் கடந்த பின்பும் இந்த வழக்கு இழுத்துக் கொண் டிருப்பதற்கு மத்திய அரசும், சி.பி. ஐ.யும் முக்கிய காரணமாகும். உரிய நேரத்தில் அவை மேல் முறையீடு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியது முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல... நீதித்துறைக்கு செய்த துரோகமுமாகும்.

Pin It