மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன துலேயில் கடந்த ஜனவரி 6ம் தேதி இனக்கலவரம் நிகழ்ந்தது.இக்கலவரத்தில் 6பேர் உயிரிழந்தனர்.இரு நூறுக்கும் மேற்பட்ட பொது மக்களும் 102 காவல்துறையினரும் படுகாயமடைந்தனர்.

மிகப் பெரும் கலவரமாக உருவெடுத்த இந்த இனமோதல் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக் கும் இடையே நிகழ்ந்தது.மோதல் ஏற்பட்டதற்கு அற்பமான விஷயமே காரணமானது.

துலே பகுதியிலுள்ள மச்சி பஜார் சவுக் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது "மராத்தா மட்டன் ஷாப்'என்கிற உணவகம்.இந்த உணவகத்தின் உரிமையாள ராக இருக்கிறார் கிஷோர் வாக் என்பவர்.

இந்த உணவகத்திற்கு இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் வந்து சாப் பிட்டுள்ளனர். சாப்பிட்டதற்கான பில் தொகை 30 ரூபாய் தொடர் பாக கிஷோர் வாக்கிற்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில், முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் தாக்கியிருக்கிறார் கிஷோர் வாக்.

தாக்கப்பட்ட நிலையில் வெளி யேறிய இருவரும் தங்கள் தரப் பைச் சேர்ந்த 50பேரை அழைத்துவர,பதிலுக்குஇந்து சமுதாயத்தைச்சேர்ந்தவர்களை கிஷோர் வாக் அழைத்துள்ளார். இதனையடுத்து இரு தரப்பும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளது -இது கலவரத்திற்கு போலீஸ் சொல்லும் காரணம்.

ஆனால், மச்சி பஜார் மக்களோ முஸ்லிம் இளைஞர்களுக்கும், உணவக உரிமையாளரான கிஷோ ருக்கும் தகராறு ஏற்பட்டதும் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தரப்பினர் மச்சி பஜார் சவுக் காவல் நிலையத்தில் புகார் அளித் தனர்.

கிஷோர் தரப்பிலும் புகார் அளித்தனர். இதில் இரு தரப்பு, புகாரையும் ஏற்க மறுத்த காவல் துறை இரு தரப்பும் தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்ளுங் கள் என விரட்டி விட்டிருக்கிறது. இதன் விளைவு இரு தரப்பும் கல் வீச்சில் ஈடுபட்டு அதுவே கலவர மாக உருவெடுத்தது என்று செய்தி யாளர்களிடம் தெரிவித்திருந்த னர்.

சம்பவத்தின் துவக்கத்திலேயே இரு தரப்பிலும் விசாரித்து,தவறி ழைத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்குமானால் இன்னொரு தரப்பினரின் கோபம் அடங்கியிருக்கும்.அதைசெய்யாமல்,காவல்துறை கடைபிடித்த சட்ட விரோத அணுகுமுறைதான் கலவரத்திற்கு காரணமாகியுள் ளது.

இந்த கலவரத்தில் இறந்து போன ஆறு பேரும் முஸ்லிம்கள்.துலே மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வகுப்புவாத வன்முறையை அதன் தாக்கத்தை அறியா தவர்களல்ல. 2008ல் நிகழ்ந்த வகுப் புக் கலவரத்தின் மூலம் ஏற்பட்ட பயம், இழப்பு மற்றும் வெறுப்பு ணர்வை அவர்களிடம் இன்றும் காண முடிகிறது. 2008 கலவரம் நகரத்தையே முடக்கிப் போட்டி ருந்தது.

இந்தத் தகவல்களை அறிந்தும் காவல்துறை மச்சி பஜார் சம்பவத்தை அலட்சியம் செய்திருக்கிறது.

“யாரை நம்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஹிந்து - முஸ்லிம் குடும்பங்களுடன் சேர்ந்தே நாங்கள் வசிக்கிறோம்.எங்களுக்குள் எல்லாமே நல்லவித மாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

நாங்கள் வீடுகளை விட்டு வெருண்டோடி எங்கள் உயிர் களை பாதுகாத்துக் கொண்டிருக் கிறோம்...'' என்கிறார் கீதா பிரஜாபதி என்கிற இந்துப் பெண்.

கீதாவின் கருத்தே, துலே பகுதி இந்து - முஸ்லிம்களின் ஒற்றுமை யான வாழ்க்கையை வெளிப்படுத் தும் விதமாக அமைந்திருக்கிறது.

ஆனால்,வகுப்புவாத சக்திகள் எப்போதுமே மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதில் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன.இந்தக் கலவரத்தில் துலே போலீஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டிருக்கிறது.

இக்கலவரத்தைப் பயன்படுத்தி காவல்துறை முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடி உள்ளது.முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.இந்த காட்சிகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகள் ஆதாரங்களாக இருக்கின்றன.

காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டிருப்பதால் இக்கலவரம் குறித்து ஏற்கெனவே நீதி மன்ற விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ள நிலையில்,கடந்த 18ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகாந்த் மால்தே துலே வகுப்புக் கலவரம் குறித்து விசாரணை மேற்கொள் வார் என அறிவித்திருக்கிறார் மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல்.

இக்கலவரம் தொடர்பாக, கொள்ளை மற்றும் சூறையாட லில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் 6 பேர் மற்றும் பொது மக்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கலவரத்தில் காவல்துறையினர் நேரடியாக ஈடுபட்டதற்கான வீடியோ காட்சிகள் மீடியாக்களில் வெளியானதால் மஹாராஷ்டிரா அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

துலே போன்றே நாட்டின் பிற பகுதிகளில் வகுப்பு மோதல்கள் ஏற்படும்போதும், காவல்துறை ஒரு சார்பு பேக்கை வெளிப்ப டுத்தி வருகிறது என்பது சமூக ஆர்வலர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

மஹாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யான ஜாவீத் அஹமதிடம், “துலே கலவரத்தில் காவல்துறையின் ஒரு சார்பாக நடந்து கொண்டார்களா?'' என செய்தியாளர்கள் கேட்ட கேள் விக்கு,

“காவல் படையினர் பயன்பாடு என்பது ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் பார்க்கப்படும். காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தடியடி தாக்குதல் நடத்தினார்கள் என்ப தற்காக இந்த முடிவுக்கு (ஒரு பக்க சார்பு) வந்து விடக் கூடாது.

துலே சம்பவம் தொடர்பாக போலீசாரின் உணர்வுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்றால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.பொது மக்களின் சொத்துகளை போலீசார் சேதப்படுத்தினார்கள் என்ற விவகாரத்தை பொறுத்தவரை அதை நான் விசாரித்து,உள்துறை அமைச்ச கத்திடம் அறிக்கையை சமர்ப்பிப்பேன்...'' என தெரிவித்திருந் தார்.

மும்பையின் பிரபல சமூக ஆர்வலரான அவினாஷ் பாட்டில்,இரு சமூகத்திலும் இருக்கின்ற வன்முறையாளர்களை குற்றம் சுமத்தினாலும்,“காவல்துறை நிர் வாகத்தின் தோல்வியும் இக்கலவ ரத்திற்கு காரணம். நடந்த சம்ப வத்திற்கு காரணம் அற்பமான விஷயம். ஆனால் நீண்ட காலமாக துலே பகுதி பதட்டம் நிறை ந்ததாக இருந்து வரும் நிலையில், காவல்துறை இதை கண்டு கொள் ளத் தவறி விட்டது.

சூழ்நிலையை துவக்கத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை. இது போன்ற கலவரங்கள் நிகழும் பதட்டம் நிறைந்த பகுதிகளில் இரண்டு மதங்களையும் சேர்ந்த அறிவுசார் இளைஞர் குழுவினர் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

2008 துலே கலவரத்திற்கு பின் இதுபோன்ற முயற்சிகளை அரசு சாரா அமைப்புகள் சிலவற்றால் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் அவை நிலைபெறவில்லை.அரசியல் கட்சிகள் இதுபோன்ற முயற் சிகளை விரும்புவதில்லை...'' என் கிறார்.

பொதுவாக கலவரங்களின் போதும் வகுப்பு மோதல்களின் போதும் காவல்துறை பக்கச் சார் பில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை காவலர்களுக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.

இப்பயிற்சியை காவல்துறை மாவட்ட நிர்வாகங்கள் அவ்வப்போது அளிக்க வேண்டும்.அப் போதுதான் சின்ன பிரச்சினையாக இருக்கும்போதே அதை அலட்சியப்படுத்தும் காவல்து றையினரின் மனப் போக்கும் மாறும்!

Pin It