சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஐக்கிய முஸ்லிம் ஜ.மா அத்கமிட்டி சார்பில் 1992ம் வருடம் சிறுபான்மை மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த,அணு ஆராய்ச்சி கழகமான சி.ஐ.ஆர்.ஐ.யில் பணி புரிந்த விஞ்ஞானி அப்துல் காதிர் மற்றும் தற்போதைய ஐக்கிய ஜமாஅத் செயலாளர் கலீலுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரால் மஹ்பூப் பாளையம் பள்ளிவாசல் மதரஸாவில் ஆரம்பிக்கப்பட்டது ஆசாத் மெட்ரிகுரேலஷன் பள்ளி.

பின்னர் இட நெருக்கடி காரணமாக ஐக்கிய முஸ்லிம் ஜ.மா அத்துக்கு சொந்தமான ஈத்கா மைதானத்தில் மாற்றப்பட்டு விரி வுபடுத்தி இன்றுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2005ம் வருடம் காரைக் குடியைச் சேர்ந்த ஏ.ராஜா முஹம்மது ஹாஜியார் என்பவர் பள்ளியின் தாளாளர் என்ற பொறுப்பை தானே ஏற்படுத்திக் கொண்டு அப்போதைய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அப்துல் ஜப் பாரை பயன்படுத்தி ஈத்கா மைத னாத்தில் இருந்த 840 சதுர அடி தார்சு கட்டிடத்தை 30 வருடங்க ளுக்கு முன் குத்தகைக்கு எடுத்தும் மாத வாடகை ரூ. 500 என்றும் ஈத்கா திடலை பயன்படுத் திக்கொள்ள ரூ. 1000 மாத வாடகை என்றும் ஒப்பந்தம் செய்து மற்ற ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாம லும் தன்னிச்சையாக பத்திரப் பதிவு செய்துள்ளார்.

காலங்கள் பல கடந்த நிலை யில் தாளாளர் ஏ.ராஜா முஹம் மது ஹாஜியார் பள்ளியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு ஐக்கிய ஜ.மா அத்நிர்வாகத்திடமிருந்து கடந்த 15 வருடங்களாக சுமார் 15 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் இதுவரை இந்த பள்ளிக் கூடத்தின் வரவு செலவு கணக்குகளை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகத்திடமோ,பள்ளி நிர்வாகக் குழுவிடமோ தெரியப்படுத்தியதில்லை.இன்றுவரை முறையான நிர்வாகக் கழு கூட்டத்தையும் கூட்டவில்லை.

இந்த ஈத்கா மைதானம் சுமார் ஐயாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.ஆனால் தற்போது சுமார் 3 ஆயிரம் சதுர அடி மட்டும் பெருநாள் தொழுகைக்கு பயன்பாட்டில் உள்ளது. முஸ் லிம்கள் மிகவும் சிரமத்துடன் தொழுகையை நிறைவேற்றி வரு கின்றனர். இந்த பள்ளியில் 500க் கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கல்வி பயின்று வருகிறார்கள். 30 ஆசிரியர்கள் பணிபுரிகிறார் கள்.

தாளாளர் ஏ.ராஜா முஹம்மது ஹாஜியார் இந்தப் பள்ளியின் பெயரை பயன்படுத்தி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இ.எம்.எஸ்.சுதர்சன நாச்சியப்பனிடம் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 5 லட்சமும், காரைக்குடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் என். சுந்தரத்தி டம் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து சுமார் 2 லட்சம் பெற் றுள்ளார்.

இந்தப் பணமெல்லாம் என்ன வானது என்று ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளுக்கு இன்றுவரை தெரி யவில்லை.மேலும் காரைக்குடியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதாகக் கூறி வருடா வருடம் 25ஆயிரம் வீதம் இன்றுவரை சுமார் 20லட்ச ரூபாயை பெற்று பள்ளிக் கூட வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டுள்ளார்.

அரசியல் பிரமுகர்களுக்கு நோன்பு பெருநாள் காலங்களில் விருந்து வைப்பதும், அவர்களு டைய கட்சி,மாநாடு,பொதுக் கூட்டங்களுக்கு பள்ளி நிதியிலிருந்து நன்கொடை வழங்குவதும் என்று அவருடைய சுய ராஜ்ஜியம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இந்தப் பள்ளியின் சார்பில் ஆண்டு விழா மற்றும் பிற நிகழ்ச்சிகளில் முக்கியமான நீதியரசர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய செல்வாக்கை காட்டியதோடு, அவருக்குத் தெரியாமல் அவரு டைய பெயரை பயன்படுத்தி பல வழிகளில் பயனடைந்து ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளை இதன் மூலம் திகிலடைய வைத்துள்ளார்.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை அவர்களால் மீள முடியவில்லை.தன்னுடைய கைப் பாவைகளாக பழைய ஜ.மாஅத் நிர்வாகிகளை வைத்துக் கொண்டு அரசாட்சி செய்து வரு கிறார் ஹாஜியார்.

இதுபற்றி தற்போதைய ஐக்கிய ஜமாஅத் செயலாளரும் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவரு மான கலீலுர் ரஹ்மானிடம் கேட்டால்...

“இந்தப் பள்ளிக்கும் ஐக்கிய ஜமாஅத்துக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. என்னிடம யாரும் எதுவும் கேட்கக் கூடாது.மீறி கேட்டால் நானே தீர்மானம் போட்டு வெளியேற்றி விடுவேன்.நான் கூப்பிட்டால் வந்து கலந்து கொள்ள வேண்டும்.ஒரு சால்வை உங்களுக்குப் போர்த்துவேன்.அதைப் பெற்றுக் கொண்டு பேசாமல் சென்றுவிட வேண்டும்...'' என்கிறார் தடாலடியாக!

இவர் வருடந்தோறும் நடை பெறும் பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி சிறுவர் சிறுமிகளை அரை குறை ஆடையுடன் ஆட விட்டு சினிமா ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.கலாச்சார சீரழிவிற்கு வித்திடும் இந்த அநாகரீக செயலைக் கண்டு முஸ்லிம்கள் கொந்தளிப் படைந்துள்ளனர்.

அல்லாஹ்வின் சொத்துக்க ளைப் பராமரிக்கிறோம் என்ற பெயரில் பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இந்தப் பள்ளியையும் ஈத்கா மைதானத்தையும் நிர்வாகம் செய்வது யார்?என்ற பனிப் போரில் காரைக்குடி ஐக்கிய ஜமாஅத்தும் ராஜா முஹம் மது ஹாஜியாரும் களத்தில் இறங்கியுள்ளனர். காரைக்குடி முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த பனிப்போர் எப்போது முடி வுக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் இந்த ஈத்கா மைதானத்தின் எந்த விபர மும் தெரியாமல் இருக்கும் காரைக்குடி முஸ்லிம் மகா ஜனங்கள்.

Pin It