இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி - சேதுக்கரை சாலையில் உள்ளது மேலப்புதுக்குடி கிராமம். கடந்த 2 மாதங்களுக்கு முன் இவ்வூரில் திடீரென பரவிய மர்மக் காய்ச்சலால் 3 பேர் பலியாயினர்.

இந்த மர்மக் காய்ச்சல் மேலப்புதுக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர் மக்களிடையே பீதியை ஏற்படுத்த... மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றதைய டுத்து, மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து மர்மக் காய்ச்சல் பற்றி ஆய்வு மேற்கொண்டன.

ஆய்வின் முடிவில், மர்மக் காய்ச்சலுக்கு குடி தண் ணீர்தான் காரணம் என்பதைக் கண்டறிந்து, குடிநீர் தேக்கத் தெட்டியை நன்றாக சுத்தம் செய்து மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும் என சேதுக்கரை ஊராட்சி மன்றத் தலைவருக்கு உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.

நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் தருவதற்கு பதிலாக - தண்ணீரையே தராமல் தவிக்க விட்டுள்ளது ஊராட்சி நிர்வாகம்.

இதனால், மக்கள் குறைதீர்க்கும் நாளாக அறிவிக்கப் பட்டிருந்த 12-03-2012 அன்று மேலப்புதுக்குடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், “எங்களுக்கு குடி தண்ணீர் கிடைக்கவில்லை...'' என மாவட்ட ஆட்சிய ரிடம் புகார் அளித்துள்ளனர்.

நூறு சதவிகிதம் முஸ்லிம் மக்கள் வசிக்கும் மேலப் புதுக்குடியில் 4 மற்றும் 5வது வார்டுகளுக்கு நஸீர் உசேன், அப்சிரா பீவி என இரண்டு வார்டு மெம்பர்களும் உள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதில் முன் நின்று செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலப்புதுக்குடியில் இருக்கும் ஊராட்சி மன்றம் கட்டிடத்தில் மக்கள் குறைகேட்கும் நாளான 12ம் தேதியே ஊராட்சி மன்றக் கூட்டமும் நடந்துள்ளது.

இக் கூட்டத்தில், “மேலப்புதுக்குடிக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஊராட்சியில் ஊழல் நடக்கிறது; கணக்கு வழக்குகளைக் காட்டுங்கள்...'' என ஊராட்சித் தலைவரைப் பார்த்து வார்டு உறுப்பினர் நஸீர் உசேன் கேட்க... ஊராட்சித் தலைவர் முனியாண்டியோ, “நான் 11 வருஷமா தலைவரா இருக்கேன். யாரும் இதுவரை எங் கிட்ட கணக்கு கேட்டதில்லை. நீ எப்படி கேட்கலாம்...'' என்று கேட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தபடியே நஸீர் உசேனின் சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய... முனியாண்டியின் அடிபொடிகள் நஸீர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அடிவாங்கிய நஸீர் உசேன் அமைதியாக சென்று விட... இந்தத் தாக்குதலைக் கண்ட 5வது வார்டு பெண் உறுப்பினரான அப்சிரா பீவி ஊர் மக்களிடம் சொல்லி விட்டார்.

இதற்கிடையில் ஊர் மக்கள் திரண்டு சென்று கலெக்ட ரிடம் புகார் அளித்த செய்தி முனியாண்டிக்கு தெரிய வர... கோபத்தில் கொந்தளித்த அவர், சுமார் 15 பேர் கொண்ட அடியாட்கள் கும்பலை மேலப்புதுக்குடிக்குள் அனுபி நஸீர் உசேனை விட்டிற்குள் வைத்தே நையப் புடைந்துள்ளார்.

தாக்குதலைத் தடுக்க வந்த நஸீரின் அண்ணன் ஜஹாங்கீர் அலியை தலையில் தாக்கியுள்ளனர் முனியாண்டியின் ஆட்கள். அதோடு ஊர் பெண்களையும் ஆபாசமாக திட்டி விரட்டியடித்த அந்தக் கும்பல், அருகிலிருந்த பள்ளிவாசலுக்குள் செருப்புகளையும், கற்களையும் வீசியெறிந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் பிரச்சினை பற்றி புகார் அளிக்கச் சென்ற மக்கள் ஊருக்குள் திரும்பி வருவதைப் பார்த்த அடியாட்கள் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

ஊர் மக்களுக்கு தாக்குதல் குறித்த தகவல் பரவிய தும் கலவர பீதி அப்பகுதியை ஆக்கிரமித்தது. தலித் - முஸ்லிம் மோதலுக்கான சூழல் உருவானது. இந்நிலை யில் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அடிபட்டவர்களை இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில் துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், கீழக்கரை டி.எஸ்.பி. தலைமையில், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ. மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீ ஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது.

போலீஸ் படை உடனடியாக குவிக்கப்பட்டதால் கலவரம் தவிர்க்கப்பட்டது. இரு தரப்பிலும் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் இரு தரப்பும் எஃப்.ஐ.ஆர். போடும்படி காவல்துறையை வற்புறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தின் மாவட்ட நிர்வாகிகளான முஸம்மில், காஜா மற்றும் பெரியபட்டினம், காஞ்சிரங்குடி கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையை வற்புறுத்தினர்.

இதனையடுத்து ஊராட்சித் தலைவர் முனியாண்டி, சண்முக சுந்தரம் என தலித் சமூகத்தின் தரப்பிலும் முஸ்லிம்கள் தரப்பில் நஸீர் உசேன் மற்றும் ஜமாஅத் பொருளாளர் மீதும் காவல்துறைஎஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதால் மாவட்ட எஸ்.பி.யிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து சேதுக்கரை ஊராட்சித் தலைவர் முனியாண்டியும், அவரது கூட்டாளி யான சண்முக சுந்தரம் கைது செய்யப்பட்டனர்.

இன்னொருபுறம், தாக்குதலுக்குள்ளாகி இராமநாதபுரம் பொது மருத்துவமனையிலிருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நஸீர் உசே னையும் கைது செய்வதாக காவல்துறை அறிவித்தது.

இரு தரப்பிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட தால் மேலப்புதுக்குடியில் தற்போது அமைதி நிலவி வருகிறது.

வாரத்திற்கு ஒருமுறைதான் மேலப்புதுக்குடி கிராமத் திற்கு தண்ணீர் விடப்படுமாம். அப்படி வரும் தண்ணீ ரையே ஒரு வாரத்திற்கு பாதுகாத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாம் கிராம மக்கள் இதன் காரணமாகத் தான் மக்களுக்க காய்ச்சல் வந்திருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய பின்பும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த முனியாண்டியை சேதுக் கரை, மேலப்புதுக்குடி மக்கள் திட்டித் தீர்க்கின்றனர். இத்தனை களேபரங்களுக்கும் காரணமான குடி தண்ணீர் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட இரு தரப்பினரும் பெயில் பெற்று வெளியே வந்து விட்டனர். ஆனால் மக்களுக்குத்தான் குடிநீர் வந்தபாடில்லை.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் அம்மக்கள் ஆர்ப்பாட் டம் நடத்தவும் தயாராக இருக்கிறார்கள். 

டிஸ்சார்ஜுக்குப் பின்...

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நஸீர் உசேனே உடனடியாக டிஸ்சார்ஜ் ஆக வைத்து அவரை கைது செய்ய போலீஸ் தயாராகி வருகிறது என்ற தகவல் இராமநாதபுரம் மாவட்ட ஐஎன்டிஜே தலைவர் முஸம்மில் ஹாருக்கு கிடைத்தவுடன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட முஸம்மில், சிகிச்சை பெற்று வரும் ஒரு வரை கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் ஆக வைப்பதும் கைது செய்வதும் முறையல்ல... அவர் முழுமையாக சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனவுடன் கைது நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ள... அப்படியே செய்திருக்கிறது காவல் துறை.

Pin It