இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டி னத்தில் முஸ்லிம்கள் கனிசமாகவும், அதற்கு அரு கிலுள்ள வாலாந்தரவை, வழுதூர் ஆகிய பகுதிகளில் தேவர் சமுதாயத்தினர் கனிச மாகவும் வசித்து வருகின்ற னர்.

இவ்விரு சமுதாயத்தினருக்கு மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நிரந்தர பகை மைக்கு வித்திடும் முயற்சிகளை வாலாந்தரவை பகுதியில் இருக் கும் சமூக விரோத கும்பல் ஒன்று அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 6-02-2012 அன்று இரவு 7 மணிய ளவில் இராமநாதபுரத்திலிருந்து வாலாந்தரவை தடத்தில் செல் லும் அரசு பஸ்ஸில் பெரியபட்டி னத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆண் களும், பெண்களும் பயணித்த னர்.

பஸ், பாரதி நகர் ஸ்டாப்பில் நின்றதும் வழுதூரைச் சேர்ந்த மூர்த்தி, தனபால் மற்றும் சிலர் பஸ்ஸில் ஏறியிருக்கின்றனர். அவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காததால் இருக்கையில் அமர்ந்திருந்த உஸ்மான் அலி, சேகு நூர்தீன், சாகுல் ஹமீது, ஜாஹித் ஆகியோரைப் பார்த்து “எந்த ஊர்?'' என்று மூர்த்தியும், தனபாலும் கேட்க, “நாங்கள் பெரியபட்டினம்'' என்று அவர் கள் பதிலளித்துள்ளனர்.

உடனே, “நான் வந்திருக்கேன். மரியாதை இல்லாம உட்கார்ந்தி ருக்கீங்களா? எழுந்திருங்கடா துலுக்க பயலுகளா...'' என ஆரம் பித்து ஆபாச அர்ச்சனைகளை செய்த மூர்த்தியையும், தனபா லையும் கண்டித்துள்ளனர் பஸ்ஸில் இருந்த பெரியபட்டி னத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களும், பெரியவர்களும். அவர்களையும் ஆபாச அர்ச் சனை செய்த இருவரையும் கண் டக்டர் வந்து சமாதானப்படுத்தி யுள்ளார்.

இதற்கிடையில் மொபைல் மூலம் வழுதூரில் உள்ள தன் சகாக்களுக்கு சொல்லியிருக்கி றார் மூர்த்தி. பஸ் வழுதூர் ரயில்வே கேட்டைத் தாண்டிய தும் தெற்கு காட்டூர் என்ற இடத் தில் காத்திருந்த மூர்த்தியின் நண்பர்கள் 7 பேர் திமுதிமுவென பஸ்ஸிற்குள் ஏறி, “எவண்டா மூர்த்தியை திட்டியது...?'' என்று கேட்டுக் கொண்டே சாகுல் ஹமீது, உஸ்மான் அலி, ஜாவித் ஜமாமுல் ஆகியோரை தாக்கி விட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடி விட்டனர்.

இந்தக் காட்சியைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் இருந்துள் ளார் கண்டக்டர். இவர் மூர்த்தி யின் உறவினராம்.

பஸ் பெரியபட்டினம் வந்த தும் இறங்கிய தாக்குதலுக்கு உள் ளான முஸ்லிம் இளைஞர்கள் அங்கிருந்த முஸ்லிம்களிடம் கூற... அங்கேயே பஸ் சிறைப் பிடிக்கப்பட்டது.

பஸ் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த பெரியபட்டினம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியான பரீத், மாவட்டத் தலைவர் முஸம்மில் ஹாருக்கு தகவலை பாஸ் பண்ண... “போலீ சுக்கு தகவல் கொடுத்தீர்களா?'' எனக் கேட்டிருக்கிறார் முஸம் மில் ஹார். "இல்லை' என்று பதில் வரவே மாவட்ட எஸ்.பி. அலுவல கத்தை தொடர்பு கொண்ட அவர் விஷயத்தைக் கூறியுள்ளார்.

உடனடியாக திருப்புல்லாணி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் பெரியபட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் சிறைபி டிக்கப்பட்ட தகவல் அறிந்த பெரியபட்டினம்வாசிகள் அப்பகு தியில் திரள, பதட்டம் கூடியப டியே இருந்தது. இதற்கிடையில் பத்திரிகைகளுக்கும் முஸம்மில் ஹார் தகவல் தெரிவித்ததால் பத்தி ரிகையாளர்களும் அப்பகுதியில் வந்து பஸ் பயணிகளைச் சந்தித்து செய்திகளைத் திரட்டி தங்கள் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்தால் தான் பஸ்ஸை விடுவிப்போம் என அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் விடாப்பிடியாக இருக்க... வந்தி ருந்த கான்ஸ்டபிள்கள் இருவரும் சமாளிக்க முடியாமல் திணறினர். சம்பவம் நடந்து 2 மணி நேரமா கியும் உயர் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால்... மீண்டும் எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட முஸம்மில் ஹார், நிலைமையின் தீவிரத்தை எடுத்துச் சொன்னார்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஸ்பாட்டில் ஆஜரான கீழக்கரை டி.எஸ்.பி. முனியப்பனும், திருப் புல்லானி காவல் நிலைய இன்ஸ் பெக்டர் மணிமாறனும் பஸ்ஸை சிறைபிடித்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தாக்கிய வர்களைக் கைது செய்தால்தான் பஸ்ஸை விடுவிப்போம் என அவர் கள் உறுதிகாட்ட... கண்டிப்பாக கைது செய்கிறோம் என்று காவல் அதிகாரிகள் உறுதிமொழி அளித்த பின்னரே பஸ் விடுவிக்கப் பட்டது.

முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கியதாக மூர்த்தி மற்றும் தனபாலை இரவு 11 மணியளவில் கைது செய்த போலீஸார் இருவர் மீதும் பொது மக்களை அச்சுறுத் துதல், ஆபாசமாகத் திட்டுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று போராடிய இந் திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் முஸம்மில் ஹார், தொண்டரணி சித்தீக் மற்றும் பெரியபட்டினம் கிளை நிர்வாகி ஃபரீத் உள்ளிட்டவர்கள் தாக்குத லுக்குள்ளான முஸ்லிம் இளைஞர் களுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

பெரியபட்டினம் பொதுமக்க ளிடம் சம்பவம் குறித்து விசாரித்த நம்மிடம், “வாலாந்தரை, வழுதூர், பெரியபட்டினம் மக்களுக்கி டையே பகைமையை வளர்த்து விட மூர்த்தி, தனபால் உள்ளிட்ட ஒரு கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இருவரும் பலமுறை சிறை சென்றசமூக விரோதிகள். தேவர் சமுதாயத்திற் கும் எங்களுக்குமிடையில் நல்ல உறவு இருந்து வருகிறது. இதை கெடுக்கும் நோக்கில் அவ்வப் போது பஸ்ஸில் பயணிக்கும் முஸ் லிம்களைத் தாக்குவது தொடர் ந்து நடைபெற்று வருகிறது.

இரண்டு ஊர் மக்களையும் அழைத்து பலமுறை பேச்சுவார் த்தை நடத்தியுள்ளார் மாவட்ட கலெக்டர். ஆயினும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது...'' என்றனர் அவர்கள். இனி காவல்துறைதான் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். முஸ்லிம்களை வம்புக்கிழுத்து மதப்பதட்டத்தை உருவாக்க நினைக்கும் சக்திகளை இனங்கண்டு அடக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு!

Pin It