தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினராக உள்ள சாதிகளில் 30 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1998, 1999, 2000ஆம் ஆண்டுகளில் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அச்சாதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தினால் அவர்களுடைய கோரிக்கையைக் கவனிக்கும்படி, தமிழக முதல்வர் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை 25.6.2011 அன்று கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அச்சாதிகளைச் சேர்ந்தவர்களுடன் 2011 செப்டம்பர் 5, 6 தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக 2.9.2011 அன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவித்தது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துவிட்டால் இடஒதுக்கீட்டின் பயனை அடைந்து முன்னேற முடியும் என்று இச்சாதியினர் கனவு காண்கின்றனர். இதுபோன்ற மனநோய் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதியினரிடமும் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தோர் பட்டியலிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கும்படி கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இது அவலை நினைத்து உரலை இடிக்கும் கதைதான்.

பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் இணையத் துடிக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்களே! சற்று நின்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். உங்களுக்கென இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால் தான் கல்வியிலும் வேலைகளிலும் உங்களுக்கு தகுதியான அளவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறதா? அப்படியானால் மூன்று விழுக்காடு பார்ப்பனர்கள் 75 விழுக்காட்டிற்கு மேலாகவும், இடம்பெறுகிறார்களே! அது எப்படி முடிகிறது? அவர்கள் அனைவரும் தங்கள் திறமையின் அடிப்படையில் உயர்நிலைக்கு வந்திருக்கிறார்களா? அப்படி நினைப்பது இயற்கை நியதிக்கு முற்றிலும் விரோதமான சிந்தனையாகும். இயற்கையின் நியதிப்படி எந்த ஒரு குழுவில் உள்ளவர்கள் அனைவரும் அறிவாளிகளாகவோ அல்லது அனைவரும் அறிவிலிகளாகவோ இருக்க முடியாது. கீழ்மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலுமான அறிவுநிலையைக் கொண்டவர்கள் அனைத்துக் குழுவிலும் உண்டு. இது பார்ப்பனர்களுக்கும் பொருந்தும். மற்ற சாதியினருக்கும் பொருந்தும்.

ஆனால் உயர்நிலைப் பதவிகள் என்று வரும் பொழுது பார்ப்பனர்களே பெருமளவு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், நிச்சயமாக தகுதியும் திறமையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது புலனாகும். அறிவுத்திறன் குறைந்திருந்தாலும் பார்ப்பனர்களை உயர்நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்க வைக்கும் ஒரு விசை இந்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விசை மற்ற வகுப்பினரில் திறமைசாலிகள் இருந்தாலும், அவர்கள் உயர்நிலைகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது. இதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடந்தால் அப்பொழுது மற்ற வகுப்புகளிலிருந்து சிலர் உயர்நிலை ஆதிக்க வட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி உள்ளே நுழைபவர்கள் சொந்த வகுப்பு நலனுக்கு எதிராகவும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதரவாகவும் செயல்படும்படியாக மூளை வெளுப்பு செய்யப்படுகிறார்கள். மூளை வெளுப்பிற்கு மசியாதவர்கள் அடிமாடுகளாகப் பழிவாங்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் முற்பட்ட வகுப்பினராக இருக்கும் சாதியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்படுவதால் என்ன சாதிக்க முடியும்?

சரி! இடஒதுக்கீடு மூலம் ஏதாவது பலன் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தால் அதுவும் அவலை நினைத்து உரலை இடிக்கும் கதைதான். வி.பி.சிங் பிரதம மந்திரியாக இருந்தபோது தான் நடுவண் அரசில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பிருந்தே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு என்பது அமலில் இருக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டிய 18 விழுக்காடு என்னும் அளவு இதுவரையிலும் எட்டப்படவே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் 5 விழுக்காடு பணிகள் தான் அவர்களுக்குத் தரப்படுகின்றன. ஜெகஜீவன் ராம் இரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரது துறையில் 18 விழுக்காடு பணிகளைப் பெற்றுத்தரக் கடுமையாக முயன்றார். ஆனால் அவரால் 10 விழுக்காடு கூட பெற்றுத்தர முடியவில்லை. தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படாதது குறித்து இன்றும் கதறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இம்மியளவும் பலன் இல்லை. இந்திய அரசியல், சமூக, பொருளாதார, பொதுவாழ்வில் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனமான ஆதிக்கப் பிடிப்பு அவ்வளவு வலுவாக உள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகவே பார்ப்பனர்கள் ஏமாற்றி வருகிறார்கள் என்றால் இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மட்டும் அமல்படுத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இப்படி அமல்படுத்தப்படாத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காகப் போராட்டம் நடத்துவது என்ன பயனைத் தரும்?

அப்படி என்றால் பார்ப்பனரல்லாத முற்பட்ட வகுப்பினர், அவர்களுடைய முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை. இந்திய அரசியல், பொருளாதார, சமூக சூழல்களைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ள மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி இதற்கென ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. அதுதான் விகிதாசார ஒதுக்கீடு. முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், மதசிறுபான்மையினர் ஆகியோர், மக்கட் தொகையில் என்ன விகிதத்தில் உள்ளனரோ அதே விகிதத்தில் அரசில், பொருளாதார, சமூக நடவடிக்கைகள் அனைத்திலும், அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். திறமையற்ற பார்ப்பனர்களை உயர்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் பொதுப் போட்டி முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

இவ்வேற்பாட்டில் பார்ப்பனர்களால் வஞ்சிக்கப்படுவோம் என்று மற்ற முற்பட்ட வகுப்பினர் அஞ்சினால் அவர்களுக்குள்ளும் உள் ஒதுக்கீடு ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம். இதுதான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேரத் துடிக்கும் முற்பட்ட வகுப்புச் சாதியினர் மேற்கொள்ள வேண்டிய சரியான செயல் தந்திரமாக இருக்குமே ஒழிய, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேருவதால் எந்த நன்மையும் விளைந்துவிடாது. ஏனெனில் இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காடுதான் என்று அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நோக்கங்களுக்கு நேர் எதிரான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் மேலும் சாதிகளைச் சேர்ப்பதானது, ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிளவையும் மோதலையும் தான் உருவாக்கும்.

ஆகவே, இக்கேடான தீர்ப்பைச் செல்லாததாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எந்த ஒரு வாக்கு வேட்டை அரசியல் கட்சியும் முனையவில்லை. அப்படிச் செய்வது பார்ப்பனர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், பார்ப்பனர்களின் கோபத்திற்கு ஆளானால் அதிகாரத்திற்கு வரும்பொழுது எச்சில் இலையைப் பொறுக்கித் தின்னும் சுகம் கூட கிட்டாமல் போய்விடும் என்றும் அவை அஞ்சுகின்றன. வாக்கு வேட்டை அரசியலில் கலவாத இயக்கங்களும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காவு வாங்காமல் புரட்சியை நடத்த முடியாது என்று உணருவதில்லை. பாரிஸ் கம்யூன் வீழ்ந்ததற்கு முக்கிய காரணம் அரசுப் பொறியமைவு மாறாத நிலையில் புரட்சி நடைபெற்றதுதான். அதேபோல் இந்தியாவிலும் பார்ப்பன ஆதிக்க அரசுப் பொறியமைவைக் காவு வாங்காமல் புரட்சியை முன்னெடுத்தால் பாரிஸ் கம்யூனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஏற்படும் என்பதை அவ்வியக்கங்கள் உணர மறுக்கின்றன. ஒரு வேளை அவ்வியக்கங்களில் ஊடுருவியுள்ள பார்ப்பனர்கள் மற்றவர்களை மூளை வெளுப்பு செய்து வைத்திருக்கலாம்.

அப்படி என்றால் மக்கள் என்னதான் செய்ய வேண்டும்? ஆளும்வர்க்கம் நம்மை அனைத்து விதங்களிலும் விலங்குகளால் பிணைத்து வைத்திருந்தாலும் நம் சிந்தனைகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. நம் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் நம்மிடையே விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்க முடியும்.

ஏற்கெனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போல் அனைத்து நிலையிலும் அறிவுத்திறன் கொண்டோர் அனைத்து வகுப்பினரிலும் உண்டு. பார்ப்பனரிலும் அறிவுத்திறன் குறைந்தோர் உண்டு என்பது அவர்கள் புனிதமானது என்று தலையில் வைத்து கூத்தாடும் பகவத் கீதை, மனு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி போன்ற நூல்களில் ஒப்புதல் வாக்குமூலங்களாக உள்ளன. நம் அனுபவத்திலும் தெளிவாக அதை உணர முடியும். ஆனால் அப்படிப்பட்ட திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளையே செய்கின்றனர். இவ்வாறு திறமை குறைவான பார்ப்பனர்கள் செய்ய வேண்டிய கீழ்நிலை வேலைகளிலிருந்து தப்பிவிடுவதால் ஏற்படும் காலியிடங்களைத் திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட மக்கள் செய்ய வேண்டியுள்ளது.

இது கொடுமை என்றும், பார்ப்பனர்களில் உள்ள திறமை குறைவானவர்களை அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த உடல் உழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பவிடக் கூடாது என்ற கருத்தை நீங்கள் கொள்வதை எந்த அதிகாரமும் தடுத்துவிட முடியாது. அத்துடன் திறமை குறைவான பார்ப்பனர்களைக் கீழ்நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப உடந்தையாக இருக்கும் மற்ற பார்ப்பனர்கள் நிர்வாகத்தைச் சீரழிக்க அடிகோலும் தேசத் துரோகிகள் என்று நீங்கள் நினைப்பதையும் மற்றவர்களை நினைக்க வைப்பதையும் எந்த அதிகாரமும் தடுத்துவிடமுடியாது.

இச்சிந்தனைகளை வளர்த்தெடுத்து, திறமை குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த வேலைகளில் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும் என்றும், இதற்கு ஒத்துழைக்காத பார்ப்பனர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் என்றும் அவர்கள் உயர்நிலை வேலைகளுக்கு அனுமதிக்கப்படவே கூடாது என்றும் விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்துவதற்குச் சிந்தனையைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் தேவையில்லை. ஆகவே முதலில் இத்திசையில் சிந்திக்க ஆரம்பியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பார்ப்பனர்கள் சட்டச் சிக்கல் என்றும் வேறு எதுவும் சொல்லி மாய்மாலம் செய்தாலும் இந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மற்ற எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள வேண்டுமே ஒழிய தேசத் துரோகச் செயல்களைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று உறுதியுடன் கூறுங்கள். இப்படிச் செய்வதற்கு நாம் எந்தவிதத் தியாகமும் செய்யத் தேவையில்லை.

விழிப்புணர்வும் பொதுக்கருத்தும் இத்திசையில் உருவானால் அதை வெல்ல யாராலும் முடியாது. அந்நிலையில் பார்ப்பனர்கள் இப்போது அயோக்கியத்தனமாக அபகரித்துக் கொண்டிருக்கும் அளவு பெற முடியாமல் அவர்களுக்கு உரிய பங்கை மட்டுமே பெற முடியும். நாம் நம்முடைய பங்கைப் பெறுவோம். அப்பொழுது நம்மிடையே மோதல்கள் இருக்காது.

பார்ப்பனர்கள் அயோக்கியத்தனமாக அபகரித்துக் கொள்ள வழிவகுக்கும் பொதுப்போட்டி முறைக்கு எதிரான விழிப்புணர்வையும், பொதுக்கருத்தையும் நாம் ஏற்படுத்தப் போகிறோமா? அல்லது அந்தப் பட்டியலில் அல்லது இந்தப் பட்டியலில் சேர்க்கும்படி கூறி அவலை நினைத்து உரலை இடித்துக் கொண்டு இருக்கப் போகிறோமா?

Pin It